திங்கள், 1 நவம்பர், 2021

எரித்ரோபொய்டின் (EPO): என்பது 90 விழுக்காடு சிறுநீரகத்தில் உற்பத்தி செய்யப்படும் எண்டோஜெனஸ் ஹார்மோன் ஆகும், இது எலும்பு மஜ்ஜையில் சிவப்பு இரத்த அணுக்கள் (எரித்ரோசைட்டுகள்) உருவாவதைத் தூண்டுகின்றது.

முக்கியமாக உற்பத்தியாகும் இடம் சிறுநீரகம் இதை தவிர கூடுதலாக, கல்லீரல், விதைகள், மண்ணீரல், மூளையில் உற்பத்தியாகி இரத்த ஓட்டத்தில் விடுவிக்கின்றது. அவசரகாலத்தில் குறிப்பாக விபத்தில் ஒருவர் கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டு ஒட்சிசன்(O₂) பற்றாக்குறை ஏற்படும் போது இயற்கையாக இதனுடைய உற்பத்தி அதிகரிக்கின்றது. இறுதியில், இது சகிப்புத்தன்மை செயல்திறன் அதிகரிப்பதற்கும் குறுகிய மீட்பு நேரத்திற்கும் வழிவகுக்கின்றது.

இது செயற்கை தொகுப்பாக ஊசி வடிவில் கிடைக்கின்றது குறுகிய நேரத்தில் திடீர் சக்தியை அதிகரிப்பதற்கு. அதாவது சிவப்பு இரத்த அணுக்கள் (எரித்ரோசைட்டுகள்) அதிகரிக்க செய்து உடலில் ஒட்சிசன்(O₂) ஓட்டத்தை அதிகரிக்க செய்கின்றது. ஊக்கமருந்து நோக்கங்களுக்காக தவறாகப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

எரித்ரோபொய்டின் (EPO) ஹார்மோனின் நல்ல பக்கங்கள்

- உடலின் சொந்த ஹார்மோன். - வளர்ச்சி காரணி.(கட்டழகு தசை) - எரித்ரோசைட் முதிர்ச்சியை மத்தியஸ்தம் செய்கின்றது.- அதிக இரத்த சிவப்பு நிறத்தை உருவாக்குகின்றது.- இதனால் உடலில் ஒட்சிசன்(O₂) போக்குவரத்தை மேம்படுத்துகின்றது.

அதிகரித்த EPO தொகுப்பு பக்கவிளைவுகள். பக்கவிளைவா! உடல் ஒரு நல்ல காரியத்தை செய்கின்றது என்றால் விரும்பத்தகாத ஒரு எதிர்வினை பக்கவிளைவுகள் கண்டிப்பாக இருக்கும். எடுத்துக்காட்டாக: நோய்கிருமிகளை எதிர்த்து ஆன்டி உடல்கள் வெளிப்படும்போது விரும்பத்தகாத காய்ச்சல் ஏற்படுகின்றது,

மகரந்தம் தூசி மூக்கில் நுழையும் போது அதை தடுப்பதற்கு விரும்பத்தகாத தும்மல் மூக்கில் நீர் வடிதல், சளி, மூக்கடைப்பு ஏற்படுகின்றது போல் எரித்ரோபொய்டின் (EPO) அதிகரிப்புக்கும் எதிர்வினை உண்டு அது சில சமயத்தில் மரணத்தை இட்டுச்செல்லும் அளவிற்கு கடுமையானதாக இருக்கும்.

  • அதிகரித்த இரத்த அழுத்தம்.

  • ஒவ்வாமை எதிர்வினை(உள்ளுறுப்புகள் வீக்கம்/புடைப்பு)

  • த்ரோம்போம்போலிக் நிகழ்வு.

  • அதிகரித்த இரத்த உறைவு உருவாக்கம்.


  • இரத்தம் மிகவும் தடிமனாக இருப்பது உயிருக்கு ஆபத்து. இரத்தக் கட்டிகள் மிக எளிதாக உருவாகலாம். மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

 

  • த்ரோம்போம்போலிக், இரத்தக் குழாய்களில் இரத்தக் கட்டிகள் (இரத்த துகள்கள்) உருவாகின்றன. எம்போலஸ் என்பது இரத்த ஓட்டத்தில் உள்ள தமனியைத் தடுக்கும் ஒரு இரத்த உறைவு ஆகும்.

 

கொரோனா(COVID-19) நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்களின் மரணத்திற்கு த்ரோம்போம்போலிக் நோய் ஒரு பொதுவான காரணமாகும்.


இதற்கும் கடுமையாக உடற் பயிற்சி செய்வதற்கும் திடீர் மரணத்திற்கும் என்ன சம்பந்தம். கடுமையாக உடற் பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஒருவருக்கு EPO அதிகரிக்கின்றது.


சாராம்சம்: 1) இதன் நிமித்தம் சிவப்பு இரத்த அணுக்கள் (எரித்ரோசைட்டுகள்) அதிகரித்து இரத்த சுற்றை அடைக்கின்றது.( எம்போலஸ்)


2) எரித்ரோபொய்டின் (EPO) ஒரு ஹார்மோனாகவும், ஓரளவு சைட்டோகைனாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. சைட்டோகைன் என்பது சர்க்கரை கொண்ட புரதமாகும், இது உடல் செல்களின் வளர்ச்சி மற்றும் வேறுபாட்டிற்கான ஒழுங்குமுறை செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இது பெப்டைட்களின் குழுவாகும், அவையின் முதன்மையான இலக்கு செல்களின் பெருக்கம் மற்றும் வேறுபாட்டைத் தொடங்குகின்றன அல்லது கட்டுப்படுத்துகின்றன.


3) சைட்டோகைன் புயல் நோய்க்குறி நுரையீரலில் அழற்சி சைட்டோகைன்களின் அளவு அதிகரிப்பது சில COVID-19 நோயாளிகளுக்கு ஏற்படுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தி சொந்த உடலுக்கு எதிராக செயல்படுகின்றது. அலர்ஜி ஏற்பட்டு தோல் தடிப்பது போல் சைட்டோகைன் செல்களை பெருக்கி வீக்கமடைய செய்து நுரையீரல் குமிழிகள் (ஆல்வியோலி) இரத்த தமனிகளை சுருங்க செய்கின்றது. கொரோனா வைரஸ், COVID-19 சாதாரணமாக நினைக்காதீர்கள் காரணம் தெரியாத மாரடைப்பு மரணங்களுக்கு காரணியானது.


4) எரித்ரோபொய்டின் (EPO) ஹார்மோன் குறைபாடு இரத்த சோகையை ஏற்படுத்தும், சிறுநீரக பாதிப்பு, சிறுநீரக மாற்று உள்ளவர்களுக்கு எரித்ரோபொய்டின் (EPO) குறைபாடு இருக்கும். இரத்த சோகை உள்ளவர்களுக்கு தலைச்சுற்றல், தலைவலி, அன்றாடம் நடவடிக்கையின் போது மூச்சுத் திணறல் மற்றும் மயக்கம், இதயம் படபடப்பு, சுவாசக்கோளாறு ஏற்படும்.


பொதுவாக பந்தய வீர்ர்கள் ஓட்டப் பந்தயம், கால்பந்து விளையாட்டு கடுமையான உடற்பயிற்சி செய்யும் வீர்ர்கள் விளையாட்டு களத்திலேயே இறப்பதற்கான காரணம் எரித்ரோபொய்டின் (EPO) அதிகரிப்பு ஒரு காரணமாக இருக்கலாம்.


திடீர் மரணங்கள் பல சமயங்களில் கொலஸ்ட்ரால் கொழுப்பு மேல் குற்றம் சாட்டிவிட்டு தன்னை தப்பவைத்துக் கொள்கின்றது திடீர் மரணங்களுக்கான காரணத்தை இது போன்று உடற்கூற்று வழியாகவும் மற்றும் வாழ்வியல் ரீதியான காரணிகள் நவீன தொழில்நுட்ப சாதனங்கள் உமிழும் கதிரலை கசிவுகள் 5G தொழில்நுட்பம் மிக நெருக்கமாக நம்மிடத்தில் வந்து கொண்டு இருக்கின்றது இதுவும் எதிர்காலத்தில் ஆபத்தாக மாறலாம். மின் ஒழுக்கும் ஆபத்தான ஒன்று இதயநோய் பக்கவாதம் வருவதற்கான மறைமுக காரணியாக இன்றும் இருக்கின்றது.


அப்படி ஏதாவது இருந்தால் கண்டிப்பாக பிரேத பரிசோதனையில் தெரியவரலாம்.


கடுமையாக உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் இரண்டு வருடத்திற்கு ஒரு முறையாவது இரத்த தானம் செய்வது நல்லது. உடல் ரீதியாக சமப்படுத்தும் பல காரணிகளை முன்வைத்து இதை பரிந்துரைக்கின்றேன். நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக