கல்கியும்…... குருஷேத்திர யுத்தமும்: முதலாவது உலக மகாயுத்தம் ஆஸ்திரியா நாட்டுப் இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாண்டும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது [1914 ஜுன் 28] சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது முதல் உலகப்போருக்கு காரணமாயிற்று. இதை தொடர்ந்து வந்தது இரண்டாவது உலக மகாயுத்தம். இவர்களுக்கும் ஜப்பானில் அணுக்குண்டுக்கு தீக்கிரையானவர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும், சனிப் பிணம் தனியாகப் போகாதா…..? இந்த இரண்டு யுத்தங்களுக்கு காரணங்கள் மிகச்சிறியது.
மகா விஷ்ணு, துவாபர யுகத்தில், இந்த குருஷேத்திர யுத்தத்தை நடத்த என்னென்ன தில்லு முல்லு, பொய் புரட்டு, இன்னும் எத்தனை நாடகமாடி அந்த யுத்தத்தை நடத்தியிருப்பார் [தீய சக்திகளை அழிக்க] இங்கும் ஒரு பெண் காரணமாயிற்று [திரௌபதி சிரித்தாள்] பெருமாள் அந்த யுத்தத்தை நடத்துவதற்கு காரணமாயிற்று, அபூர்வ சக்திகள் வாய்ந்த கௌரவர்களை விட்டுவைக்க இறைவன் விரும்பவில்லை.
துரியோதனனின் [சகுனி] அரசாங்கம் செய்த அதே தில்லு முல்லுகளைத்தான் இந்த மனித அரசாங்கங்களும் இன்று செய்து கொண்டிருக்கின்றன. நடந்து முடிந்த யுத்தங்கள் இதற்கு ஒரு சாட்சி துரியோதனனின் [சகுனி] தொடக்கம் மகா அலெக்சாண்டர், நெப்போலியன், கிட்லர் வரை இவர்கள் வந்த நோக்கங்கள் ஒன்றுதான்.
மகாபாரத யுத்தம், கல்கியில் நடக்க விருக்கும் ஒரு பெரும் போருக்கான ஒரு ஒத்திகைதான் அணுகுண்டு கூட ஒத்திகை பார்த்ததாக ஆய்வுகள் சொல்லுகின்றது. இந்த பூமியில் இருக்கும் தீய சக்திகளை [மக்கள் கொலையாளிகளை] அழிக்க கிருஷ்ணனின் “கல்கி அவதாரம்” நல்லதொரு முடிவாகயிருக்கும்.
கல்கி அவதாரத்தின் வெளிப்பாடுதான், இனி வரயிருக்கும் குருஷேத்திர யுத்தம், இதில் தப்பிப் பிழைப்பவர்கள் மிக மிகச் சிலரே, கல்கியை பார்க்க முடியும்…ஹரியும் சிவனும் சேர்ந்த அந்த கல்கியை பார்க்க கோடான கோடி புண்ணியம் செய்த கண்கள் வேண்டும்.
செந்தூர் வாழ் செல்வக்குமரா! ஆறுபடை வீடு கொண்டானே! அமுதனும் தமிழ் மொழியாம், வேலெடுத்து வீசிக்காட்டி, வீரர் வழி தோற்றுவித்த வீரனே! மறத்தமிழர் மரபு உலகெலாம் தழைத்தோங்க, அமுதெனும் தமிழ் மொழி அழியாது, எவர் உள்ளத்தும் நின்று, நிலை பெற அருள் புரிவாய் அப்பனே!
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்
http://mahesva.blogspot.com/?view=magazine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக