வெள்ளி, 24 செப்டம்பர், 2021

“கடவுள் தன்னுடைய சாயலை மனிதனுக்கு கொடுத்தார் மனிதன் கடவுளை படைத்தான்”. மனிதனுக்கு முற்காலத்திலும் கடவுள் இருந்தார் மனித கண்ணுக்கு புலப்படா எதிர் சக்தி வடிவமாக, மனிதனுக்கு பின் கண்ணுக்கு புலப்படும் நேர்மறை வடிவமாக கடவுள் மனித உருவம் பெற்றார்.

இருப்பதை வைத்து இல்லாததை தேடுதல் மனிதனை கடைப்பொருளாக வைத்து கடவுள் என்னும் மூலத்தை தேடுதல்

சம வெளி புல்தரை புல்லுண்ணிகள் ஏன் பிறந்தவுடன் ஓடுகின்றது நடக்கின்றது மனித குழந்தையால் மட்டும் ஏன் நடக்க முடிவதில்லை, அறிவில்லாமல் காட்டுமிராண்டியாக வாழ்ந்ததாக சித்தரிக்கப்பட்ட மனிதனினால் எப்படி தங்கள் பிள்ளையை நடை பழகி 4-6 வயது வரை வளர்த்திருக்கமுடியும்.

காட்டிலும் மேட்டிலும் கல்லிலும் முள்ளிலும் எப்படி அந்த குழந்தை தவழ்ந்து விளையாடியிருக்கும். தாய்பாலுக்கு பிறகு கடின உணவை அவித்து மசித்துக்கொடுக்க யார் அருகிலிருந்து இப்படி செய் என்று சொல்லிக்கொடுத்தார்.

மூளை ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் இருக்கும்போது மனிதர்களும் பாலூட்டிகளும் நடக்கக் கற்றுக்கொள்கின்றன. கொள்கையளவில், மனிதர்கள் உட்பட அனைத்து இளம் பாலூட்டிகளும் ஒரே நேரத்தில் நடக்கக் கற்றுக்கொள்கின்றனவா என்று கேட்டால் இல்லை அதாவது, மூளை வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்தவுடன் தங்கள் நடவடிக்கைகளை துரிதப்படுத்துகின்றன.

ஒரு சில பாலுட்டிகள் பறவைகள் கண் விழித்து தலை அசைக்கவே நீண்ட நாட்கள் தேவைப்படுகின்றது. இவைகள் மறைமுகமாக தங்கள் குட்டி/குஞ்சுகளை வளர்க்கும் உயிரினங்கள். சம வெளி புல்தரையில் வெட்டவெளியாக குட்டி ஈனும் புல்லுண்ணிகள் மட்டுமே பிறந்தவுடன் எழுந்து தாய்க்குப்பின்னால் ஓடும் திறன் உள்ளவைகள். இல்லாது போனால் அவைகள் காடுகளில் உயிர் வாழும் சாத்தியம் இல்லாது போகும்.

மூளை மற்றும் சிறுமூளை வளர்ச்சி சிறுமூளை வளர்ச்சி 5 வது வாரத்தில் 14-16 இல் தொடங்கி பிறப்புக்குப் பிறகுதான் நிறைவடைகின்றது. நியூரான்களின் முதிர்ச்சி நரம்புப் பிளவு மற்றும் பிளாஸ்டிசிட்டி சினாப்டிக் இணைப்புகளின் எண்ணிக்கை மூளை, சிறு மூளையின் வளர்ச்சி காலம் மனிதனுக்கு 4-6 வருடங்கள் தேவைப்படுகின்றது.

3 மாதங்கள் குழந்தை இப்போது தன் தலையை சுயமாக நிமிர்த்தி வைத்திருக்க முடியும். பிள்ளை  வயிற்றில்  நிமிர்ந்திருக்கும் போது தலையை நிமிர்த்தி பார்த்தல்  மற்றும் தாய் மடியில் படுத்திருந்து மற்றவர்களின்  செய்கைகளை கவனிக்கின்றது.

3-7 மாதங்கள் சுய சுழற்சியின் ஆரம்பம் கை கால் உதைத்தல் முதலில் பக்கத்திற்கு திரும்புதல் பின்னர் வயிற்றில் இருந்து பின்புறம் இறுதியாக பின்னால் இருந்து தொப்பை மீது புரளுதல். மற்றவர்களின்  சேட்டைகளுக்கு வாய்விட்டு சிரிக்கின்றது.

7-10 மாதங்கள் சுயாதீன இயக்கத்தின் தொடக்கம்  ஒவ்வொரு குழந்தையும் தங்கள் சொந்த வழியில் ஊர்ந்து செல்வது, தவழுதல், அன்னியத்தில் சப்பாணியாக நகர்வது.

9-15 மாதங்கள் ஆராய்ச்சி பருவம்; நாற்காலிகள், மேசை பொருள்களை எடுத்தல் தள்ளுதல், அலமாரி, லாட்சியை  இழுக்கின்றது. தளபாடங்கள் மற்றும் சுவர்களில் எழுந்து நிற்க கற்றுக்கொள்ளுகின்றது.

9-18 மாதங்கள் இறுக கைகளைப் பிடித்துக் கொண்டு குழந்தை தளபாடங்கள் மற்றும் சுவர்களில் சுதந்திரமாக நடக்க கற்றுக்கொள்கின்றது

2-3 ஆண்டுகள் குழந்தை இப்போது அதிக தன்நம்பிக்கையுடன் செயல்படுகின்றது. தன் உடலை சமாளிக்க,  கட்டுப்படுத்த தெரிந்து கொள்கின்றது. உதவியின்றி  ஓட ,நடக்க, தாவ குதிக்க முடியும் மற்றும் படிக்கட்டுகளில் ஏற கற்றுக்கொள்கின்றது.

4-6 ஆண்டுகள் இந்த வயதில் பெரும்பாலான குழந்தைகள் ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ள விரும்புகின்றது எழுத வரைய, அல்லது கிறுக்கி வைக்க  மண்ணில் கோபுரங்கள் கட்டுதல் நீங்கள் ஒரு பைக் ஓட்ட கற்றுக்கொடுக்கலாம். 5 மொழிகளை கற்றுக்கொள்ளும் திறன் மேலோங்கி காணப்படுகின்றது. 

“இயற்கையும் மனிதனும் சமாதானத்துடன் கூடி வாழ எந்த எல்லைக்கோடுகளும் சண்டையும் இல்லாத ஒரு உலகம் வேண்டும்”



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக