புதன், 8 செப்டம்பர், 2021

பிரஞ்சு மீன் சூப் (புயாபேஸ்) பாரம்பரியமாக ஆறு வெவ்வேறு மீன் இனங்களை கொண்டு இந்த சூப் தயாரிக்கப்படகின்றது. இறால், மட்டி/சிப்பி, கணவாய்/கணவாய் கூந்தல் ஆல் மீன், சால்மன் மீன், கடல் பாஸ்/ லூப் டி மெர்) மீன்கள். உங்களுக்கு இந்த மீன்கள் கிடைக்காத பட்சத்தில் உங்கள் பிராந்தியத்தில் கிடைக்க கூடிய வெடில் இல்லாத மீனை முள் எடுத்து பயன்படுத்தவும்.

தேவையான மற்றய கூட்டுப்பொருட்கள்: 5-6 பேருக்கான அளவு ஒரு கிலோ எடை கடல் உணவு, சமையலுக்கு ஏற்றவாறு முள் எடுத்து வாய்க்குள்ளே நுழைய வசதியாக சிறுசிறு துண்டுகளாக வெட்டியது மற்றும் 750 கிராம் தக்காளி தோல் நீக்கி அவித்து மசித்து ஒரு பெரிய துளையுள்ள சல்லடையில் வடிகட்டியது.

சிறிய காய்கறி வெங்காயம் (250 கிராம்) 1/2 கொத்து தட்டையான வோக்கோசு இலை(parsley) 4 தேக்கரண்டி ஒலிவ் எண்ணெய் ஒரு மேசைகரண்டி தட்டையான அளவு கும்குமப்பூ,தேவையான அளவு உப்பு, மிளகு மற்றும் 3பல் உள்ளி/பூண்டு, தேனீர் கரண்டி அளவு காய்ந்த தைம் இலை, 1-2 பிரியாணி இலை.

மீன்வடி நீர் (Fishfond) தேவையான அளவு வெள்ளை ஒயின் மற்றும் மீன் தலை, வெட்டிக் கழித்த தேவையற்ற மீன் பகுதி காய்கறிகளை நீரில் உப்பு போட்டு அவித்து வடிகட்டி எடுத்த நீர். இதை முன்கூட்டியே சமைத்து வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் சமையல் செய்யும் போது தண்ணீருக்கு பதிலாக இதை பயன் படுத்துங்கள்.

செய்முறை விளக்கம்: ஒரு சூடான பாத்திரத்தில் ஒலிவ் எண்ணெய். நடுத்தர வெப்பத்துடன் இரண்டு நிமிடங்களுக்கு வெங்காயம், பூண்டை போட்டு வதக்கவும்., ஏற்கனவே மசித்த தக்காளி மற்றும் பாதியாக வெட்டிய 5-6 மினி தக்காளி பழம், குங்குமப்பூ, தைம் பிரியாணி இலை ஆகியவற்றைச் சேர்த்து, மீன்ஃபண்ட்( ஏற்கனவே தயாரிக்கப்பட்ட மீன்வடி நீர்) மற்றும்

வெள்ளை ஒயின் நிரப்பவும். தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு ருசி பார்த்து சேர்த்து கொள்ளவும். மிளகு உறைப்பு போதாது என்பவர்கள் விதை அகற்றிய ஒரு உறைப்பு மிளகாயை பொடியாக நறுக்கி அல்லது பாதியாக கீறி சேர்த்துக்கொள்ளலாம்.

ஒரு கொதி நிலைக்கு வந்தவுடன், மெதுவாக மீன் மற்றைய கடல் உணவை சேர்த்து ஒரு 8-10 நிமிடங்கள் பாத்திரத்தின் மூடியை சற்று திறந்த நிலையில் மூடி வேகவிட்டு இறக்கவும் சமையலுக்கு பின் வாசனைக்காக போட்ட பிரியாணி இலையை எடுத்துவிடவும் இறுதியாக பாதி நறுக்கியும் பாதி முழு இலையாக வோக்கோசு இலையை போட்டு, பரிமாற தயாராகுங்கள்.தயாரித்த பிரஞ்சு மீன் சூப்பை ஒரு அழகான சூப் கிண்ணத்தில் ஊற்றி, பக்கெட் ரோல்ஸ்(ரொட்டி) உடன் பரிமாறவும்.

உணவக உணவு (மெனு) அட்டையில் வரவேற்பு குளிர்பானத்திற்கு பிறகு முன் உணவாக, உணவு அட்டையில் முதல் இடத்திலிருக்கின்றது சிலர் இதை பிரதான உணவாக எடுப்பதும் உண்டு. ஒரு உணவகத்தின் சமையல் எவ்வளவு தரம் எவ்வளவு சுவையானதாக இருக்கும் என்பதற்கு பிரஞ்சு-மீன்-சூப்(புயாபேஸ்) ஒரு எடுத்துக்காட்டாக பரிமாறுவார்கள்.

வாடிக்கையாளர்கள் சூப்பை சுவைத்த பின் தாங்கள் நல்லதொரு உணவகத்தை தேர்வு செய்திருக்கின்றோம் என்ற நம்பிக்கை அவர்களை மேலும் விலை உயர்ந்த பிரதான உணவுகளை தேர்வு செய்வதற்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கின்றது. கவர்ச்சி கடல் கன்னி மீன் சூப் சுவைப்பதற்கு நீங்கள் தயாரா… இதுவொரு கோடை கால உணவு

உன் செய்கையே உன்னை வடிவமைக்கின்றது நீ எதுவாக வாழ ஆசைப்பட்டாயோ அதுவாகவே நீ மாறுவாய்”




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக