கடுமையாக உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் கவனிக்கவேண்டியவைகள்.வியர்வை மூலம் அதிக நீர் வெளியேற்றம் இதன் நிமித்தம் உடலின் திரவ பற்றாக்குறை, இரத்தம் தடிமனாவது மற்றும் மெக்னீசியம்-mg2+ குறைபாடு, உடலின் தசை நாண்களில் பிடிப்பு ஏற்படும் இதயத்தசை உட்பட. தசை இழுப்பு, இதய படபடப்பு, திடீரென்று இதயம் பந்தயத்தில் ஓடுவதுபோல் துடிப்பது, தலைசுற்றல் அஜீரணம் எரிச்சல் சோர்வு மற்றும் உள்ளார்ந்த அமைதியின்மை தலைவலி ஏற்படும். மெக்னீசியம்-mg2+ குறைபாட்டினை சரி செய்ய வேண்டும்.
இரத்தம் தடிமனாவதை தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் நிறைய நீர் பருகுதல், தர்பூசணி போன்ற நீர் ஆகாரங்களை எடுத்தல் சின்ன வெங்காயம் உள்ளி/பூண்டு, கறுவா தேவைப்பட்டால் ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுப்பது.
வளர்ச்சி ஹார்மோன் சோமாட்ரோ எலும்பு, தசை வளர்ச்சி ஹார்மோன்கள் (HGH, STH) இது மனித மற்றும் விலங்கு உயிரினங்களில் வளர்ச்சி ஹார்மோனாக நிகழ்கின்றது மற்றும் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியின் முன்புற மடலில் உருவாகின்றது. பிட்யூட்டரி சுரப்பியின் பற்றாக்குறையால் வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டால், மறுசீரமைக்கப்பட்ட சோமாட்ரோபின் ஒரு மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது.
மறுசீரமைக்கப்பட்ட சோமாட்ரோபின் வளர்ச்சி ஹார்மோன் மாத்திரைகள் முழு வளர்ச்சி அடைந்த பெரியவர்களின் உடல் அளவு மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதாவது இதற்கு மேல் இவர்கள் வளர்ச்சி அடையப்போவதில்லை என்ற நிலைப்பாட்டை உடல் எடுக்கின்றது
இருப்பினும், அதிகப்படியான அளவு ஆபத்தானது, ஏனெனில் இது முழு வளர்சிதை மாற்றத்தையும் பாதிக்கின்றது. இரத்த சர்க்கரையின் அளவு உயரும் எதிர்காலத்தில் சர்க்கரை நோயாளியாக கூட மாறலாம் மற்றும் உள் உறுப்புகள் பெரிதாக விரிவடையும் அதாவது இதயம் விரிவடைந்து பெரிதாகலாம் இது போன்று முற்றிலும் மாறுபட்ட ஆபத்துக்களை இந்த மாத்திரையின் பயன்பாடு ஏற்படுத்தும்.
அளவிற்கு அதிகமாக பயன்படுத்தும் புரோட்டீன் பொடிகள் எவ்வளவு ஆபத்தானது: தசையை உருவாக்க புரதம் மிகவும் முக்கியமானது. புரத பொடிகளை அளவிற்கு அதிகமாக பயன்படுத்தும் போது சிறுநீரக கோளாறு, சிறுநீரக கல், எடை அதிகரிப்பு, மலச்சிக்கல் / வயிற்றுப்போக்கு, துர்நாற்றம் வீசும் சுவாசம் கடுமையான நீரிழப்பு/ தாகம் புற்றுநோய், இதய நோய் ஆபத்து திடீர் மரணங்களை ஏற்படுத்துகின்றது.
புரோட்டீன் பொடிகள் முதன்மையாக வலிமை விளையாட்டு வீரர்களால் பயன்படுத்தப்படுகின்றன. கூடுதல் புரத பவுடர் பானத்தை உட்கொள்ளல் மூலம் தசை கட்டழகில் விரைவான பெரிய ஆதாயத்தை அடைய முயற்சிக்கின்றார்கள் கட்டழகு பயிற்சி செய்பவர்கள்
வலிமையான விளையாட்டு வீரர்களுக்கு கூடுதலாக, வயதானவர்களும் புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்வதன் மூலம் பயனடையலாம். இந்த புரத பொடி வயதான காலத்தில் ஏற்படும் தசை இழப்பைத் தடுக்கலாம் அல்லது குறைந்தபட்சம் அதை மெதுவாக்கலாம். வயதானவர்களில் தசை இழப்புக்கு புரதசத்து குறைபாடு ஒரு முக்கிய காரணமாகும். இதில் கவனிக்கப்படவேண்டியது உடற்பயிற்சியுடன் கூடிய புரோட்டீன் பவுடர் பயன்பாடு பற்றித்தான் பேசுகின்றேன். சும்மா படுத்துக்கிடந்து எடுத்தால் கட்டழகு வராது செரிமான கோளாறு, வாயுக் கோளாறு சிறுநீரக பாதிப்புத்தான் ஏற்படும்.
புரதங்கள் போதுமான அளவு உணவில் எடுத்துக்கொள்வது முக்கியம், இதனால் வயதானவர்கள் குறிப்பாக விளையாட்டு நடவடிக்கைகள் மூலம் தசைகளை உருவாக்க முடியும். ஒரு கிலோ உடல் எடையில் 1.5 கிராம் புரதம் ஒரு நாளைக்கு உட்கொள்ள வேண்டும். அதாவது 80 கிலோ எடையுள்ள ஒருவர் கண்டிப்பாக நாள் ஒன்றுக்கு 120 கிராம் புரதசத்தை எடுக்கவேண்டும். கடுமையாக கட்டழகு பயிற்சியில் ஈடுபடுபவர்கள் இதை விட இரண்டு விழுக்காடுகள் மேலதிகமாக எடுத்தால் போதுமானது.
மயோஸ்சட்டின்: மயோஸ்சட்டின் என்பது உடல் கட்டுமான பணிகளில் பங்காற்றும் ஒரு புரதம், இது தசை வளர்ச்சியை ஒரு கட்டுபாட்டிற்குள்ளே வைத்துக் கொள்ள உதவுகின்றது, இந்த புரதம் மரபணு குறைபாடு காரணமாக தடைப்பட்டால் தசை வளர்ச்சி ஒரு கட்டுக்குள்ளே அடங்காமல் கட்டு மீறி வளரும்,
இதுவொரு இயற்கையான குறைபாடு, சிறுபிராயத்திலிருந்தே உடல் கட்டழகு ( சிக்ஸ்பேக் ) தென்படும், இது வளரும் வாலிபப்பருவத்தில் சற்று முறுக்கேறி பெரியதாக தெரியும். இயற்கையாக உற்பத்தியாகும் மயோஸ்சட்டின் புரதத்தை தடுப்பான் மருந்துகள் மூலம் குறைத்து, செயற்கையாக சிக்ஸ்பேக் கட்டழகை அதுவும் விரைவாக பெற்றுக் கொள்ள முடியும், இருந்தாலும் நிறைய பக்கவிளைவுகளும் ஏற்படும்.
◼️மையோசின்:தசை இயக்கத்தில் பங்கெடுக்கும் மஞ்சள் நிற புரதம், இந்த புரதம் தசை செல் மத்தியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றது, தசைகள் இயங்கும் போது முன்நோக்கி நகர்ந்தும் விடுபடும் போது தசைகளை வலிமை அடைய வைக்கின்றது.
◼️கிரியேட்டின்: தசைகளுக்கு சத்தி வழங்கக்கூடிய ஒரு ஊட்டச்சத்து, கிரியேட்டின் பெரும்பகுதி இயற்கையாக கல்லீரல், கணையம் மற்றும் சிறுநீரகங்களினால் விளை புரதமாக உற்பத்தி செய்யப்பட்டு தசைகளில் சேமிக்கப்படுகின்றது. மாமிச உணவுகளில் பெருமளவில் காணப்படுகின்றது, தாவர உணவுகளில் (ஜீரோ) எந்த தாவர உணவுகளிலும் கிரியேட்டின் சத்து இருப்பதில்லை.
ஊட்டச்சத்து கிரியேட்டின் இல்லாமல் உடலிலுள்ள எந்த தசையுமே இயங்காது, இதய தசைகள் உட்பட , கண் அசைவு, கேட்கும் திறன், மூளை வளர்ச்சி மற்றும் நரம்பு மண்டல இயக்கம் ஆண்மை, சந்ததி விருத்திக்கு கிரியேட்டின் மிக முக்கியமான ஒரு ஊட்டச்சத்து. புரோட்டீன் பொடிகள், கிரியேட்டின் ஊட்டச்சத்து இல்லாமல் கட்டழகு பயிற்சியே வீணானது, இந்த ஊட்டசத்துக்கள் இணைந்த கட்டமைப்பே . கிரியேட்டின் சத்துமா கட்டழகு கடைகளில் கிடைக்கின்றது. அளவோடு பயன்படுத்தவும்.
இயல்பு நிலையிலிருந்து இரண்டு விழுக்காடுகள் மேலதிகமாக இந்த ஊட்டச்சத்து பொடிகளை எடுத்துக்கொள்ளலாம் மற்றும் குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒரு தடைவையாவது இரத்த பரிசோதனை செய்து இரத்தத்தில் கிரியேட்டின் அளவு மற்றும் கழிவுப்பொருளாக தசைகளில் உடைக்கப்படும் கிரியேட்டினின் அளவினையும் சரிபார்க்கப்படவேண்டும்.
அளவுக்கு அதிகமான கிரியேட்டின் உற்பத்தி / நுகர்வு சிறுநீரக செயலிழப்பு, வாய்த் துர் நாற்றம் மற்றும் வாய்வு கோளாறுகளை கொண்டு வரும். வேறு காரணங்கள் இன்றி ஒருவருக்கு வாய்த் துர் நாற்றம் அதிகமாக இருந்தால் இரத்தத்தில் கிரியேட்டின் அளவு அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டுகின்றது,
இது கல்லீரல், கணையம் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதற்கான ஒரு அறிகுறி, சர்க்கரை நோயாளிகள் மற்றும் சிறுநீரக பாதிப்புள்ளவர்கள் இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். சிறுவர்களுக்கு வாய்த் துர் நாற்றம் அதிகமாக இருந்தால் கண்டிப்பாக சிறுவயது சர்க்கரை நோய் ( வகை.1) இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்
கிரியேட்டினின் என்றால் என்ன? தசைகளில் பாசுபேட் உடைக்கப்படும் போது இது கழிவுப் பொருளாக உருவாக்கப்படுகின்றது உடலில் தசைநார்களின் திண்மையைப் பொறுத்தும் அவற்றின் பயன்பாட்டைப் பொறுத்தும் சீரான வீதத்தில் இது உடலில் உருவாக்கப்பட்டு கிரியேட்டினின் சிறுநீரகங்கள் மூலம் வெளியேற்றப்படுகின்றது மேலும் வாசிக்க இதில் கிளிக் செய்யவும் சிறுநீரக-நோய்-Kidney Disease
கிரியேட்டின் (ஊட்டச்சத்து புரதம்) மற்றும் கிரியேட்டினின் (கழிவுப் பொருள்) இவைகளின் ஊற்று மூலம் ஒன்றாக இருந்தாலும் இரண்டும் வேறு வேறு பண்புகளை கொண்டது
வளர்ச்சி ஆண்மை ஹார்மோன் ♂ டெஸ்டோஸ்டிரோன் டெஸ்டோஸ்டிரோனின் உட்சேர்க்கைக்குரிய ஒரு பாலியல் ஹார்மோன். தசையை உருவாக்கும் விளைவுகளுக்கு மிகவும் முக்கியமானது. டெஸ்டோஸ்டிரோன் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தசைகளை உருவாக்குவதற்கு சமமாக செயல்படுகின்றது. மறுபுறம் ஆண்களில் இது அதிக அளவில் வெளியிடப்படுகின்றது..
உடல், 90% ஆண்களுக்கு விரைகள், 10% சிறுநீரக மேற்பட்டை பெண்களுக்கு கருமுட்டை பை மற்றும் சிறுநீரக மேற்பட்டையில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை கொழுப்பு கொலஸ்ட்ராலில் இருந்து தயாரிக்கின்றது. உடலில் கொழுப்பு இல்லை என்றால் இந்த ஹார்மோன் குறைபாடு ஏற்படுகின்றது. இதன் நிமித்தம் ஆண்மை கோளாறு சந்ததி விருத்தி இல்லாமல் போகும். கொலஸ்ட்ரால் கொழுப்பு விற்றமின் D3 உற்பத்திக்கு மிகவும் முக்கியம், விற்றமின் D3 பங்களிப்பு இல்லாமல் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உற்பத்தியாகாது.
இதன் விளைவாக, நல்ல கொழுப்புள்ள உணவுகள் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் அதிகம் உணவில் எடுத்துக்கொள்ளுங்கள் அதிக கொழுப்புள்ள உணவு உங்கள் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். வெண்ணெய், சால்மன் மீன் கொட்டைகள், விதைகள் உயர்தர இறைச்சி முட்டை கொழுப்பு, தாவர எண்ணையை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
விரும்பத்தகாத பக்கவிளைவுகள் டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பு முடி இழப்பு, தோலின் நிறமாற்றம் மெல்லிய கருமை நிறம் ஏற்படும். கட்டழகு பயிற்சிகள் கை மார்பு தசைகள் மட்டும் விரிந்து பெரிதாகிக் கொண்டே போகும் தலை, பாதத்திற்கு மேலுள்ள கால் பகுதி எவ்வளவு காலம் பயிற்சி செய்தாலும் ஆரம்பத்தில் இருந்தமாதிரியேதான் இருக்கும் எந்த விதமாற்றமும் ஏற்படாது, காலப்போக்கில் உடல் பெருத்தும் தலை கால் சின்னதாக இருக்கும் ஒரு உடல் கட்டமைப்பை உருவாக்கும். நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக