பக்கவாத தடுப்பு: இரத்தம் தடிமனாவதை தடுக்கும் உணவு, மருந்துகளைப் பயன்படுத்துங்கள். [ஆஸ்பிரின் 300]
பக்கவாதம் எதனால் வருகின்றது, கேள்வி பழசு ஆனால் பதில்கள் புதிசு, சின்ன வெங்காயத்தை உணவில் சேர்ப்பது, முருங்கை இலை போட்டு உப்புக்கஞ்சி சமைத்து குடிப்பது மற்றும் இரண்டு ஐரோ ஆஸ்பிரின் மாத்திரையின் பயன்பாடு முன்கூட்டியே உங்கள் வாழ்க்கையை அந்த டிக்டிக், திக்திக் நிமிடங்களிலிருந்து காப்பாற்றித்தரும்.
மனித உடலும் ஒரு மின்சார பொம்மைதான் எலக்ட்ரோலைட்டுகள் என்னும் பேட்டரி இல்லாமல் இயங்காது. சமையல் உப்பு மிகவும் முக்கியமான எலக்ட்ரோலைட்டு இவைகள் மின்னேற்றமுள்ள அயனிகளை சுமந்து செல்பவை, வளர்ந்த மனிதன் நாள் ஒன்றுக்கு 6-7 கிராம் உப்பு உணவில் சேர்க்க வேண்டும். இந்த அயனிகள் நரம்பு மண்டல சமிக்கை, இதய சைனஸ் முனைக்கு மின்னேற்றத்தை கொடுக்கின்றது.
தேவைப்பட்டால் அரை ½ மேசைக்கரண்டி சமையல் உப்பை நீரில் கலந்து குடிக்கவும், உப்பு கருவாடு உணவில் சேர்ப்பது தினமும் இளநீர் குடிப்பது பக்கவாதத்தை தடுக்க உதவும்.பக்கவாதத்தின், பல்வேறு ஆபத்து காரணிகள் எடுத்துக்காட்டாக, உயர் இரத்த அழுத்தம், சர்க்கரைநோய், உயர் கொழுப்பு உடல் பருமன் உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் பரிந்துரையில் பக்கவாத தடுப்பு மருந்தைப் பெற வேண்டும்.
மருத்துவ ஆலோசனைக்கு உட்பட வேண்டிய மற்றும் சில நோயாளிகள் மாறுபட்ட காரணிகளினால் சைனஸ் முனை திடீரென்று பிரேக்கப்பாவது, உடலின் மிக முக்கியமான எலக்ட்ரோலைட்டுகள் என்று சொல்லப்படும் சோடியம்(Na+) கால்சியம்(Ca2+)மற்றும் மெக்னீசியம்(Mg2+) போன்ற கூறுகள் குறைவுபடுவது மேலும் தமனிகள் மரத்துப்போதல் இரத்த நாளங்கள் சுருங்கிவிரியும் தன்மையை இழந்து போதல், சுண்ணாம்பு, கொழுப்பு படிவுகள்.
கவனத்தில் கொள்ள உயர் சர்க்கரை; நீண்ட காலமாக ஒருவரின் இரத்தத்தில் அதிகளவு சர்க்கரை இருக்குமாயின் ஆபத்தான காரணியாக மாறுகின்றது அதாவது சர்க்கரை அமிலத்தன்மை வாய்ந்தது இது இரத்த தமனிகள், மூளை, விழித்திரை, மெல்லிய நரம்பு தசை நாண்களை அரித்து இரத்த கசிவினை ஏற்படுத்தும்/ஏற்படுத்தியிருக்கும் இந்த நேரத்தில் இரத்தம் தடிமனாவதை தடுக்கும் ஆஸ்பிரின்-300 போன்ற மாத்திரைகளை எடுத்தால் இரத்த கசிவு மேலும் அதிகரித்து உயிர் ஆபத்தினை ஏற்படுத்தும்.
இந்த காலகட்டத்தில் கல்லீரல் விற்றமின்-கே உற்பத்தி செய்து இரத்த த்தில் கலந்துவிடுகின்றது. விற்றமின்-கே இரத்தம் உறைவதற்கு முக்கியமானது இது உறைதல் காரணிகளை அவற்றின் பயனுள்ள வடிவமாக மாற்றுகின்றது மற்றும் இது போன்ற இரத்த கசிவு காயங்கள் ஏற்பட்டால் இரத்தப்போக்கு மரணத்தை தடுக்க உதவுகின்றது. இவை இரண்டும் எதிரும் புதிருமானது.
விற்றமின்-கே முட்டைக்கோஸ், கீரை போன்ற பச்சைக் காய்கறிகளில் அதிகம் உள்ளது. முழு தானிய பொருட்கள், இறைச்சி, பால், முட்டை, பழங்கள் மற்றும் பிற காய்கறிகளிலும் அதிக அளவு உள்ளது. தயிர் போன்ற புளித்த உணவுகளில் உள்ள விற்றமின்-K2 மனித குடல் பாக்டீரியாவால் உடைக்கப்பட்டு கல்லீரலில் சேமிக்கப்படுகின்றது. அதிகளவு விற்றமின்-கே உணவு, மாத்திரை வடிவ நுகர்வு ஆபத்தான காரணியாக மாறுகின்றது.
எவ்வாறாயினும், ஏட்ரியல் குறு நடுக்கம் உள்ளவர்கள் ஆரோக்கியமான இதய துடிப்பை மீட்டமைக்க போதுமான பக்கவாத தடுப்பு மருந்துகளைப் பெறுவதில்லை என்பது பல மருத்துவரின் வருத்தமாகவும் கூட இருக்கின்றது.
ஏட்ரியல் குறு நடுக்கம் அனைவருக்கும் பொதுவான கார்டியாக் அரித்மியா குறிப்பாக வயதான காலத்தில் ஏற்படுகின்ற ஒரு கோளாறு. இதயம் ஒருங்கிணைக்கப்படாத முறையில் துடிப்பது, ஏட்ரியா மற்றும் வென்ட்ரிக்கிள்கள் வெவ்வேறு தாளங்களுடன் துடிக்கின்றதை இது வெளிப்படுத்துகின்றது.
ஏட்ரியல் குறு நடுக்கம் (ஃபைப்ரிலேஷனின்) சிகிச்சையானது வரவிருக்கும் பக்கவாதத்தைத் தடுத்து, உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்றது. குடும்ப உறுப்பினர்களுக்கு பாரமாக இல்லாமல் உங்கள் அன்றாட கடமைகளை உதவியின்றி உங்களால் செய்யமுடியும் அது உங்களுக்கு எவ்வளவு மகிழச்சியானது.
ஏட்ரியல் என்பது; இதய வால்வு வழியாக வென்ட்ரிக்கிளுடன் இணைக்கப்பட்ட இதயத்தின் ஒரு பகுதி, அதில் இரத்தம் முதலில் பாய்கின்றது அதில் ஏற்படும் ஒரு நடுக்கம் "ஏட்ரியல் குறு நடுக்கம் "ஆகும்
இரும்பு பாஸ்பேட் சத்து நிறைந்த கீரை, நல்ல உணவுதான் இருப்பினும் இரவில் உண்பதை தவிர்க்கவும். பாஸ்பேட் ஒரு உன்னதமான கால்சியக் கொள்ளையன். கீரை போன்ற பச்சைக் காய்கறிகள் மற்றும் நடைமுறையிலுள்ள அத்துனை உணவுகளிலும் அதிக அளவு காணப்படுகின்ற பாஸ்பேட் உட்கொள்ளல் எலும்புகளிலிருந்து கால்சியம் பெருமளவில் உடைக்கப்படுகின்றது, மறுபுறம், குடலில் இருந்து கால்சியம் உறிஞ்சுதலும் குறைகின்றது.
இதன் நிமித்தம் எலும்பு தேய்வு, எலும்பு முறிதல், பலமிழந்த எலும்பு, தமனிகளில் சுண்ணாம்பு படிவுகளுக்கு காரணியானது. இரவு நேரங்களில் இந்த உணவுகளை உண்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் காரணம் பகலில் சூரிய ஒளியில் விற்றமின்-D3 இணைந்த கால்சியத்தை உடைக்கமுடியாது அது உறுதிவாய்ந்த எலும்பாக கட்டமைக்கப்படுகின்றது இரவில் தனித்துள்ள கால்சியத்தை இணைத்து கால்சியம் பாஸ்பேட்டாக மாறுகின்றது[Ca3(PO4)2] இது உடல் நலத்திற்கு கேடானது
விற்றமின்-D3 குறைபாடு அதிகளவு பாஸ்பேட் நுகர்வு உடலின் கால்சிய சமநிலையை பாதிக்கும்.
செயற்கை பாஸ்பேட்டுகள் நொருக்குத்தீனி உட்பட கிட்டத்தட்ட அத்துனை தயாரித்த உணவுகளிலும் [E341] என்ற இலக்கத்தில் மறைக்கப்பட்டுள்ளன இதன் விளைவாக, இரத்தத்தில் உள்ள பாஸ்பேட் செறிவு கூர்மையாக உயர்கின்றது, இதனால் கார்டியோவாஸ்குலர் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்க செய்கின்றது. இது போன்ற காரணிகளினால் வரும் இதய நோய்களை ஆரம்பத்திலிருந்து கண்டறிந்து தவிர்த்தால் உண்டு.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தியது எவ்வளவு ஆபத்தானது இந்த உணவுகளை சாப்பிட்டாலும், சாப்பிடாவிட்டாலும் ஒன்றுதான் இரண்டுமே மரணத்திற்கான வழிகளை திறந்து வைத்திருக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக