வெள்ளரிக்காய் சாலட்: தேவையான கூட்டு பொருட்கள் பெப்பரோனிபச்சை மிளகாய் சிகப்பு வெங்காயம் மற்றும் ஃபெட்டா சீஸ் அல்லதுபாலாடைக்கட்டி [பனீர்] பச்சை ஆலிவ் சிறு சதுர துண்டுகளாக நறுக்கி.
சுவைக்க: ஆப்பிள் வினிகர் ஆலிவ் எண்ணெய் உப்பு மற்றும் மிளகு சிறிதுசர்க்கரை, வாசனைக்காக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து,பக்கோடா பன் அல்லது ரொட்டியுடன் பரிமாறவும். இது ஒரு கிழமைக்குமேல் குளிர்சாதன பெட்டியில் கெட்டுப் போகாமல் இருக்கும்.
வலி உணர்வுகள்; கடல் வாழ் உயிரினங்கள் கணவாய், நண்டு, இறால் மீன் நத்தை போன்ற உயிரினங்களுக்கு வலி உணர்வுகள் இருக்கா, மீனை வெட்டினால் மீனுக்கு வலிக்குமா ? வெட்டும் போது அது துடிக்கின்றதே ! அப்ப அதுக்கு வலிக்காமலேயா துடிக்கின்றது !. பொதுவாக வலியை உணரும் பகுதி மூளையில் எந்த இடத்திலுள்ளது.
மனிதர்களைப் போலவே மீன்களும் முதுகெலும்புகளின் குழுமத்தை சேர்ந்தவை. அவை உடற்கூறியல் ரீதியாக அதே மூளை அமைப்பைக் கொண்டுள்ளன, இருப்பினும் அவற்றின் நரம்பு மண்டலம் மிகச் சிறியது.
மனிதர்கள் வலி உணர்வை பிரதிபலிக்கின்றார்கள் அதாவது கத்தி கூச்சல் போட்டு வலியை மற்றவருக்கு சொல்லுகிறார்கள் மீன்கள் அப்படி கத்தி கூச்சல் போடுவது கிடையாது. அதனால் அவற்றின் கூக் குரலை உங்களால் கேட்க முடியாது. நீங்கள் அதை மிகவும் ஒரு தத்துவக் கண்ணோட்டத்தில் பார்த்தால், அவைகள் துடிக்கும் வேதனையை பார்க்க முடியும்.
மீன்களுக்கு வலி ஏற்பிகள் உள்ளன, அவை ஒரு பொதுவான சிக்கலான வலி நடத்தையைக் காட்டுகின்றன, எனவே அவை வலியை உணர்கின்றன என்று கருதுவது நியாயமானது. அவை நீரின் வெப்பநிலை பசி உணர்வு பாச உணர்வு மற்றும் இனப்பெருக்க உணர்வுகளை கொண்டுள்ளது.
சாராம்சம்: வலி உணர்வுகள் கொண்ட உயிரினத்தில் மனிதன் முதல் இடத்தில் இருக்கின்றான். மூளை தன்னுடைய சொந்த வலியை உணர்வதில்லை, சக உறுப்புகள் அடிபடும் போது அதன் வலியை மட்டுமே உணர்த்தும் திறன் கொண்டது. வலியை உணர்த்தும் திறன் கொண்டதாக பெருமூளை இருக்கின்றது.
பெருமூளை இல்லாத உயிரினங்கள் வலியை உணர்வதில்லை. மூளை பெரும்பாலும் எல்லா இயக்கங்களுக்கும் அவசியமில்லாத ஒன்று அவை ஒரு குறிப்பிட்ட இயக்கங்களுக்கு மட்டுமே பதிலளிக்கின்றன, மேற்கோளாக: பார்வை, கேட்கும் திறன் சுவை, வாசனை வர்ணங்களை உணர்தல், நினைவகம் போன்ற ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துகின்றன.
மற்ற சில இயக்கங்களுக்கு மூளை அவசியமற்றது மூளை இல்லாமல் கூட இயங்கும்.இவைகள் தானியக்க மோட்டார் இயக்கவியல் மூலம் இயங்கக்கூடியது.மேற்கோளாக: மீன் , பாம்புகளின் தலையை வெட்டினால் கூட அவைகள் சற்று நேரம் துடிக்கும்.
மனிதர்களுக்கு கூட தானியக்க இயக்கவியல் மூலம் இயங்கக்கூடிய செயற்பாடுகள் பல உண்டு. மேற்கோளாக: கண்ணிமைப்பது, இருமல், கொட்டாவி விடுதல், சுவாசித்தல், உணவை முழுங்குதல், கொசு/நுளம்பு கடித்தால் கைகள் அந்த இடத்தை தேடி அடிப்பது போன்ற பல இயக்கங்களுக்கு மூளை அவசியமற்றது. பெரும்பாலும் பெருமூளை இல்லாத உயிரினங்கள் அதிகமாக வலியை உணர்வதில்லை.
மீன் மூளையில் மனித/பாலூட்டிகளில் உள்ள மூட்டு அமைப்புக்கு இசைய, செயல்பாடுகளைக் கொண்ட இறுதி மூளையின் மேற்பரப்பில் கட்டமைப்புகள் உள்ளன. பாலூட்டிகளில், இந்த உணர்ச்சி மையம் மற்றவற்றுடன், தகவலின் உணர்ச்சி மதிப்பீடு, நினைவக உருவாக்கம் மற்றும் கற்றல் செயல்முறைகளில் ஈடுபட்டுள்ளது. ஆ..ஆ ஆ என்னை விடுடா வலிக்குது.
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்
http://mahesva.blogspot.com/?view=magazine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக