ஞாயிறு, 31 அக்டோபர், 2021

குறட்டை (Snoring) உறக்கத்தில் ஒருவர் விடும் குறட்டை சத்தம், குடும்ப உறுப்பினர்களை கூட வெறுப்படைய வைக்கும் அளவிற்கு அவ்வளவு மோசமான அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடியது. இருப்பினும் குறட்டை ஒரு நோய் கிடையாது பல நோய்களுக்கான ஒரு வெளிப்பாடு, குறிப்பாக ஆழ்ந்த உறக்கத்தில் தன்னிச்சையாக சுவாசிப்பதை கடினப்படுத்துவதை சுட்டிக்காட்டுகின்றது.

அதாவது சுவாசக்காற்று ஒட்சிசன்-O2 குறைபாடு ஏற்படுகின்றது. இதன் நிமித்தம் மூளையில் ஏற்படும் ஒட்சிசன்-O2 குறைபாடு கெட்ட கெட்ட கனவுகள், பயம் பீதி, காலையில் உடல் மன சோர்வு, புத்தி தெளிவின்மை குழப்பங்கள் எரிச்சல் மிகிந்த நாளாக அன்று கடக்கின்றது. குறட்டை பரம்பரையாக வரக்கூடியது பல சமயங்களில் குறட்டைக்கு காரணங்கள் எதுவும் தெரியாது ஆனால் இருக்கும் தாய் மூலம் பிள்ளைகளுக்கு கடத்தப்படுகின்றது.

மருத்துவ வரையறையின்படி, குறட்டை என்பது மேல் சுவாசக்குழாய்களில் தூக்கத்தின் போது ஏற்படும் சுவாச ஒலி, இவை மூக்கின் நுனியில் இருந்து குரல் நாண்கள் வரை இருக்கும். இதன் பொருள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மென்மையான திசுக்கள் ஒரே நேரத்தில் அதிர்வுறுகின்றது,(50-70dB கோரஸ் சவுண்ட்) அதி வேகமாக செல்லும் டிரக்/கார் 60 முதல் 80 dB சத்தம் வரை அடையலாம் இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

பெரும்பாலான நேரங்களில், குறட்டைக்கு ஒரே நேரத்தில் பல காரணங்கள் உள்ளன, குறிப்பாக பழுதுபட்ட நாசி சளி ச்சவ்வு, நசுக்கப்பட்ட நாசி வளையம், வளர்ந்த அண்ணாக்கு அவை பெரும்பாலும் பரஸ்பரம் தூங்கும் நபரின் மேல் சுவாசக் குழாயில் உருவாகும் ஒலிக்கு வலுவூட்டுகின்றது.

உடல் பருமன், கடின உழைப்பின் அசதியினால் வாய் வழி சுவாசத்தினால் வரக்கூடிய இந்த குறட்டை நீண்ட காலமாக ஒருவருக்கு இருக்கும் பட்சத்தில், தீராத தலையிடி, அதனை தொடர்ந்து வரக்கூடிய மூளை தமனிகளில் ஏற்படும் புடைப்பு, இரத்த கசிவு பக்கவாதம் வரை இட்டுச்செல்லும்.

குறட்டை இரண்டு நிலைப்பாடுகள் மூலம் தன்னை வெளிப்படுத்துகின்றது, ஒன்று இயல்பான குறட்டை, இது அலர்ஜி, குளிர் காற்றில் சளி மூக்கடைப்பு அசதி ஏற்படும் போது வந்து வந்து போகும் அதிகம் பாதிப்பு இல்லாதது மற்றது உடல் ரீதியான கோளாறுகளினால் வரக்கூடியது. குறிப்பாக நாசி சளிச்சவ்வு அடைப்பு, உறங்கும் போது குரல் நாண்கள் தளர்ந்து போவது. நாக்கு அசைவின்றி இருக்கும்போது இந்த நாண்களும் ஓய்வு எடுக்கின்றது இதனால் நாக்கு பாரத்தில் கீழே இறங்குகின்றது.

பொதுவாக குறட்டையானது தூக்கத்தில் மூச்சுத்திணறல் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான முன்னோடியாகும், இது தீவிரமானால், சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தானதாக மாறலாம். குறட்டை, பெண்களை விட 🚺40% ஆண்களையே அதிகம் பாதிக்கின்றது 🚹60% கடின உழைப்பின் அசதி, மதுபானம், புகைத்தல் மற்றும் முதிர்வயது ஹார்மோன் சமநிலை பாதிப்பு. குறிப்பாக பெண்ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன் குறைபாடு.

பெண்களின் மாதாந்திர சுழற்சி நான்கு ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகின்றது: FSH (ஃபோலிட்ரோபின், நுண்ணறை தூண்டும் ஹார்மோன்) ஈஸ்ட்ரோஜன். புரோஜெஸ்ட்டிரோன். ஈஸ்ட்ரோஜன் குறைபாடு, கருத்தடை மாத்திரை பயன்பாடு, உடல் பருமன், தொப்பை, உடற்பயிற்சியின்மை குறட்டைக்கு இரண்டாம் நிலை காரணியாக அமைகின்றது.

வயதான காலத்தில் ஏற்படும் குறட்டை ஒலி இயல்பானது இருந்தும் காரணம் அறியாத மரணங்களுக்கு வழியை திறந்துவிடுகின்றது. சாதாரண குறட்டை தானே என்று இருந்து விடாதீர்கள், இதற்கான சிகிச்சி முறைகள் நிறைய உண்டு, தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை மூலம் பழுதுபட்ட நாசி சளி ச்சவ்வு, வளர்ந்து தொங்கும் அண்ணாக்கை நீக்கிவிட முடியும்.

குறட்டைக்கான சரியான காரணிகள் தெரியாமல் கைமருத்துவம் செய்து உடம்பை கெடுத்துக்கொள்ளாதீர்கள் சுய மருத்துவம் உடல் நலக்கேடு என்பதை நினைவில் வைத்து நல்ல காது-தொண்டை-மூக்கு மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்ல தீர்வுக்கு வழியை ஏற்படுத்திதரும்.

இயல்பு தவறுகளினால் ஏற்படும் குறட்டையை சரி செய்வதற்கான வழிகள் மல்லாக்க படுக்காமல் பக்கவாட்டில் படுத்துறங்குவது இயல்பான குறட்டை ஒலியை தடுக்கமுடியும் காரணம் மல்லாக்க படுக்கும் போது நாக்கு மற்றும் அதை சுற்றியுள்ள குரல் நாண்கள் கீழே இறங்கி சுவாச வழியை அடைக்கின்றது, ஒட்சிசன்-O₂ பற்றாக்குறை, மூளை சடுதியாக ஏற்பட்ட அடைப்பை திறந்து விட சமிக்கையை கொடுக்கின்றது,

இது ஒரு செருமலை உண்டாக்கி நாக்கை வெளியே தள்ளி வழியை திறந்து விடுகின்றது. இது சொல்லாமல் சொல்கின்றது மூச்சு முட்டி சாகப் போகிறாய் ஒட்சிசன்-O₂பற்றாக்குறை எழுந்திரு என்று உறக்கத்தையும் கலைத்து விழிப்பு சுவாசத்திற்கு ஏற்பாடு செய்கின்றது. மரணம் பல வழிகளை வைத்திருக்கின்றது அதில் இதுவும் ஒன்று.

மதுபானம், புகைத்தல், உடல் பருமன் தொப்பையை குறைத்தல் போன்ற நடவடிக்கை மூலம் சாதாரண குறட்டையை சரி செய்து கொள்ளமுடியும். சாராம்சம்: தொண்டை, நாசிவழியில் ஏற்படும் இட நெருக்கடியே 95 விழுக்காடுகள் பெரும்பாலான குறட்டைக்கு காரணியானது.

மூக்கு, நாசி சளிச்சவ்வு அடைப்பு: இத்தகைய மாற்றங்கள் உடற்கூறியல் ரீதியாக ஏற்படலாம் செப்டமின் வளைவு, எலும்பு ஸ்பர்ஸ் /பெரிய டர்பினேட்டுகள் அல்லது தற்காலிக வீக்கம், அடைப்புகள் (.கா. நாசியழற்சி அல்லது ஒவ்வாமை போன்றவை). குறட்டைக்கு மூக்கு ஒரு பொதுவான காரணமாக இருக்கலாம்.

தூக்கத்தில் மூச்சுத்திணறல், குறட்டை்கான சிகிச்சை விருப்பங்கள்:  இது போன்று மருத்துவ  சந்தையில் நிறைய உண்டு, உங்களுக்கு பொருத்தமான ஒன்றை தெரிவுசெய்து பயன்படுத்தி பார்க்கலாம், சரிசெய்ய முடியாமல் போகும் பட்சத்தில்  காது-தொண்டை-முக்கு மருத்துவரை கலந்தாலோசிப்பது சாலச்சிறந்தது.

நாம் ஏன் குறட்டை விடுகிறோம்? குறட்டை என்பது ஒரு உறங்கும் நபரின் மேல் சுவாசக் குழாயில் எழும் ஒரு கதறல் ஒலியாகும். குறட்டை அல்லது ரொன்கோபதி மேலே உள்ள அறிகுறியால் ஏற்படும் உறக்கக்கோளாறு என்றும் அழைக்கப்படுகின்றது.

சாத்தியமான காரணங்கள்: குறட்டை சத்தம் அண்ணம் மற்றும் அண்ணாக்கு படபடப்பு அதிர்வு  இயக்கங்களால் ஏற்படுகின்றது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மென்மையான திசுக்கள் ஒரே நேரத்தில் அதிர்வுறுகின்றது, சில சமயங்களில் நாக்கின் அடிப்பகுதி மற்றும் சுவாசிக்கும்போது தொண்டை. சில சந்தர்ப்பங்களில் இது நாசி அடைப்பு காரணமாக ஏற்படலாம்.

நீ்ண்டகால குறட்டை/சுவாசத்தடை,  மூளைக்கான ஒட்சிசன்  (O₂) பற்றாக்குறையை சுட்டிக்காட்டுகின்றது. இது புத்தி மக்கு, சோம்பல், எரிச்சல்மூளைக் குழப்பங்கள், எதிர்காலத்தில் உயி்ர் ஆபத்து, பக்கவாதம்  ஏற்படுவதற்கான காரணியாக அமையலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக