வியாழன், 2 செப்டம்பர், 2021

யாருக்கெல்லாம் மூன்றாவது ஊக்க தடுப்பூசி (பூஸ்டர்) முக்கியமானதாக இருக்கும்.

- முதியவர்கள், வலுவிழந்த நோய் எதிர்ப்பு உள்ளவர்கள்.

- கடுமையான நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள்.

- மாற்று அறுவைசிகிச்சைக்கு உட்பட்டு மருந்துகள் எடுப்பவர்கள்.

- வேறு நோய்களுக்காக மாத்திரைகள் எடுப்பவர்கள்.

- சுய-உடல்-தாக்கிநோய் உள்ளவர்கள், எக்ஸிமா (கடுமையான அரிப்பு)

- புற்றுநோய், கடுமையான சுவாசநோயினால் பாதிக்கப்பட்டவர்கள்.

முதல் இரண்டு தடுப்பூசியிலிருந்து குறைந்தது ஆறுமாதகால இடைவெளியில் எடுத்துக்கொள்ள வலியுறுத்தப்படுகின்றது.


ஐரோப்பா/ஜெர்மன் மக்கள் 60-75 விழுக்காடுகள் முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள். அதாவது இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தியவர்கள். பொதுவாக இப்ப போடப்பட்ட தடுப்பூசி ஓரிரு வருடங்களில் அதனது காப்பு திறனை இழக்கும் பட்சத்தில் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்வது தொடர்ந்து இன்னும் ஐந்து வருடங்களுக்கு தொற்றுநோய்காப்புதிறனை உடல் ஏற்படுத்திக்கொள்ளும். இதன் நிமித்தம் அம்மை நோயைப்போல் கொரோனா வைரஸையும்  ஒட்டு மொத்தமாக ஒழிக்கமுடியும்.


இதனை சாத்தியம் ஆக்குவது தடுப்பூசிகளை கொள்வனவு செய்யமுடியாமல் தவிக்கும் வறிய நாடுகளுக்கு வசதிபடைத்த நாடுகள் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கவேண்டும்.


தடுப்பூசி போட்டவர்கள் தங்களுக்கானதொரு நோய்காப்பு உள்ளவர்கள் மட்டுமே  இருப்பினும் தொற்றுநோய்/ கொரோனா வைரஸை தொடர்ந்து பரப்புவர்களாக இருப்பார்கள். வயதானவர்கள், வலுவிழந்த நோய்காப்பு உள்ளவர்களை வெகு எழிதில் கோவிட்-19/டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவர்கள். தடுப்பூசி செலுத்தினாலும் தொடர்ந்து தொற்றுநோய் காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது. மற்றவர்களுக்கான ஒரு நோய்காப்பு அரணாக அமையும்.


T- செல் தடுப்பூசி தடுப்பூசியின் பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்கும் புதிய வகை வைரஸ்களை  தடுப்பதற்கும் ஒவ்வொரு ஆண்டும் பூஸ்டர் தடுப்பூசி அவசியமாகின்றது என்று அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசரின் தலைவர் ஆல்பர்ட் பவுர்லா சமீபத்தில் ஒப்புக்கொண்டார். இன்றுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் முதன்மையாக வைரஸை அடையாளம் கண்டு அழிக்கும் ஆன்டிபாடிகளை உருவாக்குவதை ஊக்குவிக்கும்.


சில இளம் பயோடெக்னாலஜி நிறுவனங்கள் வித்தியாசமான அணுகுமுறையைப் பின்பற்றுகின்றன: அவற்றின் தடுப்பூசிகள் மூலம், குறிப்பாக T- செல்களைத் தூண்ட முயற்சி செய்கிறார்கள் - நோயெதிர்ப்பு மறுமொழியின் அந்த பகுதி ஏற்கனவே பாதிக்கப்பட்ட செல்களைக் கண்டறிந்து அகற்றுவதில் கவனம் செலுத்துகின்றது


இந்த புதிய வகை T- செல் தடுப்பூசி செயல்படும் விதம் விளக்க படத்தில் .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக