நிகோலா டெஸ்லா: நிகோலா டெஸ்லா ஒரு அறிவியல் மேதையாக மட்டுமின்றி தொலைநோக்கு பார்வை உள்ளவராகவும் இருந்தார், அவர் மனிதகுலத்தின் முன்னேற்றம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
மற்றவர்கள் கண்டுபிடித்த கண்டுபிடிப்பை விட இவருடைய கண்டுபிடிப்பு மக்களினால் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது.
இவரைப் பற்றி எழுதுவதற்காக ஒரு சந்தர்ப்பத்தை வழங்கிய என் கைகளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஒரு நாயகன்.நிகோலா டெஸ்லா ஒரு ஆர்வமுள்ள கண்டுபிடிப்பாளர். மின்சாரத்தை மக்கள் பயன்பாட்டுக்கு எடுத்துச் சென்றதில் எடிசனை காட்டிலும் இவருடைய பங்களிப்பு மதிப்பு மிக்கவை.
அவருடைய பங்களிப்புகள் இன்று நாம் வாழும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தியது. டெஸ்லாவின் கண்டுபிடிப்புகள் மற்றும் அவரது யோசனைகள் உலகில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன, மேலும் மனித நிலையை மேம்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பு வரவிருக்கும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.
நிகோலா டெஸ்லா 1883 ஆம் ஆண்டில் பாலிஃபேஸ் இண்டக்ஷன் மோட்டாரின் அடிப்படைக் கொள்கைகளை உருவாக்கினார் மற்றும் 1888 ஆம் ஆண்டளவில் ஒரு அரை குதிரைத்திறன் [400 வாட்ஸ்] மாதிரியைக் கொண்டிருந்தது.
AC/ DC இரண்டிற்கும் வெளிப்படையான வேறுபாடு என்னவென்றால், ஒவ்வொரு மோட்டாரும் ஆற்றலாக மாறும் மின்னோட்ட வகை, ஏசி மோட்டார்கள் விஷயத்தில் மாற்று திசை மின்னோட்டம் மற்றும் டிசி மோட்டார்கள் விஷயத்தில் நேரடி மின்னோட்டம்.
AC மோட்டார்கள் அவற்றின் அதிகரித்த ஆற்றல் வெளியீடு மற்றும் செயல்திறனுக்காக அறியப்படுகின்றன, அதே நேரத்தில் DC மோட்டார்கள் அவற்றின் வேகக் கட்டுப்பாடு மற்றும் வெளியீட்டு வரம்பிற்கு மதிப்பளிக்கப்படுகின்றன.
மோட்டார் இயக்கத்தில் மிக முக்கியமாக இரண்டு வகைகள் உண்டு, ஒன்று நிலையான காந்த மோட்டார் மற்றொண்டு மின்னேற்றல் காந்த மோட்டார்.
டெஸ்லாவின் இன்டர்க்ஷன் மோட்டார் இரண்டாவது வகையை சேர்ந்தது, மின்னேற்றல் காந்த மோட்டார்களினால் சாதகமான பல நன்மைகள் உண்டு இந்த மோட்டார் இயக்கத்தை நினைத்த நேரத்தில் நிறுத்தவும், சடுதியாக திரும்ப இயக்கவும் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப முன்னும் பின்னுமாக சுற்ற வைக்கவும் முடியும்.
மேலும் மின்னாற்றலை ➡ இயந்திர சக்தியாகவும், இயந்திர ஆற்றலை ➡ மின்சாரமாகவும் உற்பத்தி செய்து மின்கலம் /பேட்டரிகளில் சேமித்து வைக்கவும் முடியும் சு|ரு: ஒன்றில் இரண்டு நன்மைகள்/பலன்கள் (டூ இன் ஒன்) மின்சார கார்களில் இந்த மோட்டோர்தான் பயன்படுத்தப்படுகின்றன.
நீங்கள் மின்சாரத்தில் மலிவான விலையில் கார் ஓட்ட விரும்பினால் சிறிய கார்களின் சலுகைகளை பாருங்கள். சிறந்த மின்சார கார் ஒரு பேட்டரி சார்ஜ் 520 கி மீ வரை செல்லக்கூடியவை.
சிறிய இயக்க, நடைமுறை வாகனங்களை மிகவும் மலிவான விலையில் வாங்கிக் கொள்ள முடியும். வெகு விரைவில் புதைபடிவ ஆற்றலில் பயணிக்கும் வாகனங்கள் அத்துனையும் கார் குப்பை கிடங்கில் கொட்டப்படப் போகின்றன.உங்கள் வாகனத்தை விரைவாக மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.
எண்கள் 3-6-9 : நிகோலா டெஸ்லா 3, 6 மற்றும் 9 எண்களை பிரபஞ்சத்தின் திறவுகோல் என்று அழைத்தார். அவை அவருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த அர்த்தத்தை கொடுத்தது.
3 என்பது உங்களுக்கு இடையே உள்ள பிணைப்பு, பிரபஞ்சம் மற்றும் இருப்பின் தோற்றம் பற்றியது. 6 என்பது உங்களுக்குள்ளே இருக்கும் சக்தியை குறிக்கின்றது.
9 என்பது இயற்கைக்கு அப்பாற்பட்ட அனைத்தையும் குறிக்கின்றது. மூன்று என்பதும் முக்காலத்தையும் உணர்ந்தவன் என்றும். ஆறு என்பது உனக்குள்ளே ஆற்றல் சக்தி பெருகும் மற்றும் 9 என்பது நவகோள்களும் உன்னை சுற்றும் என்று ஒரு மந்திர இலக்கங்களாக பார்க்கப்படுகின்றது.
அவருடைய உன்மையான அறிவியலை மற்றவர்கள் அறியவிடாமல் தடுப்பதற்காக புனையப்பட்ட ஒரு கதையாக கூட இது இருக்கலாம். ஏனென்றால் அவருடைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் இந்த மந்திர தந்திர மாயக்கதைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
என்னைப் பொறுத்தவரை 3, 6, 9 என்பது 3 கட்டம் ஒற்றை கட்ட ஏசி மோட்டார்களின் காந்த துருவத்திற்கு இடையிலான உறவைப் பற்றி அவர் சொல்லி இருக்கலாம். ஏனென்றால் மோட்டார் தயாரிப்பில், மோட்டார்களின் காந்த துருவத்திற்கு இடையிலான உறவு ஒரு சூத்திரமாக இருக்கின்றது.
மின்சாரம் என்றால் என்ன? மின்சாரம் என்பது ஒரு தனிமத்தின் எலக்ட்ரான் ஓட்டத்தை குறிக்கின்றது, எலக்ட்ரான்கள் எதிர்மறை கட்டத்திலிருந்து வெளியேறி நேர்மறை கட்டத்தினால் உள்ளிழுக்கப்படுகின்றது.
காந்தம் இரும்பு செப்பு கம்பி இந்த மூன்றில் எதிலிருந்து மின்சாரம் உற்பத்தியாகின்றது. செப்பு கம்பியில் இருந்து தான் மின்சாரம் உற்பத்தியாகி ஓடுகின்றது. காந்தம் செப்புக் கம்பியில் உள்ள எலக்ட்ரான்களை தள்ளிவிட சுழட்டிவிடப்படுகின்றது. ஒளிமின்னழுத்தம் [சூரிய தகட்டில்] சிலிக்கான் [14] பயன்படுகின்றது. மேலும் வாசிக்க இதில் கிளிக் செய்யவும்.
இந்த கலியுகத்தில் http://mahesva.blogspot.com/2019/01/blog-post.html
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்
http://mahesva.blogspot.com/?view=magazine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக