யார் அடுத்த அதிபர் (2021) யார் அடுத்த அதிபர் இந்த கேள்விக்கான பதில் ஏற்கனவே எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் தயாராகவே இருக்கின்றது. ஒரு நாட்டில் ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து நீண்டகாலம் பதவியிலிருந்தால் அது நல்லாட்சியாக இருந்தாலும் நல்லதொரு ஜனநாயகத்தை அதிகார போக்காக மாற்றி, மக்களாட்சியை கேள்விக்குறியாக்கிவிடும். மாற்றம் ஒன்றே ஆரோக்கியமான ஜனநாயகத்தை வளர்த்துவிடும்.
ஜெர்மனியின் கூட்டாட்சியின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் நான்கு முறை அதாவது 16 வருடங்கள்(2005-2021) ஆட்சி பொறுப்பிலிருந்து இந்த வருடம் 2021 நடக்கவிருக்கும் தேர்தலுடன் முழுமையாக ஓய்வு பெறுகின்றார்கள்.
பிரியாவிடை பெறும் அதிபர் ஏஞ்சலா மெர்கலுக்கு எனது வாழ்த்துக்கள். நல்லதொரு ஆரோக்கியமான ஓய்வாக அவர்களுக்கு அமைய இறையருள் அருளட்டும். நல்ல தலைவர்களின் மூளை ஆலோசனை நல்ல வழியில் மக்களை எடுத்துச்செல்ல உதவும்.
இந்த தேர்தலில் மக்களின் மனநிலை என்னவாக இருக்கும், மக்கள் கருத்து, அவர்களின் எதிர்பார்ப்பு ஒரு ஆட்சிமாற்றத்தை அல்லது ஒரு புது அதிபரை விரும்பியே இந்த முறை தேர்தல் வாக்குகள் இருக்கப்போகின்றது. சரி இருக்கட்டும் முடிவுகளை முன்கூட்டியே சொன்னால் அவ்வளவு நல்லாயிருக்காது அதுவொரு எதிர்பார்ப்பாகவே இருக்கட்டும்.
யாருக்கு அதிபராக கூடிய இலட்சணம், மந்திர புன்னகை இருக்கின்றது இந்த தேர்தல் (2021.09.26) 9வது அதிபருக்கான தேர்தல், இதில் போட்டியிடுபவர்கள் மூவர்கள் ஓலாஃப் ஸ்கோல்ஸ், (SPD) அர்மின் லாஷெட், CDU / CSU பெண் வேட்பாளர் அன்னலேனா பேர்பாக், பசுமை கட்சி. இவர்களின் யார் பதவிக்கி வந்தாலும் நிறைய சவால்கள் காத்திருக்கின்றது,
அதில் மிக முக்கியமானது சுற்றுச்சூழல் இயற்கை பேரழிவு பாதுகாப்பு, வேலையில்லா திண்டாட்டம், நாட்டின் பொருளாதார சமநிலை மற்றும் வெளியுறவு கொள்கை குறிப்பாக அமெரிக்காவுடனான நல்லுறவு நேட்டோ கூட்டுறவு கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிப்பதா.. அல்லது ஐரோப்பா தனக்கென ஒரு இராணுவ பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவதா.. இந்த கேள்விகளுக்கான பதில்களுடன்தான் நாளை ஐரோப்பா/ஜெர்மனி நகரப்போகின்றது.
மக்களின் வாழ்வியல் நலத்திட்டங்கள் அரசு அதிகாரத்திடமே இருக்கின்றது அந்த அரசு நல்லதாக அமைய வேண்டும் என்பதே பலரும் எதிர்பாக்கும் எதிர்பார்ப்பு எது நடந்தாலும் நல்லதாகவே இருக்கட்டும். நன்றி மகேஷ்-ரவி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக