தாய் மொழிக் கல்வி மகத்தானது: தவறான கல்வியும், வாங்கிய பட்டமும் ஏட்டுச் சுரைக்காய் போன்றது எதுக்குமே உதவாது. தாய்மொழிக் கல்வி அடுத்த தலைமுறையையும் தாண்டி பிறந்த செழிப்போடு வரும். பிற மொழியில் கல்வி, விளங்கியும் விளங்காமலும் நீங்கள் கடந்து வருவீர்கள்.
தமிழ் மொழி உலக மொழியானது. என்னுடைய கட்டுரைகளை பல மொழிகளில். மராட்டி தெலுங்கு மலையாளம், ஹிந்தி தேசிய மொழிகள் . நேபாளம். மொரிசிஸ் இந்தோ சீனா. அரபு பாரசீக மொழிகள் என்று 60 மொழிகளுக்கு மேல் மொழிபெயர்ப்பு செய்து படிக்கிறார்கள். தமிழர்களுக்கு மட்டும் தான் தமிழ் கசக்கின்றது.
சிறிதாக கற்றாலும் அதையும் விளங்கி படி, ஏதாவது ஒன்றை படிக்காமல் உன்னால் அடுத்த தலைமுறையை அவ்வளவு எளிதாக கடந்து விட முடியாது. நாளைய உலகம் அதி வேகமானது அதில் பயணிக்க உன்னை தகுதி உள்ளவனாக்கு, சேர்க்கை அறிவியல் நவீன தொழில்நுட்பம் தானியக சாதனங்கள் மற்றும் நிறுவனங்களின் தானியங்கி கருவிகளை சமாளிப்பதற்கு நவீன அறிவியல் தேவை.
வங்கி கணக்கு, சூப்பர் மார்க்கெட் மளிகை பொருட்கள் வாங்குவது தொடங்கி பொது போக்குவரத்து விமான சேவை வரையும் பாதிக்கு மேல் தானியக்க சேவைக்கு வந்துவிட்டன.
விமான நிலைய இயந்திரத்தில் பாஸ்போர்ட்டை கொடுத்தால், அது ஏன்டா, புட்றூள் மட்டையை முழுங்கின மாதிரி முழிக்கிறாய் உன் பேரை எழுது பின்னால் மற்ற பயணிகள் வருகிறார்கள் விரைவாக செய் என்று மிரட்டுகின்றது. சற்று தாமதித்தால் அது மூடிவிடுகின்றது. அது எங்களை உதவியாளர் வரும் வரைக்கும் காத்திருக்க வைக்கின்றது.
இந்த உலகம் எவ்வளவு விரைவாக பயணிக்கின்றது, நின்று நிதானமாக கூட எங்களால் சிந்திக்க கூட முடியவில்லை. அதற்குள்ளே நாங்கள் பயணிக்கும் வருடம் முடிந்து விடுகின்றது. இந்த உலகம் உனக்கான கல்வியை தந்திருக்கின்றது நீ படிக்காமல் விட்டால் அது உன்னுடைய தவறு.
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்
http://mahesva.blogspot.com/?view=magazine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக