ஞாயிறு, 28 நவம்பர், 2021

உப்புக்கரைசல் தெரப்பி (சமையல் உப்பு NaCl - 0,9%, சுருள் சிரை நாளங்கள்(வெரிகோஸ்): உங்கள் கால்களிலுள்ள சிரை நாளங்கள் சுருள் சுருளாக வீங்கி பருத்து கடுமையான வலியை ஏற்படுத்துகின்றது. இதற்கான ஒரு சிகிச்சை முறைதான் உப்புக்கரைசல் தெரப்பி.

ஐசோடன் (1.3% எக்டோயின், கடல் உப்பு, நீர்) : சுவாச நோய்களுக்கான ஹைபர்டோனிக் உப்பு கரைசல் சிகிச்சை பயன்படுத்தப்படுகின்றது. எக்டோயின் மற்றும் கடல் உப்பு கொண்ட ஐசோடோனிக் உப்பு கரைசல் காற்றுப்பாதைகளை இயற்கையான முறையில் ஈரப்பதம் மற்றும் நீரின் அடுக்கை உருவாக்கி பாதுகாக்கின்றது. இது சளி சவ்வை ஒரு பாதுகாப்பு அரணாக அமைத்து காற்றுப்பாதை உலர்வதை தடுக்கின்றது.

வைரஸ், பாக்டீரியா, நோய்க்கிருமிகள், ஒவ்வாமை அல்லது மாசு, வறண்ட காற்றின் வெளிப்பாடு அதிகரிக்கும் காலங்களில் வரும் சுவாச நோய்களை தடுப்பதற்கு இந்த சிகிச்சையானது உதவுகின்றது.

எக்டோயின் எவ்வாறு, எதில்லிருந்து பெறப்படுகின்றது: எக்டோயின் இயற்கை செயலில் உள்ள ஒரு மூலப்பொருள் இது தீவிர சூழல்களில் வாழுகின்ற நுண்ணுயிரிகளில் இருந்து பெறப்படுகின்றது.

எடுத்துக்காட்டாக: கீசர்கள், கடும் உப்பு ஏரிகள் கடுமையான குளிர் ஆர்க்டிக்கின் பனிப்பகுதியிலிருந்து பெறப்படுகின்றது. நுண்ணுயிரிகளில் உருவாகும் எக்டோயின் அங்கு நிலவும் தீவிர சுற்றுச்சூழல் காரணிகளிலிருந்து அவற்றைப் பாதுகாப்பதற்காக உற்பத்தி செய்யப்படுகின்றது.

எக்டோயின் என்ற இயற்கையான வேதிப் பொருள் நாள்பட்ட நிமோனியா/ நாள்பட்ட அடைப்புக்குரிய நுரையீரல் நோய் COPD க்கு எதிரான செயல்திறனை கொண்டது. இந்த சிகிச்சை முறை கோவிட்-19 எதிராகவும் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது: 80 களில் எக்டோயின் எகிப்திய சஹாராவின் உப்புப் பாலைவனத்தில் வாழ்கின்ற உயிரினங்கள் எப்படி இந்த கடுமையான சுடு உப்பு நீரில் வாழ்கின்றன,  ஏன் இங்கு வாழ்கின்ற உயிரினங்களால் மட்டுமே சாத்தியமாக இருக்கின்ற ஆய்வுகளில் எக்டோயின் என்ற வேதிப்பொருள் கண்டறியப்பட்டது. அவைகள் தங்களை சுற்றி ஒரு  உப்பு நீர் காப்பு படலத்தை (எக்டோயின்) உருவாக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

எக்டோயின் நாசி ஸ்ப்ரே,சரும கிரீம் : எக்டோயின் அல்லது 2-மெத்தில்-1,4,5,6-டெட்ராஹைட்ரோபைரிமிடின்-4-கார்பாக்சிலிக் அமிலம் (C₆H₁₀N₂O₂ என்பது தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய ஒரு வெள்ளை, படிக தூள் ஆகும். இது கடுமையா உப்பு நீர் நிலைகளில் வாழும் ஹாலோபிலிக் ஒற்றை உயிரணுக்கள்/பாக்டீரியாவால் உற்பத்தி செய்யப்படும் ஒரு இயற்கை பொருள்.

அதிக அல்லது குறைந்த வெப்பநிலை, அதிக உப்பு செறிவு, நீரிழப்பு மற்றும் புற ஊதா கதிர்வீச்சு போன்ற தீவிர சுற்றுச்சூழல் காரணிகளுக்கு எதிராக அவை தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உற்பத்தி செய்கின்றது .

அதை அறுவடை செய்து மனிதன் தன் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றான். இது எக்டோயின் நாசி ஸ்ப்ரே,கண் சொட்டு மருந்து மற்றும் சரும கிரீம் ஒப்பனை பொருட்களில்  சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றது. கடுமையான குளிர்காலம்/ புற ஊதா கதிர்வீச்சு உள்ள கோடை  மற்றும் தொற்றுநோய் காலங்களில் உலர்ந்து காய்ந்த சருமம் நாசி காற்றுவழிபாதையை பாதுகாப்பதற்கு பயன்படுத்தலாம்

எக்டோயின் சிகிச்சை: தோல் நோய்கள் மற்றும் சளி சவ்வுகளின் எரிச்சல்களான ஒவ்வாமை, மாசு, காது கால்வாயின் வீக்கம் அல்லது சுவாச நோய்கள் போன்றவற்றின் அறிகுறி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றது. கூடுதலாக, மூக்கு மற்றும் கண் சொட்டு மருந்துகள் உலர்ந்த மூக்கு மற்றும் கண்களின் அறிகுறிகளைப் போக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றது.

எக்ஸ்ட்ரீமோலைட் குழுவிலிருந்து வரும் இயற்கைப் பொருள் எக்டோயின் நாள்பட்ட நிமோனியா, COPD மற்றும் கோவிட்- 19 க்கு எதிரான  சிகிச்சையில் .நேர்மறையான விளைவுகளை கொண்டுள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக