என்னுடைய பள்ளி காலங்கள்; வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை பற்றிய என்னுடைய நினைவுகள். 1974 களில் என்னுடைய பள்ளி காலத்தில் பெரும்பாலான பாடக்கொப்பிகள் பாடப்புத்தகங்கள் மட்டக்களப்பு வாழைச்சேனை காகித தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட காகிதத்தில் அச்சிடப்பட்டது.
வாழைச்சேனை காகித தொழிற்சாலை, இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதல் காகித தொழிற்சாலை ஆகும். இது 1956 இல் ஆரம்பிக்கப்பட்டது. 1976/74ஆம் ஆண்டு ஜெர்மன் தொழில்நுட்பத்தில் நவீன இயந்திரங்களும் பாவனையில் இருந்தன. சுமார் 2000 க்கும் மேற்பட்ட பணியாட்கள் அங்கு பணியாற்றினார்கள். இலங்கை அரசுக்கு நல்ல வருவாயை ஈட்டித் தந்த ஒரு தொழிற்சாலை.
இலங்கையிலுள்ள 25 மாவட்ட பிரிவுகளில் ஒன்றான மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் 128 ஊர்களில் இந்த வாழைச்சேனையும் ஒன்று. இங்குள்ள ஊர்களின் பெயர்களின் இறுதியில் "பற்று " என்ற வார்த்தையை இனைத்திருப்பார்கள். பற்று என்றால் பிரிவு, பற்றிய இடம் என்று பல அர்த்தங்களை கொடுக்கின்றது இருப்பினும், தங்கள் தாய் மண் மீது பற்று உள்ளவர்கள் என்ற அர்த்தத்தில் இதை எடுத்துக் கொள்ளலாம்.
எனக்கு 15 வயது இருக்கும். நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது, தொழில்நுட்ப அறிவியல் கற்றுக் கொள்வதற்காக யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடி பள்ளிக்கு/வீட்டுக்கு அருகாமையில் உள்ள மில்க் வைட் சோப்பு தொழிற்சாலை சென்று பார்தோம்.
கூடுதல் தகவலாக: இங்கு மிருக கொழுப்பு இல்லாத சோப்புகளை தயாரித்தார்கள் மற்றும் பசுமை புரட்சி வீட்டுக்கு ஒரு மரம் வைப்போம், வீட்டுக்கு ஒரு கழிப்பறை கட்டுவோம் என்ற கோஷங்கள் இங்கிருந்து முதன் முதலில் எழுப்பப்பட்டது. நான் அதில் பங்கேற்றேன் என்று நினைக்கும் போது இன்று எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. நான் நேரில் பார்த்த பல விஷயங்களை இதில் எழுதமுடியாது அது அவ்வளவு நாகரீகமாக இருக்காது, அது வரலாற்றில் இல்லாது போகட்டும் [...]
மேலும் உப்பளம் உப்பு தொழிற்சாலை, காங்கேசன்துறை சிமெண்ட் தொழிற்சாலை, ஐஸ்கிரீம் தயாரிப்பு மற்றும் வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலைக்கு பள்ளி சுற்றுலா சென்றேன் அங்கு அவர்கள் காகிதங்கள் எப்படி தயார் செய்வது என்று கற்றுத் தந்தார்கள். எந்த மூலப் பொருட்களை அவர்கள் பயன்படுத்தினார்கள் என்ற விபரங்கள் எல்லாம் சேகரித்து நான் ஒரு கட்டுரை எழுதினேன் அதற்கு பள்ளி வளாகத்தில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
உலகில் முதல் முதலில் காகித உற்பத்தியில் சீனர்கள் தான் முன்னோடிகள், எங்களுக்கு பல நூற்றாண்டுக்கு முன்பே காயிதம் தயாரிக்கும் அறிவை அவர்கள் பெற்றிருந்தார்கள். அங்கு வாணிபம் செய்வதற்காக வந்திறங்கிய அரேபியர்கள் இந்த அற்புதமான தொழில்நுட்பத்தை ஐரோப்பா இந்தியா, இலங்கைக்கு எடுத்துச் சென்றார்கள். இது அரேபியர்களுக்கு ஒரு பெருமையை சேர்க்கின்றது.
அரேபியர்களுடைய வாணிபம், இன்று நாங்கள் பயன்படுத்தும் எழுத்துருக்கள், இலக்கங்கள், இலக்கியங்கள், குதிரைகள் உட்பட பல தொழில்நுட்ப ரகசியங்களை மற்ற இடங்களுக்கு, இங்கிருந்து அங்குமாகவும் அங்கிருந்து இங்குமாகவும் எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் காயிதங்கள் கைத்தொழிலாகத் தான் இருந்தது. காகிதம் தயாரிப்பதற்கான முக்கியமான அடிப்படை மூலப்பொருள் வயல்களில் இருந்து பெறப்பட்ட வைக்கோல் மற்றும் நெசவு, ஆடைகள் தயாரிப்புகளில் எஞ்சிய துணிகள் மற்றும் பழைய ஆடைகள் துணிகள் பயன்படுத்தப்பட்டிருந்தது. பிற்காலத்தில் எஞ்சிய மரக்கூறுகள் மரகூழ்மங்கள் பயன்படுத்தப்பட்டது. இந்த வரிகளை அன்றும் நான் எழுதி இருந்தேன் இது எனது நினைவில் நின்றவை.
இலங்கை மட்டக்களப்பு கல்லடியில், மீன் பாடும் தேனாடு, மட்டக்களப்பில் திருச்செந்தூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயம். மிகவும் சிறப்பு மிக்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோயில். மட்டக்களப்பு பெரும்பாலும் முருகனுக்குரிய ஆலயங்களும் ஆறுபடை வீடுகளின் பெயர்கள் இங்கு ஊர்களின் பெயர்களாக அமைய பெற்றிருப்பது இந்த ஊருக்கான விசேஷம்.
தவறான நோயறிதல். நோய்களைப் பற்றிய தவறான புரிதல், இதன் நிமித்தம் பார்க்கப்படும் மருத்துவம் ஒருவரை மரணத்துக்குள்ளே தள்ளி விடுவதாகும். நோய்களினால் இறந்தவர்களை காட்டிலும் தவறான மருத்துவத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்
http://mahesva.blogspot.com/?view=magazine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக