சனி, 4 செப்டம்பர், 2021

கிளைபோசேட் இந்த உலகத்தில் எத்தனையோ வகையான உணவுப்பண்டங்கள் இருந்தும் அதில் பாதிக்குமேல் உண்ணத் தகாதவையாக ஒதிக்கிவிட வேண்டியிருக்கின்றது. மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள், பழங்கள், தானியங்கள், மிக முக்கியமாக மக்காச்சோளம் சோயா தானியத்தை எடுத்துக்கொள்ளலாம்.

சோயா ஒரு அற்புதமான  உணவு, விலங்கு புரதத்திற்கு ஒப்பானது அதை மரபணு மாற்றம் செய்யப்பட்ட தானியம் என்பதற்காக ஒதிக்கிவிடவில்லை, அதை சாகுபடி செய்ய பயன்படுத்தப்படும் களைகொல்லி மனித ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிக்ககூடியது.

அதிக விளைச்சலை எதிர்பார்த்து பெருந்தொகையாக மிதமிஞ்சி பயன்படுத்தப்படும் களைகொல்லியின் தேக்கங்கள் நாங்கள் உண்ண பயன்படுத்தும் சோயா தயாரிப்புகளில் காணப்படுகின்றதுசோயாவை அதிகமாக உணவில் சேர்க்கும் போது அதிலுள்ள நச்சு களைகொல்லி தேக்கங்கள் இனம் புரியாத காய்ச்சல் கால் முட்டிவலியை ஏற்படுத்துகின்றது.

கிளைபோசேட் ஒரு களைக்கொல்லியாகும் மேலும் உலகில் அதிகளவில் பயன்படுத்தப்படும் கிளைபோசேட் பரந்த நிறமாலை களைக்கொல்லி என்று அழைக்கப்படுகின்றது. களைக்கொல்லியை எதிர்க்கும் வகையில் மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட பயிர்களை மட்டும் விட்டுவிட்டு, அது எந்த தாவரத்தையும் கொல்லும் ஆற்றல் உள்ளது.

அழகான முதுமைப்பருவம். மாதவிடாய் - கடைசி சுழற்சி, 40 முதல் 45 வயதில் பெரும்பாலும் பெண்களுக்கு ஆரம்பமாகின்றது ஆண்களுக்கும் முதுமைப்பருவ சுழற்சி 60 வயதிற்கு மேல் மெதுவாக ஏற்படுகின்றது. பெண்களுக்கு ஏற்படும் மாற்றம் போல் ஆண்களுக்கு பெரியதாக தெரிவதில்லை. இது ஒன்றும் புதிதான விடையமல்ல பெண்களுக்கு வரும் ஒரு இயற்கையான நிகழ்வுதான் இதனுடைய சுழற்சிக்காலம் குறைந்தது 15-20 வருடங்கள் நகர்ந்து செல்லும்.

இதை ஆரம்பத்திலிருந்து சரியாக கவனித்தால் நல்ல ஆரோக்கியமான, அழகான முதுமைப் பருவத்தில் அடியெடுத்து வைக்கமுடியும் இல்லை என்றால் உங்கள் பெரும் பகுதி வாழ்க்கையை நோய்களுடன் தான் காலத்தைக் கழிக்க வேண்டிவரும்.

இந்த இரத்தப் போக்கு ஓய்வு (மெனோபாஸ்) அறிகுறிகள், தோன்றும் போது உடல் எரிச்சல் மற்றும் தூக்கமின்மை, உடல் உஷ்ணம், எலும்பு தேய்தல், இதனால் ஏற்படும் முட்டிவலிகள் வளர்ச்சிக்குரிய♀ ஈஸ்ட்ரோஜன்  மற்றும் புரொஜெஸ்ட்ரோன்  ஹார்மோன் குறையும்போது இந்த அறிகுறிகள் தென்படுகின்றன.

இது ஒரு மாற்றமே தவிர இதை ஒரு நோய் என்று நினைக்காதீர்கள் முன்பு பூப்படையும் போது ஏற்பட்ட மாற்றத்துக்கு நேர் எதிரான மாற்றம் இது, பருவமடைதல்  வளர்ச்சியை நோக்கிய பயணம் இது வளர்ச்சி குன்றிய பயணம்  இதை எதிர்க்காமல், அதன் வழியில் விட்டு விடுவது தான் நல்லது. சிலர் இந்த காலத்தில் ஏற்படும் உடற் கோளாறுகளுக்காக ஹார்மோன் மாத்திரைகள் எடுக்கின்றார்கள்

இதனுடைய பக்கவிளைவு மார்பக புற்றுநோய் ஆண்களுக்கு விந்து உந்து பை (புரோஸ்டேட் புற்றுநோய்இட்டுச்செல்கின்றது இயற்கை காரணமாகத்தான் வயதான காலத்தில் எங்களுடைய வளர்சிதை ஹார்மோன்களை இன்சுலின் உட்பட குறைக்கின்றதுஇந்த காலத்தில் பாலியலை தூண்டும் மாத்திரைகள், பெரும்தீனி குடிபோதை என ஆட்டம் போட்டால் அதற்காக கடவுள்/இயற்கை பொறுப்பாளியாக முடியுமா.

ஆண்களுக்கும் உடல் எரிச்சல், தூக்கமின்மை, உடல் உஷ்ணம் போன்ற அறிகுறிகள் தென்படுவது முதுமை காலத்தில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்  குறைந்து விடுவதுதான் காரணம். இதைக் சரியான முறையில் கவனம் எடுத்தால் ஆண்களும் ஆரோக்கியமான அழகான கம்பீரமான முதுமைப் பருவத்தில் அடியெடுத்து வைக்கமுடியும்.

இந்த பருவத்தில் மிதமிஞ்சிய உணவுத்தேவைகளை குறைத்து, நல்ல ஆரோக்கியமான உணவுகளை தெரிவு செய்து உண்ண வேண்டும் அசைவ உணவுகளை முற்றாக நீக்கி அல்லது குறைத்து விடுவதுதான் சாலச்சிறந்தது. முதுமை பருவத்தில் உண்ணக் கூடிய உணவுகளில் மிகச்சிறந்தது சோயா, காய்கறிகள் மீன் உணவுசோயாவில் அதிகப் புரதச்சத்தும் குறைந்தளவு கொழுப்புச்சத்தும் உள்ளது.

வளர்ச்சிக்குரிய ஹார்மோன்களை சம நிலையில் வைத்துக் கொள்ள உதவும் ஒரு தானியம் என்றால் அது இந்த சோயா தான் மிக குறைந்த செலவில் உணவையும் மருந்தையும் ஒன்றுக்குள் ஒன்றாக வைத்த இறைவனுக்குத்தான்  நன்றி சொல்ல வேண்டும்

வசந்தகாலம் தான் அழகு என்றில்லை இலையுதிர் காலமும் ஒர் அழகுதான் முதுமையை சிவப்பு கம்பளம் விரித்து நல்வரவு சொல்லுங்கள் இல்லை என்றால் நோய் என்னும் குழிகளில் தடக்கி விழுந்து விடும் உங்கள் முதுமை. *ஆரோக்கியமான முதுமையை நாங்கள் விரும்புகின்றோம்

ஒரு கிலோ சோயாவிலுள்ள புரதம் 3-5 லிட்டர் பால்,1 கிலோ மாமிசம் அல்லது 24 முட்டைகளிலுள்ள புரதத்திற்கு சமமானது என்று ஆராச்சிகள் சொல்கின்றன.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக