திங்கள், 6 செப்டம்பர், 2021

சால்மன் மீன் பதப்படுத்துதல்(கிராவ்-சால்மன்) அஸ்பாரகஸ் முளை, பாண்/ரொட்டி, அவித்த உருளைக்கிழங்குடன் வைத்து சாப்பிடமுடியும். உறையா கொழுப்பாக சொல்லப்படும் ஒமேகா3 கொழுப்பு அமிலம் நிறைந்து காணப்படும், குளிர் காலத்தில் சாப்பிடக்கூடிய ஐரோப்பா/ ஜெர்மன், ஸ்காண்டிநேவிய மக்களின் சுவைமிக்க அற்புதமான ஒரு உணவு. சமையல் செய்யாமல் பதப்படுத்தும் முறை இது, வெகு சுலபமானது நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்: தோலுடன், நடு முள்ளு இல்லாமல் ஒரு கிலோ பாதியாக பகிர்ந்த, சால்மன் மீன் 50 கிராம் கடல் உப்பு, 30 கிராம் சர்க்கரை, 5 தேக்கரண்டி கருப்பு மிளகு, புதிய 2 கொத்து டில் மற்றும் ஒரு கேரட், பாதி பெருஞ்சீரக அடித்தண்டு/கிழங்கு.

செய்முறை விளக்கம்: சுத்தம் செய்த சால்மன் மீனை ஒரு மேசைக்கரண்டி ஒலிவ் எண்ணைய் ஊற்றி பூசவும் பிறகு உப்பு சர்க்கரை, பொடி செய்த மிளகை தூவிவிடவும். இதை ஒரு ஓரமாக வைத்துவிட்டு. டில் மற்றும் கேரட், பெருஞ்சீரக தண்டு கிழங்கை பொடியாக நறுக்கி, ஒரு சுழற்சி மிக்ஸியில் போட்டு ஒரு கரடான பதத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த கலவையை எடுத்து முன்கூட்டியே தயார்செய்து ஓரமாக வைக்கப்பட்ட சால்மன் மீன் மேல் கொட்டி எல்லா இடத்திலும் படும்படி கெட்டியாக பரவிவிட்டு, சமையலறை பொலித்தீன் படலம் கொண்டு சுற்றி ஒரு பத்து நாட்கள் குளிர்ஊட்டியில் வைத்துக்கொள்ளுங்கள்.

பத்து நாட்கள் கடந்த நிலையில் சால்மன் மீன் இப்பொழுது பதப்படுத்தப்பட்டு தயாராகி இருக்கும், அதை எடுத்து அதன் மேல் பூசப்பட்ட காய்கறி சாந்து கலவையை வழித்து எடுத்து கொட்டிவிடவும்.

இப்ப உங்களுக்கு சுவைமிக்க சால்மன் மீன் தயாராகியிருக்கின்றது பேப்பர் அட்டை கனத்தில் சிறுசிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

100 கிராம் சால்மன் மீனிலுள்ள ஊட்டசத்துக்கள். இரும்பு சத்து, புரதம் 19.9 கிராம். கொழுப்பு. 13.6 கிராம். பொட்டாசியம். 371 மி.கி. கால்சியம் 13 மி.கி. மெக்னீசியம். 29 மி.கி. சோடியம் 51 மி.கி. பாஸ்பரஸ் 266 மி.கி..

விற்றமின் B1 (தியாமின்) 140 μg விற்றமின் B2 (ரிபோஃப்ளேவின்) 300 µg விற்றமின் B3 நியாசின் 7990 µg, விற்றமின் B5 (பாந்தோத்தேனிக் அமிலம்)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக