திங்கள், 6 செப்டம்பர், 2021

அஸ்பாரகஸ் (Spargel-ஜெர்மன்) அஸ்பாரகஸ் முளையில் குறைந்த கலோரி மற்றும் கூடிய விற்றமின்கள் உள்ளது, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், தாமிரம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல ஆரோக்கியமான தாதுக்கள் உள்ளன. இவைகள் இதயம், எலும்புகள் மற்றும் இரத்த சுழற்சிக்கு மிகவும் நல்லது. அஸ்பாரகஸில் விற்றமின் சி, ஈ அதிகளவில் உள்ளன,

இதில் குறிப்பாக மிகவும் முக்கியமான ஃபோலிக் அமிலம்(விற்றமின் 9) நிறைந்து காணப்படுகின்றது. மற்றபடி விற்றமின் பி வளாகம் சிறிய அளவில் மட்டுமே உள்ளது. சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

பச்சை/வெள்ளை, இரண்டு வகைகளும் மிகவும் ஆரோக்கியமானவை. வசந்த கால தொடக்கத்தில் இது அறுவடையாகி சந்தைக்கு வருகின்றது.

இதை எப்படி சமைப்பது அதிலுள்ள மெல்லிய தோலை சீவி ஒரு உசரமான பாத்திரத்தில் முளை வெளியில் தெரியும்படி முக்கால் பங்கு தண்ணீர் ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு,சர்க்கரை சிறிய அளவு பட்டர் மற்றும் பாதியாக நறுக்கிய தோடம்பழத்தை சேர்த்து பாத்திரத்தை மூடி மெதுவாக பனங்கிழங்கு அவிப்பது போல் பதம் பார்த்து அவித்து எடுத்து. உங்கள் விருப்பம் போல் சாலட், சூப், அல்லது இறைச்சி, அவித்த உருளைக்கிழங்கு உணவுடன் பட்டர் சாஸ் ஊற்றி பரிமாறுங்கள்.

பாத்திரத்தில் செங்குத்தாக வைத்து அடிப்பகுதி மட்டும் நீரில் அவிந்தால் போதுமானது மற்றும்படி முளை முனைப்பகுதி நீராவி பட்டு அவியும்படி பாத்திரத்தின் நீரை சரிபார்த்துக்கொள்ளுங்கள். இதற்காக பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட பாத்திரங்கள், ஹாலண்டேஸ் சாஸ் பல்பொருள் அங்காடி/சூப்பர் மார்க்கட்டில் கிடைக்கின்றது அல்லது நீங்களாகவே சாஸ் தயாரிக்கமுடியும்.

சாஸ் தயாரிக்க தேவையான பொருட்கள்: பட்டர்/வெண்ணைய் தேவையை பொறுத்து 3-4 முட்டையின் மஞ்சள் கரு, உப்பு 4-5 தேக்கரண்டி எலுமிச்சை சாறு,

செய்முறை விளக்கம்: வெண்ணெயை ஒரு சிறிய வாணலியில் மிதமான தீயில் உருக்கி அடுப்பில் இருந்து அகற்றி தனியாக வைத்துக் கொள்ளவும். இன்னுமொரு பாத்திரத்தில் முட்டையின் மஞ்சள் கருவை 50 மில்லி தண்ணீர், தண்ணீருக்கு பதில் வெள்ளை திராட்சை ஓயின் பயன்படுத்தலாம் உப்பு மற்றும் 4-5 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து,

ஒரு பாத்திரத்தில் வைத்து, ஒரு சூடான, கொதிக்காத நீர் குளியல் மீது கைவிசையாக முட்டை அடிக்க பயன்படுத்தும் (Whisk ) சுழல்-துடைப்பம் கொண்டு மெதுவாக அடிக்கவும் . பின்னர் அதை இறக்கி, கிளறும்போது, ​​முதலில் உருக்கி வைத்த வெண்ணையை ஊற்றவும், முதலில் சொட்டு சொட்டாக ஊற்றவும்,

பின்னர் மெல்லிய நீரோட்டத்தில் சாஸ் கிரீமி மற்றும் பளபளப்பாக இருக்கும் பட்சத்தில் அது தயாராகிவிட்டதை காட்டுகின்றது. உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சுவையை சரி பார்க்கவும். இப்ப உங்களுக்கு நீங்களாகவே தயாரித்த சுவையான ஒரு அஸ்பாரகஸ் சாஸ் தயார்.

அஸ்பாரகஸ் சாப்பிட்டால் சிறுநீர் நாற்றமெடுக்கும். எதற்காக அஸ்பாரகஸ் சாப்பிட்டால் சிறுநீர் நாற்றமெடுக்கின்றது. அஸ்பாரகஸை சாப்பிட்ட பிறகு சிறுநீர் விரும்பத்தகாத வாசனை அடிக்கின்றது இதற்கான காரணம்

அஸ்பாரகஸ் முளையில் காணப்படும் சல்பர்/கந்தகம் போன்ற அஸ்பார்டிக் அமிலத்தை கந்தக பொருட்களாக உடைக்கும் ஒரு நொதியம் பாதிக்கும் மேல் உள்ள அத்துனை  மக்களிலும் காணப்படுகின்றது உடைக்கப்பட்ட கந்தகம் சிறுநீருடன் வெளியேறும்போது விரும்பத்தகாத வாசனையைக் கொண்டுள்ளது

இந்த உலகத்தின் மூர்க்கத்தை கண்டு அஞ்சாதே, நீ உன்னை வாழத் தகுதியுள்ளவனாக மாற்றிக்கொள்.” நீ உன்னை மாற்றிக்கொள்ளும் வரை இந்த உலகம் உனக்கு இருட்டாகத்தான் இருக்கும்”


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக