வளர்சிதை மாற்றம்/கோளாறு என்றால் என்ன: (மெட்டபாலிசம்) பண்டைய கிரேக்க லத்தீன் மொழியிலுள்ள பொதுவாக ஜீரணத்தை குறிக்கும் ஒரு சொல், வளர்சிதை மாற்றம் என்பது உயிரினங்களின் உடலில் உள்ள பொருட்களின் அத்துனை இரசாயன மாற்றங்களையும் விவரிக்கப் பயன்படும் சொல்,
அதாவது உணவு செரிமானத்தின் இரண்டாம் நிலையை குறிக்கின்றது. உணவு ஜீரணமாகி உறிஞ்சப்படும் சர்க்கரை கொழுப்பு, புரதம், அமினோஅமிலங்கள் விற்றமின்கள் கனிமசத்துக்களை அடுத்த கட்ட வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது.
உதாரணமாக உணவை இடைநிலை மற்றும் இறுதிப் பொருட்களாக மாற்றுவது. இந்த உயிர்வேதியியல் செயல்முறைகள் உருவாக்க, உடைக்க மற்றும் மாற்றுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன
எடுத்துக்காட்டாக: உணவின்மூலம் உடைக்கப்படும் கார்போஹைட்ரேட் சர்க்கரையாக(குளுக்கோசுC₆H₁₂O₆) இரத்தத்தில் உறுஞ்சப்பட்டு, ஹார்மோன் இன்சுலின் உதவியுடன் வளர்ச்சி கட்டுமானத்தில் பயன்படுத்துவது.
ஒரு கட்டிடம் கட்டுவதற்கு தேவையான கல் மண், சிமென்ட் தண்ணீர் இருந்தும் அதை கலந்து கட்டுவதற்கு ஒரு கட்டிடபணிப்பாளர் தேவைப்படுவது போல் இரத்தத்தில் உறுஞ்சப்பட்ட கட்டுமான பொருட்களை அடுத்த கட்ட வளர்ச்சி பணிகளில் ஈடுபடவைப்பதற்கு வளர்ச்சி ஹார்மோன்கள் அவசியமானது இதில் ஏற்படும் கோளாறுதான் வளர்சிதைமாற்ற கோளாறு.
செரிமானம் என்பது; வாய் வழியாக வழங்கப்படும் உணவை அரைத்து குழம்பாக்கி, உடல் பயன்படுத்தக்கூடிய கட்டுமானத் தொகுதிகளாக மாற்றும் செயல்முறைக்கு பெயர் ஜீரணம்/செரிமானம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக