சனி, 3 ஜூன், 2023

Magnificent Sun Rays: The Potion Vault is the sun's warm rays

அற்புதமான சூரியக் கதிர்கள்: அருமருந்து பெட்டகம் சூரியனின் வெப்ப கதிர்கள். பத்து முட்டை சாப்பிட்டவன் பயில்வானும் கிடையாது தயிர் சாதம் உண்டவன் நோஞ்சானும் கிடையாது. எங்களுடைய உடல் அமைப்பு  மரபணுவை சார்ந்தது குடல் அமைப்பு பாக்டீரியாக்களை சார்ந்தது. மரபணுக்களின் எழுச்சியும் வளர்ச்சியும் சூரியனுடைய பங்களிப்பு மிக முக்கியமானது. மண்ணில் உயிர்களைத் தோற்றுவித்த பெருமை சூரியனையே சாரும்.

மனிதன் நெருப்பை கண்டுபிடிக்கவில்லை மாறாக அதை எப்படி தன்வசப் படுத்துவது என்று கற்றுக் கொண்டான். ஆதி மனிதனுக்கு நெருப்பு என்றால் என்ன, அதை தொட்டால் சுடும் என்று அறிந்து வைத்திருக்கின்றான். நிலம் நீர் காற்று இவைகளுடைய ஆளுமை எல்லாம் அவனுக்கு முன்பே தெரிந்தவை

நெருப்பை தான் நினைத்த இடத்தில் எப்படி வர வைப்பது என்பதை மட்டும் அவன் கற்றுக் தெரிந்து கொண்டான். பிற்கால மனிதன் இயற்கையில் இருந்து சகலத்தையும் எப்படி உருவாக்குவது என்பதை கற்றுக்  தெரிந்து கொண்டான். அவன் கற்றுத் தந்த பாடங்களில் ஒன்றுதான் சூரிய வணக்கம், வீட்டுக்கு ஜன்னல் வச்சு கட்டுவது.

என் வீட்டு ஜன்னலை  யாரோ தட்டுவது கேட்டு திறந்து வைத்தேன் அங்கு காலை கதிரவன் தன் கதிர்களை வீசி என் முன் காட்சியளித்தான். எங்கே, என்னைத் தேடி மத்தியதரை கடற்கரை நோக்கி பயணப்படுகிறாய், நான்தானே தினமும் உன் வாசலில் வந்து நிற்கின்றேன் உன் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்தால் மட்டும் போதும் என் வெப்பம்  உன்னைச் சுடும். ஐரோப்பா வாழ் மக்கள், குறிப்பாக ஜெர்மன் வாழ் மக்கள் தினமும் இரண்டு மணி நேரம் சூரிய கதிர்களை உள் வாங்கினாலே போதும் அவர்களை பிடித்த சகல நோய்களும் விட்டு விலகும்.

இயற்கை தந்த இலவசங்களில் மண்ணையும்  தண்ணீரையும் மனிதன் பணமாக்கி விட்டான். நல்ல காற்றோட்டம் வருவதற்கு பணம் செலவு பண்ண வேண்டி இருக்கின்றது. எஞ்சி  இருப்பதில் சூரிய ஒளி  மட்டும்தான் இன்று வரைக்கும் இலவசமாக கிடைக்கின்றது. சூரிய ஒளி தனியாக விட்டமின் டி  கிடைப்பதற்கு மட்டும் அல்ல,

அது  உங்கள் உடலை ரீசார்ஜ் செய்யக்கூடியது. கால்சியத்தை கொழுப்பை செயலாக்கம் செய்யக்கூடியது சூரிய ஒளி, வளர்சிதைமாற்றத்தில் பங்கெடுக்கும்  ஒரு ஹார்மோன் பழுதுபட்ட மரபணுக்களை பழுதுபார்க்கும் மற்றும் மகிழ்ச்சிக்குரிய ஹார்மோன்களின் சுரப்பை தூண்டிவிடும். உங்களை  மகிழ்ச்சியாக வைத்திருக்கும் அற்புதமான சூரிய கதிர்களை தினமும் இரண்டு மணி நேரம் உள்வாங்குங்கள்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக