ஆஸ்பெர்கர்-சின்ரோம் (நோய்க்குறி) ஒரு மழலையின் வாயிலிருந்து உமிழியை எடுப்பதும் ஒன்றுதான் ஒரு இளம்பெண்னின் கையிலிருந்து மொபைல் போனை பிடுங்குவதும் ஒன்றுதான் இருவருமே கத்திக் கூச்சல் போடுவார்கள். இந்த குழந்தை மனம் வளர்ந்த பிறகும் இருக்கும் ஒரு நோயைப்பற்றித்தான் இந்த கட்டுரையில் பேசப்போகின்றேன்.
ஐரோப்பாவில் வாழும் பல குழந்தைகள் ஆஸ்பெர்கர் சின்ரோம், ஆட்டிசம் மனக்குலைவு என்னும் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுவருகின்றார்கள்.
குறும்புக்கார பசங்க உங்கள் வீட்டு அழைப்பு மணியை அழுத்திவிட்டு ஓடிமறைந்தால் உங்கள் எதிர்வினை என்னவாக இருக்கும்.இந்த குழந்தைகள் தினமும் எங்கள் வீட்டு அழைப்பு மணியை அழுத்திவிட்டு ஓடி மறைந்து கொள்வார்கள், ஓடி வந்து எட்டிப்பார்த்தால் யாரும் அங்கு இருக்கமாட்டார்கள் ஓடும் சத்தம் மட்டும் கேட்கும் இந்த குழந்தைகளை காலப்போக்கில் புரிந்து கொண்டோம்.
வயதான காலத்திலும் ஓய்வின்றி மன உடல் நினைவக கோளாறு உள்ள பிள்ளைகளை சுமக்கும் பெற்றவர்களை சிந்தித்து பார்த்தேன் அவர்கள். எவ்வளவு அழுத்தத்தில் இருப்பார்கள் என்று, இவர்களை நான் நேரில் பார்த்து பழகி புரிந்து கொண்ட பல தகவல்களை கோர்வையாக்கி இதில் எழுதியிருக்கின்றேன்.
ஆஸ்பெர்கர் சின்ரோம் என்பது: ஆட்டிசம், மனக்குலைவு நோய்க்குறிகளுக்கு இணையானது, இருப்பினும் சற்று வேறுபடுகின்றது. ஆஸ்பெர்கர் சின்ரோம் பிறப்பிலிருந்து வருகின்ற ஒரு குறைபாடு, ஆட்டிசம் பின்னால் வாழ்வியலை தழுவி ஏற்படுகின்றது. இரண்டுமே வாழ்வியலை தழுவியது இருப்பினும் குழந்தை பிறப்பிற்கு முன்னால் மற்றது குழந்தை பிறப்பிற்கு பின்னால் பெற்றோரின் வாழ்வியலை தழுவியது.
வயது வந்தோருக்கான ஆஸ்பெர்கர் நோய்க்குறி: ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு சமூக தொடர்பு, மற்றும் பச்சாதாபம்( மற்றொரு நபரின் உணர்வுகள், உணர்ச்சிகள், எண்ணங்கள், நோக்கங்களை புரிந்து கொள்வதில் சிக்கல்களுடன் தொடர்புடையது). எடுத்துக்காட்டாக, குழந்தை பருவ மன இறுக்கத்தை விட அறிகுறிகள் லேசானவை என்பதால், நோய் சில சமயங்களில் முதிர்வயது வரை கண்டறியப்படாமல் போகும்.
ஒரு மனசிதைவு உளவியல் மன அழுத்தம் மற்றும் சமூக தொடர்புகள் ஒரு தாக்கத்தை இவர்களில் ஏற்படுத்துகின்றது. எடுத்துக்காட்டாக: தெருவில் யாராவது ஒருவர் குப்பையை போட்டால் அதை எடுக்கும் வரைக்கும் அந்த இடத்தை விட்டு நகரமாட்டாங்கள்.
இவர்களுக்கு தாங்கள் வைத்தது போல் எல்லாமே ஒழுங்காக இருக்கவேண்டும். வீட்டு வாசலில் காலணிகளை ஒழுங்காக வைக்காமல் கலைத்து போட்டிருந்தால் தூக்கி குப்பை தொட்டியில் எறிந்துவிட்டு, பேசாமல் வந்திருப்பார்கள். மிக பிரபலமான சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் இந்த ஆஸ்பெர்கர் நோய்க்குறியினால் பாதிக்கப்பட்டிருப்பவர்தான்.
ஆஸ்பெர்கர் நோய்க்குறி உள்ளவர்களின் அறைப் பொருட்களை தாறுமாறாக மாற்றி வைத்தால் அன்றுபூராகவும் வீடு அமர்க்களமாக இருக்கும், துணிகள், முகம் துடைக்கும் துண்டு, சோப்பு, சாப்பிடும் தட்டு வரை யாரையும் பயன்படுத்த அனுமதிக்கமாட்டார்கள் இவர்கள் தங்களுக்காகவே அதை தனிமைபடுத்தி வைத்துக் கொள்வார்கள்.
கையை யாராவது தொட்டு சுகம் விசாரித்தால் அன்று பூராகவும் சவர்க்காரம் போட்டு கையை கழுவிக்கொண்டே இருப்பார்கள். ஒரு அழுத்தமான மன நிலை, தங்களுக்கான ஒரு வட்டம் அதற்குள்ளே வாழ்பவர்கள் இவர்கள், யாரையும் தொந்தரவு செய்யமாட்டார்கள். சர்க்கரையை கூட கழுவி சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள்.
கூச்ச சுபாவம், பய உணர்வு ஒரு சின்ன பூச்சி பறந்தாலே பயந்து ஒதுங்குவார்கள் மற்றும் மற்றவர்களிடம் ஆயிரம்முறை கருத்து கேட்பது, சங்கடமான அசைவுகள். மோட்டார் ஒருங்கிணைப்பு கோளாறுகள் தன்னை சமநிலைபடுத்தி நடப்பதில் கோளாறு, சடங்கு செய்யப்பட்ட இயக்க முறைகள், அதாவது ஒரு நளினம், சிரிச்ச முகபாவம் அபிநய நடை யாராவது வழியில் நின்றால் சுவர் ஓரமாக ஒதுங்கி நடப்பது.
உறக்கம் இவர்களுக்கு பிடித்தமான ஒன்று, வீட்டு வேலைகள், எட்டிக்கூட பார்க்கமாட்டார்கள் வேலைக்கள்ளிக்கு பிள்ளை பிராக்கு என்று இவர்களின் செயல்பாடிருக்கும்
இவர்கள் சமூக தொடர்புகளை ஏற்படுத்துவதில் வரம்புகள் வைத்துக் கொள்பவர்கள் யாரையும் அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் சமூக தொடர்புகளில் சிக்கல்கள் குறைக்கப்பட்ட மகிழ்ச்சி உணர்ச்சி உலகம் இவர்களை சார்ந்தது. பற்றாக்குறைகள், அனுதாபம் மனதின் பாதிப்புக் கோட்பாடு குறைபாடுகள் அதாவது நாளைக்கே உலகம் அழியுது என்பது போன்ற இடையூறு கோட்பாடுகள் இவர்களை பீடித்திருக்கும்.
இந்த நோய்குறிகள் ஆஸ்பெர்கர் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட அத்துனை பிள்ளைகளுக்கும் இருக்குமா என்றால் கிடையாது. இதில் ஒன்று இரண்டு மந்தமாகவும். பெரும்பாலும் மற்றவைகள் வெளிப்படையாகவும் தெரியலாம்.
சுமார் ஒரு பிள்ளையின் 3 வயதிலிருந்தே முதல் அறிகுறிகள் தெரியத் தொடங்குகின்றது அதாவது தவளுதல் நடக்கும் பருவம், பெரும்பாலும் தாமதமான மோட்டார் வளர்ச்சி, சமநிலை இல்லாத நடை, விகாரமான தன்மை, இழுத்த கோணலான முகம் ஒரே மாதிரியான நடத்தை, மோசமான சமூக தொடர்பு திறன், மற்றவர்களை பார்த்து பிரதி எடுத்த நடவடிக்கைகள்.
சில மாறபட்ட முகபாவங்கள், பெரும்பாலும் சுய பேச்சு(தனக்குத்தானே பேசுவது). மற்றும் இவர்களுக்குள்ளே ஏதாவது ஒரு சில சிறப்பு ஆர்வங்கள் இருக்கும், பாடுவது, ஒன்றை மனனம் செய்து ஒப்பிவிப்பது. இன்னும் தனித்துவமான பல மறைமுகமான உடல் மனம் சார்ந்த நோய்குறிகள் இவர்களுக்குள்ள இருக்கலாம். இவர்களில் வெளிப்படையாக தெரியும் அறிகுறிகள் இது,
சரி இருக்கட்டும் ஆஸ்பெர்கர் சின்ரோம் குறைபாடு எதனால் வருகின்றது. பொதுவான காரணங்கள் முழுக்க முழுக்க எங்களுடைய வாழ்வியல் உணவு, வாழ்க்கை தரம் பழக்கவழக்கங்கள், குடும்ப மோதல்கள். மற்றும் ஆபத்தான காரணிகள்: மரபணு காரணிகள், இரத்த உறவுகளுக்குள்ளே திருமணம் செய்து கொள்ளுதல் குடும்ப வரலாற்றின் பின்னனி தொகுப்பு
வயதான பெற்றோரின் பிறப்பு, கர்ப்ப காலத்தில் ஏற்படும் தாய்வழி தொற்றுகள், முன்கூட்டிய பிறப்பு, குறைமாதக்குழந்தை, தாய்க்கு நீரிழிவு/சர்க்கரை நோய் இருப்பது முன்னால் கருக்கலைப்பு மாத்திரைகளின் பயன்பாடு, மதுபானம், புகைத்தல் கர்ப்ப காலத்தில் மருந்துகளின் பயன்பாடு போன்ற பிற காரணிகள் உட்பட பல காரணிகள் சம்பந்தப்பட்டிருக்கலாம்.
முன்கணிப்பு: ஆஸ்பெர்ஜர் குறைபாட்டினை குணப்படுத்த முடியாது, இருப்பினும் உளவியல் மன அழுத்த சிகிச்சை மற்றும் சமூக தொடர்பு ஆகியவை நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மனநலம், ஆட்டிசம் மற்றும் நரம்பியல் பரிசோதனைகள் சிகிச்சை மற்றும் ஒழுங்கு படுத்தப்பட்ட நல்ல நடத்தை, தகவல் தொடர்பு பயிற்சி, ஆதரவான தொழில் சிகிச்சை, சிறிய கைப்பணி வேலை, பிசியோதெரபி, உறவினர்களின் அரவணைப்பு மகிழ்சியான வாழ்க்கை சூழல் அவர்கள் விரும்பியதை செய்ய அணுமதிப்பது அவர்களை ஓரளவிற்கு மீட்டெடுக்க உதவும். நன்றி.
படத்திலுள்ள வசனங்கள்: ஆஸ்பெர்கர் சின்ரோம்; இந்த குறைபாடு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரமின் ஒரு பகுதியாகும் இந்த குழந்தைகள் பொதுவாக புத்திசாலிகள். தனித்துவமானவர்கள் அன்பான, விகாரமான முகபாவம் மற்றும் சில சமயங்களில் அவர்களை புரிந்துகொள்வது கடினம். அவர்கள் மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்வது என்பது பெரும்பாலும் அவர்களுக்கு புரியாது.
தங்கள் விருப்பத்திற்கு ஏற்றாப்போல் நடந்து கொள்வார்கள் தன்னுடைய செய்கை, நடவடிக்கைகளை மற்றவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது அவர்களுக்கு கடினமாக உள்ளது.
சுருக்கமான எடுத்துகாட்டாக, ஒரு 1000 ஐரோ நோட்டில் காந்தி படம் இருக்குது என்று வைத்துக்கொண்டால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு காந்தி படம் பிடித்திருந்தால் பணத்தை பற்றி கவலைப்படாமல் காந்தியை மட்டும் வெட்டியெடுத்து தனது பாட புத்தகத்தில் ஒட்டி வைத்துக்கொள்ளும்.
குழந்தை சில சமயங்களில் இது போன்ற எளிமையான விஷயங்களைப் புரிந்து கொள்வதில்லை. பெரும்பாலும் அவர்களால் அவர்களையும் அவர்களை சுற்றியுள்ளவர்களையும் புரிந்துகொள்ள முடியாது. தாங்கள் பொய் சொல்வது கூட பெரிய தவறு என்றுகூட தெரியாது.மொழியறிவு, பேச்சுத்திறன் மந்தமான திக்கு வாய் பேச்சாகத்தான் இருக்கும். இது போன்று குழந்தைகளின் பிரத்தியேக குண நடைகளை வைத்து இந்த ஆஸ்பெர்கர் நோயை அடையாள படுத்திக்கொள்ளமுடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக