ஆரோக்கியமான முதுமையை வென்றெடுங்கள்: ஆரோக்கியமாக உங்கள் முதுமையை வென்றெடுங்கள். அழகான ஆரோக்கியமான முதுமையை நீங்கள் சென்றடைவதற்கு, உங்கள் இரத்த மதிப்புகள், நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வீர்களா என்பதைக் குறிக்கின்றது.
மரணம் என்பது இயற்கையானது அது பாதியில் முடிந்து விடக்கூடாது. அல்லது மருந்து மாத்திரை சிகிச்சைகள் என்று நடை பிணமாக இறுதி காலத்தை கடக்க கூடாது. இரத்த மதிப்புகள் நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பதை நேரடியாகக் கூறாமல் விட்டாலும் அது உங்கள் இதயத்தின் அழுகுரலை கேட்டு, உங்களுக்கு ஒரு குறி சொல்லுகின்றது.
மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட இரத்த முடிவுகள் நீண்ட ஆயுளைப் பாதிக்கக்கூடிய உடலில் ஏற்படக்கூடிய அழற்சி மற்றும் நோய்களுக்கான முக்கியமான குறிப்பான்களாகும்.
கிட்டத்தட்ட எல்லா நோய்களும் உடலில் தடயங்களை விட்டுச் செல்கின்றன. ஆய்வக சோதனைகளின் உதவியுடன் இரத்த மாதிரியை எடுத்து, சில நோய்களைப் பற்றிய தகவல்களைப் பெற முடியும். இவை என்ன இரத்த மதிப்புகள்.
முக்கியமான ஆய்வக மதிப்புகள்: இரத்த சர்க்கரை, இரத்த கொழுப்பு , கல்லீரல், சிறுநீரகங்கள்,தைராய்டு சுரப்பி இதயம் மதிப்புகள் மற்றும் அழற்சி குறிப்பான்கள்.
கல்லீரல் மதிப்புகள், கிரியேட்டினின் மதிப்புகள், இரத்தம் அல்லது பிற உடல் திரவங்களின் ஆய்வக சோதனைகள் மூலம், மருத்துவர் ஒரு குறிப்பிட்ட நோயறிதலை உறுதிப்படுத்தலாம்.
நோய் அறிதலை முதன்மைப்படுத்தும் ஒரு சில அறிகுறிகள். இரத்தச் சுற்று கோளாறு அதாவது, ஒருவருடைய இரத்தச் சுற்றோட்டம் சரியாக அமையவில்லை என்றால் ஞாபக மறதி, மண்டையில் முடி உதிர்வு, உயர் ரத்த அழுத்தம் கவனிக்கப்பட வேண்டியவை. உடல் உபாதைகள் குறட்டை, இருமல் மற்றும் முனகல் ஆகியவை தூக்கமில்லாத இரவுகளை உங்களுக்கு ஏற்படுத்துகின்றன.
சம்பந்தப்பட்ட நபர் கவனிக்காத உடல் மாற்றங்களை அடையாளம் காணலாம். காரணம், மனித வளர்சிதை மாற்றம் அதன் வழக்கமான முறையைப் பின்பற்றவில்லை என்றால், பொருட்கள், செல்கள் மற்றும் கழிவுப் பொருட்கள் அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். குறிப்பாக இரத்தம் பல நோய்களில் அதன் கலவையை மாற்றும். ஆனால் சிறுநீர், மலம் அல்லது திசு மாதிரிகள் நோயாளியின் உடல்நிலை பற்றிய முக்கியமான தகவலை ஒரு மருத்துவருக்கு வழங்கலாம்.
உடல் மற்றும் மன பயிற்சி: உங்கள் வீட்டு வேலையை செய்வதை குறைவாக மதிப்பிடாதீர்கள். மளிகை பொருட்கள் வாங்குவது அதை சமையலறை அலமாரியில் கலை ரஞ்சிதமாக [ஒரு ஆர்ட்] அடுக்கி வைப்பது. வீட்டை அலங்கரிப்பது, சுத்தமாக வைத்திருத்தல் என்று எதிலும் ஒரு கலை இருக்கட்டும், சமைப்பது அல்லது சமையல் வேலைக்கு உதவி செய்வது. பூச்செடிகள் வளர்ப்பது எவ்வளவு ஆரோக்கியமானது.
வழக்கமான உடற்பயிற்சி உடலுக்கும் ஆன்மாவிற்கும் நல்லது மற்றும் உங்கள் உடலை புதுப்பிக்க சிறந்த வழியாகும். வயதான காலத்தில் மூளையின் செயல்திறன் கூட மென்மையான உடற்பயிற்சியால் நல்ல சாதகமாக பலன்களை தருகின்றது.
மூளை பயிற்சியை குறைத்து மதிப்பிடாதீர்கள் உங்கள் மூளைக்கு நீங்கள் சவால் விடவில்லை என்றால், அது துருப்பிடித்து மக்கு பத்தி போகும். சொன்னால் நம்புவீர்களா எனக்கு 65 வயதை கடந்தும் எனது மூளை இன்னும் சிறு பிள்ளைத்தனமாக கற்றுக் கொள்ளவே விரும்புகின்றது.
அது ஏதாவது ஒரு செய்தியை எனக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றது. அதை நான் தட்டி கழிக்கும் போது அது என்னை ஆத்திரம் ஊட்டுகின்றது. மனித மூளை இந்த பூமியை பற்றி ஆராய்வதற்காக வந்து இறங்கியவர்களின் வழித்தோன்றலாக இருக்கின்றது என்பதை அதனுடைய நடவடிக்கைகள் மெய்ப்பித்துக் காட்டி இருக்கின்றது.
உடல் மற்றும் மன விளையாட்டு ஆக்கப்பூர்வமான பொழுது போக்குகள், இசை, ஆடல் பாடல், இசைக்கருவிகளை இசைப்பது, பாடல்களை ரசிப்பது, புதிர்கள், ஆன்லைன் விளையாட்டு, கணக்கு கேள்வி பதில்களுக்கு விடை அளிப்பது, புதிய மொழியைப் படிப்பது அல்லது கற்றுக்கொள்வது, உங்களுக்குத் தெரிந்த உலக நிகழ்வுகளை பற்றி எழுதுவது மூளையை எப்பவும் இளமையாக வைத்திருக்கும்.
குடும்பம் அல்லது நண்பர்கள், சமூக தொடர்பு கொண்டவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள். ஏனென்றால் மற்றவர்களுடனான பரிமாற்றம் ஆன்மாவில் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கின்றது.
தங்களைச் சுற்றி எப்பவும் சிறு கூட்டத்துடன் இருப்பவர்களைக் காட்டிலும் தனிமையில் இருப்பவர்கள் அதிக மன அழுத்தத்தைக் கொண்டுள்ளனர். இந்த மன அழுத்தம் எதிர்மறையான உடல்நல விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
தனிமை மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு தீராத நோய்களை ஏற்படுத்தும் . எனவே, கூட்டுக் குடும்பம் ஆரோக்கியமானது. கிழமையில் ஒரு நாள் உங்கள் அன்புக்குரியவர்களை அழைத்து ஒரு கோப்பை தேநீர் பருகுவதற்கு சந்திக்கவும். ஏனென்றால் அது ஆன்மாவுக்கு மட்டுமல்ல, உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
எப்ப பார்த்தாலும் தர்க்கம் , சண்டை செய்யும் மனிதர்களிடமிருந்து விலகி இருங்கள். நல்ல அறிவு சார் மனிதர்களுடன் தொடர்புகளை வைத்துக்கொள்ளுங்கள் ஏனென்றால் அவர்களிடம் இருந்து சில நல்ல குறிப்புகள் தகவல்கள் உங்களுக்கு கிடைக்கலாம்.
உங்கள் உணவைப் பொறுத்தவரை நீங்கள் விரும்பி உண்ணும் உணவு அது தான் உங்களுக்கு ஆரோக்கியமான உணவாக இருக்கும். அது இட்லியாக இருக்கட்டும் அல்லது பிரியாணியாக இருக்கட்டும். பசிக்காமல் எதையும் உண்ணாதீர்கள். உங்கள் மனம் எதை ஏற்றுக் கொள்கிறதோ அதுதான் உங்களுக்கு ஆரோக்கியமான உணவாக இருக்கும்.
அந்த உணவுதான் நல்ல செரிமானமும் அடையும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நான் முழு வளர்ச்சி பெற்ற ஒரு மனிதன் என்னுடைய வளர்ச்சி குன்றி முதிர்ச்சி அடைந்து உதிரும் பருவத்தில் நான் இருக்கின்றேன் எனக்கு அவ்வளவாக உணவின் தேவை இருக்காது.
இருப்பினும் சில முக்கியமான விற்றமின்கள் ஊட்டச்சத்துக்கள் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். மேற்கோளாக: புரதம், நார்ச்சத்து இரும்பு துத்தநாகம் விற்றமின் பி காம்ப்ளக்ஸ் விற்றமின் சி, விற்றமின் டி 3 அத்துடன் சூரிய ஒளி தூய்மையான காற்று அமைதியான தூக்கம் மிகவும் முக்கியமானது. இந்த நடவடிக்கைகள் உங்கள் ஆரோக்கியமான முதுமையை வென்றெடுக்க உதவும்.
முதிர்வயது ஞாபக மறதி: ஒரு சிலருக்கு மூளை ஒரு விஷயத்தை மட்டும் தட்டிவிடுதல், இது மற்றவர்களின் பார்வையில் பைத்தியமாக தெரியலாம். அல்சைமர் நோய் [முதுமையின் டிமென்ஷியா.] இதுவொரு முதிர்வயது ஞாபக மறதி நோய். இது மூளையில் உள்ள நரம்பு செல்கள் செயலிழந்து நரம்பு செல்களின் அழிவு அதிகரிக்க வழிவகுக்கின்றது
இது நோயாளியின் திறன்கள் ஒரு வரம்புக்குள்ளே சுருக்கப்படுகின்றது. இதன் நிமித்தம் நோயாளி தன்னுடைய முகம் முகவரியைக் கூட மறந்து போகலாம். அவரின் வாழ்க்கை எதிர்பார்ப்புகளை 95 விழுக்காடுகள் இழந்து போகின்றார்கள்.
இதற்கான சரியான காரணங்கள் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை. அல்சைமர் டிமென்ஷியாவின் பொதுவான காரணங்கள் நரம்பு செல்களுக்கு உள்ளேயும் வெளியேயும் படிந்திருக்கும் மாற்றப்பட்ட புரதங்கள்.[படிவுகள்] இது நரம்பு செல்கள் ஒன்றையொன்று தொடர்பு கொள்ள அனுமதிப்பதில்லை. இதன் நிமித்தம் நரம்பு கடத்திகள் தகவலை சரியாக அனுப்ப முடியாது, இறக்கவும் கூட செய்கின்றது.
"ஆரோக்கியமான முதுமை, மகிழ்ச்சியான இறுதி வாழ்க்கைக்கு வழிவகுக்கும்."
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக