நிணநீர் ஓட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு: நிணநீர் ஓட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பிற்கும் என்ன சம்பந்தம். நிணநீர் ஓட்டம் தங்கு தடையின்றி சரியாக இயங்கினால்தான் நோய் எதிர்ப்பு சக்தி அதீத பலத்துடன் இயங்கும். நோய் எதிர்ப்பு அமைப்பு, பாதிக்கப்பட்ட செல்களை அதி வேகமாக சென்றடைவதற்கு இந்த பாதையைத்தான் பயன்படுத்துகின்றது
நிணநீர் ஓட்டம், ஊட்டச்சத்து எரிபொருள் கொழுப்பு சர்க்கரை மற்றும் நோய் எதிர்பு என்னும் காவல்க்கார்களை எடுத்து செல்லும் அதி விரைவு சாலையாக இயங்குகின்றது. மனித உடலில் இயங்கிக்கொண்டிருக்கும் குருதிச்சுற்றுப்போல் மேலும் கீழுமாக இரு வழி பாதை போல் இல்லாமல் நிணநீர் ஓட்டம் ஒரு வழி பாதையை கொண்டது ஒரு முறை சுற்றில் கலந்து விட்டால் திரும்பி வராமல் குருதிச்சுற்றின் மூலம் உடலில் கலந்து விடும் தன்மை கொண்டது.
இது தைமஸ் சுரப்பியை மையமாக கொண்டு செயல்ப்படும் நிணநீர்-நாளங்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு லிட்டர் நிணநீர்-திரவத்தை (ஊட்டச்சத்து) உடல் முழுவதும் மஞ்சள்-வெள்ளை இடைச்செல்லுலார் திரவத்தை சிரை அமைப்புக்குள் கொண்டு செல்கின்றன. இந்த நிணநீர், இறந்த செல்கள், புரதம் மற்றும் அந்நிய உடல்கள், பாக்டீரியா, கொழுப்புகள் மற்றும் வளர்சிதை மாற்ற இறுதி பொருட்கள் இதன் வழியாக அகற்றப்படுகின்றன.
வளர்ந்த சராசரி மனிதனில் நிணநீர்-நாளங்களில் கிட்டத்தட்ட 600 நிணநீர்-கணுக்கள் இருக்கின்றது வளர்ந்து முதிரும் பருவத்தில் இதனுடைய எண்ணிக்கை குறைந்து போகலாம், காரணங்கள் நிணநீர் தேக்கங்கள் அல்லது புற்று நோய் தாக்கி பழுதுபட்டு போய்யிருக்கலாம்.
இந்த நிணநீர்-கணுக்களில் தான் அதிகளவில் நோய் எதிர்ப்பு சக்தி காணப்படுகின்றது. மனித உடலின் காவல் நிலையங்கள், சோதனை சாவடி சுங்கத்துறை அலுவலகம் என்று கூட சொல்லலாம் இங்கு தான் நோய்க்கிருமிகளை பகுப்பாய்வு செய்து எந்த சரக்கை உள்ளே விடலாம் என்ற தீர்மானமும் எடுக்கப்படுகின்றது,
தேவைப்பட்டால் தன்னை பலப்படுத்தியும் கொள்கின்றது. எலும்பு மஜ்ஜைகளுக்கு கட்டளையிட எலும்பு மஜ்ஜை தேவை ஏற்படும் போது மட்டும் நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்யும் நல்ல பணியையும் செய்கின்றது
நிணநீர் வீக்கம் (Lymphedema): நீங்கள் அறிந்த ஒரு நோய்க்குறிதான், தொடை இடுப்பு பகுதி மற்றும் அக்குள்களில் நெறி போடுதல், நிண நீர் கணுக்களில் நீர் தேக்கங்களால் ஏற்பட்ட ஒரு வீக்கம், இது ஓரிரு கிழமைகளில் தானாக சரியாகிவிடும் மற்றும் சிலருக்கு இது நிரந்தரமாகி அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்படும். சரும தொற்று அதிகரிப்பு, திறந்த காயம்/புண்கள் மற்றும் கொப்புளங்கள் வெடிப்பு உள்ளார்ந்த இரத்தகசிவு உருவாக்கம், உடலின் ஏற்ற இறக்கங்கள் இயக்கம் மற்றும் ஒரு வளைந்த உடல் தோரணை உருவாகும்.
கோயில்களில் சாமி தூக்குபவர்களின் பின் கழுத்துப் பகுதியில் ஏற்படும் கழலை/வீக்கம் அதிக பாரத்தின் அழுத்தத்தினால் கொழுப்பு, நிணநீர் கூட்டு திரவங்களும் தேங்கி ஏற்படுவது இதுவும் நிரந்தரமானது. ஆனால் ஆபத்து இல்லாதது, இருப்பினும் பல நீண்டகால பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
நிணநீர் தேக்க-நோய்-Lipedema: கொழுப்பு, நிணநீர் திரவங்களும் கூட்டுச் சேர்ந்து குறிப்பாக பெண்களின் கால்களில் தேங்கியிருக்கும் ஒரு நோய் அதிகளவில் இந்த நோயினால் பல பெண்கள் அவதிப்படுகின்றார்கள் இதற்கு மருத்துவத்தில் நிரந்தரமான தீர்வு எதுவும் இருப்பதாக தெரியவில்லை, இருப்பினும் முன்கூட்டியே வராமல் தடுக்க முடியும்.
ஆண்களை விட ஏன், எதற்காக பெண்கள் மட்டும் பாதிக்கப்படுகின்றார்கள். 60 விழுக்காடு இறுக்கமாக உடை, காலுறை அணிதல் மற்றும் ஒரே இடத்தில் அமர்ந்த பணி, குறைந்த வீட்டு வேலைகள் உடல் பயிற்சியின்மை மன அழுத்தம், குறைந்த நடை சுவாசம் கால்களில் நிணநீர் தேக்கம் ஏற்படுகின்றது. எங்களுடைய மொத்த எடையில் 60 விழுக்காடு நீரினால் நிரம்பியது, அதில் மூன்றில் இரண்டு பங்கு முழு உடலிலும் உள்ள தண்ணீரை விட திசுக்களிலுள்ளது
உதாரணமாக: 2/3 பங்கு 70 கிலோ உடல் எடை கொண்ட ஒருவர் 42 லிட்டர் திரவம் செல்களில் உள்ளது. செல்களுக்கு வெளியே 1/3 பங்கு. ஹார்மோன்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன நமது எலும்புகளில் கூட நிறைய தண்ணீர் இருக்கின்றது. இந்த திரவங்கள் தங்கள் பணி பயன்பாடு முடிந்ததும், நிணநீர் ஓட்டத்தில் கலந்து குருதி சுற்றின் மூலம் சிறுநீர் கழிவாக வெளியேறுகின்றது.
இந்த நிணநீர் திரவங்கள் உடலில் தங்கு தடையின்றி ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் தடைப்படும் போது நிணநீர் வீக்கம், நிணநீர் தேக்கநோய் ஏற்படுகின்றது.
நிணநீர் ஓட்டத்தின் கோளாற்றின் முக்கியமான காரணம்: நரம்புகளில் அதிகரித்த அழுத்தம், இரத்தத்தில் போதுமான புரத செறிவு இல்லை, சிறுநீரக கோளாறு, இரத்த நாளங்களில் சேதம். சர்க்கரை நோய், இதய நோய், கர்ப்பம், மருந்து, அளவிற்கு அதிகமான மதுபானம் உப்பின் பயன்பாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு.
முதன்மை நிலை நிணநீர் உறுப்புகள்: லிம்போசைட்டுகளின் உற்பத்தி மற்றும் வளர்ச்சி/முதிர்ச்சி : எலும்பு மஜ்ஜை, தைமஸ்
இரண்டாம் நிலை நிணநீர் உறுப்புகள்:
- மண்ணீரல்.
- நிணநீர் கணுக்கள்.
- நிணநீர் திசுக்கள்.
- அடிநாசுரப்பி (டான்சில்)
- குருட்டுக்குடல்(வளரி)
- பேயரின் தகடுகள்.(உறுஞ்சிகள்)
- சளிச்சவ்வுகள்.
மூன்றாம் நிலை நிணநீர் உறுப்பு
நிணநீர் ஓட்டம், அதனுடைய பாதை.
நிணநீர் மண்டலத்தின் முதன்மை செயல்பாடு: தேவையற்ற நிற பொருள் நச்சுக்கள் மற்றும் திசு திரவத்தை இடைநிலை இடத்திலிருந்து அகற்றுதல், நிணநீர் உறுப்புகளிலிருந்து லிம்போசைட்டுகள் மீண்டும் இரத்த ஓட்டத்தில் செலுத்தப்படுகின்றன பொதுவாக சொன்னால் ஊட்டசத்துக்களை எடுத்துச்செல்வது மட்டுமின்றி மிச்சம் மீதியை எடுத்து உடலை சுத்தம் செய்து துப்பரவாக வைத்திருத்தல் போன்ற பணிகளையும் செய்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக