வெள்ளி, 19 நவம்பர், 2021

முடுக்கி விட்ட மரணத்தின் கடிகாரம் 11:59 கொரோனாவின் கால்தடங்கள்: உங்கள் பள்ளியில் கொரோனா வைரஸைப் பற்றி ஒரு கட்டுரை எழுதச்சொன்னால் எப்படி, எதிலிருந்து தொடங்குவீர்கள் இதை ஒரு முன்னோட்டமாக வைத்து நீங்கள் அறிந்தவை தெரிந்தவை சேகரித்த தகவல்கள்,

உங்கள் சமூகத்தில் உங்கள் கண் காதுகளுக்கு எட்டிய விடையங்கள், அரசு, மக்கள், எதிர்ப்பாளர்கள், எதிர்க்கருத்து சிந்தனையாளர்கள், சமூகவலைத்தளத்தின் விவாதங்கள் என்ன சொல்கின்றது, உங்கள் தனிப்பட்ட கருத்துகளை தொகுத்து எழுதுங்கள்.

கொரோனா வைரஸ் ( nCoV-19) வினோதமான ஒரு நாவல் அதை யாரும் படிக்காமல் இருக்கமுடியாது, படித்து முடித்து அலுமாரியில் வைத்தாலும் திரும்பவும் ஒரு கதையை சொல்லி திறக்கவைக்கின்றது, இது 2019 டிசம்பரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட பெரிய கொரோனா வைரஸ் குடும்பத்தின் புதிய வைரஸாகும். இதனுடைய பிறப்பிடம் பூர்வீகம் சீனா/ வௌவால்(.)

பிப்ரவரி 11, 2020 முதல் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட இந்த வைரஸுக்கு புதிய பெயர் SARS-CoV-2 இது இன்று ஆல்பா, டெல்டா என்று சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாறுபட்ட முகங்களுடன் சுற்றித்திரிகின்றது.

இதில் டெல்டா போன்ற ஒன்று இரண்டு வைரஸ்கள் தான் விகரமடைந்து எங்களை மிரட்டுகின்றது மற்றவையெல்லாம் பாதிப்பு இல்லாத சாதாரண குளிர் காய்ச்சல், ஜலதோஷத்தை ஏற்படுத்தும் இன்புளுவன்சா வைரஸ்க்கு இணையானது.

இருப்பினும் தீவிர நோயாளிகள், வயதானவர்கள், ஊட்டசத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் பலம் இழந்த நோய் எதிர்ப்பு உள்ளவர்களுக்கு பாதிப்பு இல்லாத கொரோனா வைரஸ்களும் கடுமையான சுவாச நோய் நிமோனியாவை ஏற்படுத்தும்.

கோவிட்-19 மற்றும் சார்ஸ்-கோவி-2 க்கும் இடையில் என்ன வித்தியாசம் கொரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு சொற்கள் சில நேரங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன இதற்கிடையில் பெயர்கள் மாறியிருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

கடுமையான சுவாச நோய்க்குறியின் Sars-CoV-1 இல் இருந்து திரிந்து சார்ஸ்-கோவி-2 ஆல் ஏற்படும் நுரையீரல் நோயானது கொரோனா வைரஸ் நோய் சுருக்கமாக கோவிட்-19 என்று அழைக்கப்படுகின்றது,

2002/2003 நவம்பர் 2002 இல் தொடங்கிய SARS-CoV ஆல் ஏற்படுத்திய கடுமையான சுவாச நோய் பாண்டமிக், சர்வதேச பரவலாக மாற முடியவில்லை அதற்கு காரணம், சார்ஸ்-கோவி-1தீவிர கடுமையான சுவாச நோய்க்குறியை தூண்டுகின்றது இருப்பினும் அது நுரையீரல் அடித்திசுக்களில் பரவியதால் அதனால் தீவிரமாக வெளி உலகில் பரவமுடியாமல் போனது இதனால் அது, அதனது அத்தியாசத்தை மூடிவிட்டது.

சார்ஸ்-கோவி அதனது அத்தியாசத்தை சீனா/கோவிட்-19 என்ற தலைப்பில் மீண்டும் தொடங்கின்றது. கொரோனா வைரஸ் (SARS-CoV-2) மரணத்தின் கடிகாரம் அது 2019இல் முடுக்கி விடப்பட்டிருக்கின்றது.

(SARS-CoV-2) சார்ஸ்-கோவி-2 இதனுடைய விரிவாக்கம் கடுமையான சுவாச நோய்க்குறி கொரோனா வைரஸ் வகை-2 என்பது ஒரு புதிய பீட்டா கொரோனா வைரஸாகும், இது 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் COVID-19 இன் காரணமாக அடையாளம் காணப்பட்டது. பீட்டா கொரோனா வைரஸ்களில் SARS-CoV மற்றும் MERS-CoV ஆகியவையும் அடங்கும். பூர்வீக கொரோனா வைரஸ்கள் நீண்ட காலமாக பாலூட்டிகள் மற்றும் பறவைகள் மத்தியில் பரவலாக உள்ள ஒரு வைரஸ்.

பூர்வீக வெளவால்கள் SARS-CoV-2 ஐ எடுத்துச் செல்வதில்லை கோவிட்-19 தொற்று ஏற்படும் அபாயமும் அவைகளிடத்தில் இருந்ததில்லை. அதாவது அவைகளிடம் SARS-CoV என்ற வைரஸ் வகையே இருந்ததில்லை, பூர்வீக வெளவால்களில் பாதிப்பில்லாத பீட்டா கொரோனா வைரஸ் மட்டுமே இருந்தது என்பது வெளவால்களை ஆய்வு செய்தவர்களின் கருத்து.

பொதுவாக வௌவால்கள் மனிதர்களைத் தவிர்க்கின்றன அவைகள் தங்கள் உணவுத்தேவையை பூர்த்தி செய்வதற்கு இரவு நேரத்தில் மனிதர்கள் வாழும் ஊருக்குள்ளே நுழைகின்றது, மனிதர்களின் நேரடி தொடர்பு இல்லாமல் வௌவால்களால் ஏற்படும் நோய் தொற்று கிட்டத்தட்ட சாத்தியமற்றது. அதாவது அவைகளிடம் ஒட்டியிருந்த பாதிப்பு இல்லாத வைரஸ்கள் தொற்றுக்கூட சாத்தியமற்றது.

ஆனால் அவைகளை உணவு, ஆய்வுகளின் தேவை கருதி பிடிக்கும்போது, வெளவால்கள் மற்றும் காட்டு விலங்குகள் மனிதனின் நேரடித் தொடர்பில் அவை பயத்தால் கடிக்கலாம், அதனுடைய நச்சு பற்கள், நகங்கள் வீட்டு/காட்டு விலங்குகளைப் போலவே நோய்களை பரப்புகின்றன என்பது நீண்டகாலமாக அறியப்பட்ட ஒன்று.

கொரோனா வைரஸ்கள், சளி முதல் ஆபத்தான நிமோனியா வரை பல்வேறு தீவிரத்தன்மை கொண்ட சுவாச நோய்களை ஏற்படுத்தும் ஒற்றைக்கால் RNA வைரஸாகும். திரும்பவும் முதலில் இருந்தா! கொரோனா வைரஸ்கள் பற்றி ஒரு தடவையல்ல நூறுதடவை படித்தாலும் புரியாது அதுவொரு மர்மநாவல்.

1930 களில் முதன்முதலில் வீட்டுக் கோழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஏராளமான கொரோனா வைரஸ்கள் விலங்குகளின் சுவாசக்குழாய், இரைப்பை குடல், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டலத்தில் நோய்களை ஏற்படுத்துகின்றன. இதில் 7 கொரோனா வைரஸ்கள் மட்டுமே மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்துவதாக அன்று அறியப்பட்டிருக்கின்றது.

7 கொரோனா வைரஸ்களில் நான்கு வைரஸ்கள் மட்டுமே சளி அறிகுறிகளுக்கு மிகவும் பொதுவான காரணியாகும். கொரோனா வைரஸ்கள் 229E, OC43, NL63 மற்றும் HKU1 ஆகியவை ஜலதோஷத்தில் 15 முதல் 30% வரை காரணமாகின்றன.

இந்த வைரஸ்கள் காரணமாக மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியா உள்ளிட்ட கடுமையான கீழ் சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகள் அரிதாகவே ஏற்படலாம், குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கும் அதிகளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தாது.

7 கொரோனா வைரஸ்களில் மூன்று மற்ற கொரோனா வைரஸ்களை விட மனிதர்களுக்கு மிகவும் கடுமையான மற்றும் சில சமயங்களில் ஆபத்தான சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகின்றன மற்றும் 21 ஆம் நூற்றாண்டில் அபாயகரமான நிமோனியாவின் பெரிய வெடிப்புகளை ஏற்படுத்தியது இது இன்றைய நிலவரம்.

(SARS-CoV-2) சார்ஸ்-கோவி-2 என்பது கொரோனா வைரஸ் நோய் 2019 (COVID-19) க்குக் காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது, இது 2019 இன் பிற்பகுதியில் சீனாவின் வுஹானில் தொடங்கி உலகம் முழுவதும் பரவியது. MERS-CoV 2012 இல் மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறியின் (MERS) காரணம் என கண்டறியப்பட்டது.

2002 இன் பிற்பகுதியில் சீனாவில் தொடங்கிய கடுமையான சுவாச நோய்க்குறியின் (SARS) வெடிப்புக்கான காரணம் SARS-CoV என அடையாளம் காணப்பட்டது.

கடுமையான சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் இந்த கொரோனா வைரஸ்கள், பாதிக்கப்பட்ட விலங்குகளில் ஏற்படும் ஜூனோடிக் நோய்க்கிருமிகள் மற்றும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகின்றன. SARS-CoV-2 குறிப்பிடத்தக்க நபருக்கு நபர் பரவுவதைக் காட்டுகின்றது.

இந்த வைரஸ் சார்ஸ்-கோவி-2 என்று அழைக்கப்படுகின்றது. கோவிட்-19 என்பது அது மரபணு பிறழ்வு அடைந்து பரவிய காலம் புதிய பிறழ்வு 2020 அக்டோபர் மாதம் B.1.617 இந்திய பிறழ்வு கோவி-2டெல்டா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தும் வகையில் பெருக்கம் அடைந்து கொண்டிருக்கின்றது.

ஐரோப்பா/ஜெர்மனியில் இந்த டெல்டா வைரஸ்தான் நான்காம் அலையை கிளறிவிட்டிருக்கின்றது இவைகள் அத்துனையும் ஏற்படுத்தும் நோய்க்காரணி, நோய்க்குறி நுரையீரல் நோய்.

கொரோனா வைரஸ் போல் இந்த கட்டுரையும் தொடங்கி இடத்தையே மீண்டும் மீண்டும் தொட்டு தொட்டு தொடர்கின்றது அதற்கு காரணம் 100 விழுக்காடு இன்னும் சார்ஸ்-கோவி-2 கொரோனா வைரஸை பற்றிய உண்மை தெரியாததுதான். சார்ஸ்-கோவி-2 முதலில் கண்டறியப்பட்டது சீனா/ வுஹானாக இருந்தாலும் அதனுடைய தொடக்கம் எதுவென்று இன்னும் சரியாக தெரியாது.

பூர்வீக கொரோனா வைரஸை பற்றிய தகவல்கள் அத்துனையும் உண்மையானவை, சார்ஸ்-கோவி-2 பற்றிய செய்திதான் தத்தெடுத்த அனுமானமாக இருக்கின்றது. பூர்வீக கொரோனா வைரஸ்கள் இதுவரை காலமும் எந்த மாற்றமும் அடையாமல் கடந்து வந்திருக்கின்றது அது நான்கு தடவைகள் 2002/2003, 2019/2020 அதனது கட்டுமானத்திலிருந்து உடைக்கப்பட்டிருக்கின்றது.

ஒன்று மட்டும் உண்மை, கொரோனா வைரஸ்களைவிட ஆபத்தானது எதுவென்றால் அது பரவிய வேகம். கடலில் பயணம் மேற்கொண்டவர் முதற்கொண்டு விமானத்தில் பறந்தவர், புதிதாக பிறந்த குழந்தை, காடுகளில் வசிப்பவர் வரை சார்ஸ்-கோவி-2 அதி வேகமாக தொட்டிருக்கின்றது.

பூர்வீக கொரோனா வைரஸ்களின் நோய்க்குறியும் நுரையீரல் சார்ந்த நோய்கள்தான். இதுவரை காலமும் இதை தாண்டி வேறு ஏதாவது நோய்க்குறிகளை இந்த வைரஸ்கள் ஏற்படுத்தி இருக்கின்றதா என்றால் இல்லை என்ற பதிலைத்தான் சொல்ல வேண்டும்.

புதிய சார்ஸ்-கோவி-2 வைரஸ்கள் சுவாச நோய்யுடன் இணைந்த வேறு ஏதாவது நோய்க்குறிகளையும் குறிப்பாக இதயம் சிறுநீரகம் சார்ந்த நோய்களையும் ஏற்படுத்தி வருகின்றதா என்று கேட்டால் இதற்கான பதிலையும் எதிர்காலம்தான் சொல்லவேண்டும் இந்த வைரஸ்களின் நீண்டகால பாதிப்புக்கள் இன்னும் பதிவாகவில்லை (…..)

ஒன்றுமட்டும் புரியவில்லை பிறந்த காலம் தொடங்கி தொற்று நோய்களுடன்தான் நாங்கள் வாழ்கின்றோம் அப்போது பரவாத வைரஸ்கள் இப்ப மட்டும் ஏன் இந்த வைரஸ் மட்டும் இவ்வளவு வேகமாக பரவுகின்றது(……) சார்ஸ்-கோவி-2 (கொரோனா வைரஸ் ) பற்றிய செய்திகளுக்கு எவராலும் முற்றுப்புள்ளி வைத்து முடித்துவிட முடியாது

அது அடுத்த தலைமுறையையும் தொடர வைக்கும். தடுப்பூசி போட்டவர்கள் சார்ஸ்-கோவி-2 வைரஸ்களின் தாக்குதலில்லிருந்து தங்களுக்கான ஒரு பாதுகாப்பை கொண்டவர்கள். மற்றும்படி அவர்கள் தொடர்ந்து கொரோனா வைரஸ்களை பரப்பும் நபராகத்தான் இருப்பார்கள் இதனால்தான் அது இவ்வளவு வேகமாக பரவுகின்றது.

மெசஞ்சர்(mRNA) தடுப்பூசி தொழில் நுட்பம்: அற்புதமான ஒரு தொழில் நுட்பம், கப்பல் உடைந்து கடலில் மூழ்கியவன், நீரில் மூழ்கி முத்தை எடுத்து கரை சேர்ந்தது போல் கொரோனா தொற்றிலும் மனிதனுக்கு கிடைத்த ஒரு முத்தாக மெசஞ்சர்(mRNA) தடுப்பூசி தொழில் நுட்பம் கிடைத்திருக்கின்றது.

பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த தொழில்நுட்பம் புற்றுநோய் தடுப்பு ஆய்வுகளில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது, இதை அப்படியே கொரோனாவுக்காக விஞ்ஞானிகள் மடைமாற்றினார்கள்.

பயோன்டெக்/ஜெர்மனி நிறுவனர்களான Özlem Türeci மற்றும் Ugur Sahin ஆகியோர் புற்றுநோய்க்கான மருந்தைத் தேடும் போது, ​​அவர்கள் கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்தனர். மெசஞ்சர்-RNA தடுப்பூசிகள் முதன்முதலில் 2002 மற்றும் 2003 க்கு இடையில் 20 வருடங்கள் மருத்துவ பரிசோதனைகளில் சோதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தடுப்பூசியில் சார்ஸ்-கோவி-2 வைரஸ்களின் எந்த துகள்களும் இல்லை, மாறாக செயற்கையாக தொகுக்கப்பட்ட அதனுடைய மரபணு வடிவம் மட்டுமே அதில் இருக்கின்றது. இது வைரஸின் DNA வரிசையிலிருந்து ஆய்வகத்தில் ஒப்பீட்டளவில் மிக எளிதாகவும் விரைவாகவும் தயாரிக்கலாம். அதாவது வேறு மூலத்திலிருந்து ஆய்வகத்தில் இந்த மெசஞ்சர் RNA வரிசையை தொகுக்கின்றார்கள்.

இது பாதுகாப்பாக லிப்பிட் என்னும் கொழுப்பு உறைக்குள்ளே அடைக்கப்பட்டு மெசஞ்சர் RNA என்று அழைக்கப்படும் வடிவத்தில் உடலுக்குள்ளே செலுத்தப்படுகின்றது.

எது தேவையோ அதை மட்டும் வெட்டி எடுத்து தொகுக்கின்றார்கள். ஒரு உதாரணத்திற்கு மாற்று அறுவைசிகிச்சைக்காக ஒரு மனித இதயம் மட்டும் தேவை என்றால், அதை உருவாக்கும் மரபணு DNA மட்டும் வெட்டி எடுத்து கருமுட்டைக்குள்ளே செலுத்தி வாடைகைத்தாய் கருவறைக்குள்ளே வைத்து வளர வைப்பது. சுருக்கமாக தேவையான உடல் உதிரிப்பாகங்களை மட்டும் உற்பத்தி செய்வது இது சாத்தியமான ஒன்று இருப்பினும் ஆய்வுகள் தடைசெய்யப்பட்டது.

இந்த தூதர் அல்லது வைரஸ் பற்றிய ஒரு செய்தியை RNA ஆன்டிஜெனை ( வைரஸ் முனை புரதம்) உற்பத்தி செய்ய செல்களுக்கு அறிவுறுத்துகின்றது.

ரைபோசோம்கள், புரதங்களின் அமினோ அமில வரிசை பற்றிய தகவலைக் கொண்டிருக்கும் டிஎன்ஏவின் அடிப்படை வரிசையின் படி புரதங்கள் அவற்றின் மீது உற்பத்தி செய்யப்படுகின்றன. அதாவது ரைபோசோம்கள் அனுப்பிய மெசஞ்சர் RNA வரிசை தகவலை வைத்துக்கொண்டு, ஆன்டிஜெனை ( வைரஸ் முனை புரதம்) உற்பத்தி செய்து வெளியிடுகின்றது,

இது சார்ஸ்-கோவி-2 வைரஸ்களின் முனை புரதத்திற்கு இணையானது இந்த அந்நிய உடலுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி, ஆன்டிஉடல்கள் உற்பத்தியாகி எதிர்த்து அழிக்கின்றது அடுத்து விரைந்து வரும் விழுங்கி செல்கள் இறந்த அந்நிய உடல் மற்றும் சண்டை நடந்த இடத்தை துப்பரவு செய்து தடுப்பூசி சம்பந்தப்பட்ட எந்த பொருள்களும் அங்கு இல்லாதவாறு துடைக்கப்படுகின்றது.

இதனுடன் அதை நினைவக B-செல்களிலும் பதிவு செய்தும் வைக்கின்றது உடலின் நோய் எதிர்ப்பில், அதனுடைய நினைவு மட்டும்தான் பதிவாகியிருக்கின்றது. உடலில் தடுப்பூசி சம்பந்தப்பட்ட எந்த பொருளும் தேங்கியிருப்பதில்லை, இத்துடன் தடுப்பூசியின் வேலை முடிகின்றது. இன்னொரு சந்தர்ப்பத்தில் இந்த உருவ அமைப்புடன் ஒரு அந்நியன் நுழைந்தால் அதை தாமதமில்லாமல் தாக்கி அழிக்கின்றது.

மடமைகளை நம்பாதீர்கள், உடலில் மைக்ரோசிப் போன்ற பொருட்கள் இருந்தால் உடனடியாக ஆன்டிஉடல்கள் எதிர்த்து போராடும் இது உங்களுக்கு தீராத காய்ச்சலை ஏற்படுத்தும் உடலில் எந்த அந்நிய பொருள்கள் இருந்தாலும் உடல் அதற்கு எதிர்ப்பை கண்டிப்பாக காட்டும்.

எடுத்துக்காட்டாக: உடல், மாற்று அறுவை சிகிச்சைசெய்த சிறுநீரகத்தையே ஏற்றுக்கொள்வதில்லை காலில் முள்ளு குத்தினால் உடல் அதற்கு எதிர்ப்பை தெரிவிக்க வலியை ஏற்படுத்தி அந்த முள்ளை எடுக்கும் வரைக்கும் உங்களை துங்கவிடாது.

ஒரு சிறிய முள்ளின் ஆர்ப்பு இருந்தாலே உங்களை என்ன பாடுபடுத்துகின்றது இரத்தத்தில் ஏதாவது அந்நிய துகள்கள் இருந்தால் நோய் எதிர்ப்பு சும்மா விட்டுவிடுமா….? உங்களுக்கு தெரியாமல் உங்கள் உடலில் ஒரு ஆணியை கூட செருகி வைக்கமுடியாது, கை கால் உடைந்து டைட்டான் பிளேட் பொருத்தியிருந்தாலும் சுற்றுலா பயணத்தின் போது விமான நிலையத்தில் அது இருப்பதை காட்டிக் கொடுத்துவிடும்.

செல்லப்பிராணிகளுக்கான சிறிய மைக்ரோசிப் என்பது உண்மைதான் ஒரு பூனை அல்லது நாயை அதன் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரை அடையாளப்படுத்த உதவும் குறியீடு சிப்பில் சேமிக்கப்படுகின்றது. உங்கள் வளர்ப்பு விலங்கு ஓடிப்போய் யாராவது கண்டுபிடித்தால், இந்த மைக்ரோசிப்பை படித்து உருமையாளரை கண்டுபிடிக்க உதவும்.

இந்த சிப் செல்லப்பிராணியின் மயிர் தோல் இடையில் பொருத்தப்படுகின்றது இதை வைத்துக்கொண்டு அந்தப்பிராணியை எந்த ஏவல் வேலையையும் செய்விக்க முடியாது அதற்குள்ளே இருப்பது வெறும் குறியீடு (கோட்) மட்டுமே இதுவும் விமான நிலையத்தில் படிக்கப்படுகின்றது.

தென்னாப்பிரிக்கா புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு B.1.1.529 உலக-சுகாதார-அமைப்பு (WHO) கோவிட்-19 கொரோனா வைரஸ்களில் நான்கு கவலைக்குரிய வகைகளை பட்டியலிட்டுள்ளது.

இதை சுருக்கமாக ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா இது கடுமையான சுவாச நோய்க்குறியின் Sars-CoV-1 இல் இருந்து திரிந்து சார்ஸ்-கோவி-2 ஆல் ஏற்படும் நுரையீரல் நோயானது கொரோனா வைரஸ் நோய் சுருக்கமாக கோவிட்-19 என்று அழைக்கப்படுகின்றது,

இதிலிருந்து இன்னும் பல வகையான வைரஸ்கள் திரிந்து கொண்டே செல்கின்றது இன்று நவம்பர் 26, வெள்ளிக்கிழமை காலை 6:00 முதல், தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு B.1.1.529 பற்றி WHO ஆராய்ந்து வருகின்றது. இதனுடைய பாதிப்புக்கள் எவ்வளவு தூரம் இருக்கும் தற்போது நடைமுறையிலுள்ள தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவம், தடுப்பூசி, மருந்து மாத்திரைகள் எதிராக செயல்படும் திறன் உள்ளதா,

இதை பற்றி மருத்துவ நிபுணர்களின் கருத்து: தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மாறுபாட்டிற்கு எதிராக தற்போது கிடைக்கும் கொரோனா தடுப்பூசிகள் குறைவான செயல்திறன் கொண்டவையாக இருக்கும் என்று பிரிட்டிஷ் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் உறுதியாக சொல்கின்றார்கள்.

இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்கள் தரையிறங்க ஐரோப்பா நாடுகள் உட்பட பல நாடுகள் தடை விதித்துவருகின்றன. இதை போல் இன்னும் எத்தனை பிறழ்வுகள் வரப்போகின்றது என்பதை எதிர்காலம்தான் பதில் சொல்லவேண்டும். இது நவம்பர் 26, 2021 கோவிட்-19 பற்றிய ஒரு ஆவண பதிவு

தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் அது உங்களை கடுமையான நுரையீரல் பாதிப்பிலிருந்து 90 விழுக்காடுகள் காப்பாற்றித்தரும். நன்றி

ஆல்பா கொரோனா வைரஸ்

நாய் கொரோனா வைரஸ்

பூனைக்குட்டி கொரோனா வைரஸ்

வௌவால் கொரோனா வைரஸ்(HKU2, HKU8)

விலங்கு சுவாச அழற்சி கோரோனா வைரஸ்

மனித கொரோனா வைரஸ்(229E, NL63)

 

டெல்டா கொரோனா வைரஸ்

புல்புல் பறவை கொரோனா வைரஸ்(HKU11)

த்ரஷ் பறவை கொரோனா வைரஸ்(HKU12)

முனியா பறவை கொரோனா வைரஸ்(HKU13)

பன்றி கொரோனா வைரஸ்(HKU14)

 

பீட்டா கொரோனா வைரஸ்

மனித கொரோனா வைரஸ்(OC43,HKU1)

CoV (SARS-CoV), (MERS-CoV)…….. CoV2(SARS-CoV2)

வௌவால் கொரோனா வைரஸ் HKU4,5,9)

முள்ளம்பன்றி கொரோனா வைரஸ்

பசு மாடு கொரோனா வைரஸ்

நாய் கொரோனா வைரஸ்

குதிரை கொரோனா வைரஸ்

 

காமா கொரோனா வைரஸ்

பெலுகா திமிங்கலம் கொரோனா வைரஸ்(SE1)

கடல்தொற்று மூச்சுக்குழாய் அழற்சி வைரஸ்

 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக