ஞாயிறு, 26 டிசம்பர், 2021

சர்க்கரை நோய் & மனநோய்: உங்கள் ஆன்மாவுக்கு எப்ப உதவி தேவை, சர்க்கரை நோய் பாதிப்புக்களினால் ஏற்படும் மனவழுத்தம் காலப்போக்கில் மனநோயாக மாறுகின்றது, சர்க்கரை உயர்வு தரும் பாதிப்புக்களை காட்டிலும் சர்க்கரை இறக்கம், இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படுத்தும் பயம், விரக்தி மனச்சோர்வு கவலை, குழப்பம்தான்  மனநலக் குறைபாட்டினை ஏற்படுத்துகின்றது.  

சர்க்கரை நோய்கு மருந்து மாத்திரைகள் இன்சுலின் ஏற்றிக்கொள்வது காலப்போக்கில் அலுத்து ஒரு அக்கறையில்லாமல் தூக்கி போடத்தோன்றும். வேளாவேளைக்கு மருந்து, இன்சுலின் செலுத்துவது தவறிப்போகின்றது. பல சர்க்கரை நோயாளிகள் இந்த இடத்தில் தவறிப்போகின்றார்கள் உடலில் சோம்பல் குடிகொண்டு அவர்களது ஊக்கம் தன்னை பற்றிய ஒரு அக்கறை கைவிடப்படுகின்றது, இதனால் இவ்வளவு காலமும் கட்டிக்காத்த ஆரோக்கியம் பாழ்பட்டுப்போகின்றது.

இந்த இடத்தில் உங்கள் ஆன்மாவிற்கு உதவி தேவைப்படுகின்றது. அது உங்கள் குடும்ப உறுப்பினர்களின் உதவியாக கூட இருக்கலாம். வேளாவேளைக்கு மருந்து, இன்சுலின் செலுத்துவது உணவு உடற்பயிற்சியை திரும்பவும் செயல்படுத்துவது முக்கியமானது. இல்லாது போனால் இதனுடைய பாதிப்புக்கள்  சிறுநீரக செயலிழப்பு, பாதங்களில் எரிச்சல், புண் மற்றும் விழித்திரை எரிப்பு(குருடு) ரெட்டினோபதிக்கு வழிவகுக்கும்.

பொதுவில் மக்கள் 30 வயதிலிருந்து வருடத்திற்கு பத்து சதவிகித தசைகளை இழக்கிறார்கள். தசைகள் படிப்படியாக கொழுப்பாக மாற்றப்படுகின்றன. நமது உடலின் அன்றாடச் செயல்பாட்டிற்குத் தேவையான புரதச்சத்துக்கள் உணவின் மூலம் கிடைக்காவிட்டால், உடல் அவற்றை தசையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியே எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

நிலவு பார்த்த நண்டு போல் உடல் தன்னைத்தானே தின்று தசையை இழந்து வெறும் கோதாக இருக்கும் இதன் நிமித்தம் ஒருவர் தனது கட்டழகு தசையை(மசில்) இழந்து சுருங்கி தொங்கும் கை, தொப்பை விழுந்த உடலமைப்பு ஏற்படுகின்றது.

சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக புரதச்சத்து உணவுகளை எடுக்கவேண்டும் அத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட உடற்பயிற்சியும் அவசியமானது. இந்த செயல்பாடு இழந்த தசையை மீண்டும் கட்டமைத்துக் கொள்வதற்கு உதவுகின்றது.

சர்க்கரை இறக்க அறிகுறிகள்: பதட்டம், கை கால் உதறல் இதய படபடப்பு, தலை சுற்றல், மயக்கம். உடனடியாக குளுக்கோசு, குளிர் பானங்கள் எடுத்துக் கொள்ளவும்.

சிறுநீருடன் அதிகளவு சர்க்கரை வெளியேறும்  அதனுடன் அல்புமின் புரதங்களும்  வெளியேறும் இது சர்க்கரை நோயின் தீவிர தன்மையை காட்டுகின்றது.

அல்புமின் என்பது: உடலில் பல்வேறு முக்கிய செயல்பாடுகளைக் கொண்ட ஒரு புரதமாகும். எடுத்துக்காட்டாக,  திரவங்களை எடுத்துச் செல்லும் ஒரு போக்குவரத்துப் பொருளாக  செல்களுக்கு உள்ளேயும் வெளியேயும் திரவங்களின் விநியோகத்தில் முக்கியமான பங்காற்றுகின்றது..அல்புமின்  இரத்த சீரத்தில் உள்ள மொத்த புரதத்தில் 60 சதவிகிதம் ஆகும். இது முக்கியமாக கல்லீரல் செல்களில் (ஹெபடோசைட்டுகள்) உருவாகின்றது,

அல்புமின் புரத குறைபாடு/வெளியேற்றம் இருதய மற்றும் சிறுநீரக அபாயத்தைக் குறிக்கின்றது

சிறுநீர் அல்புமின் வெளியேற்றம் அதிகரித்தால், அல்புமின் இழப்பு தொடர்ந்து ஏற்படுகிறதா என்பதை மருத்துவ பரிசோதனையில் சரிபார்க்க வேண்டும். "மைக்ரோ அல்புமினுரியா" இருந்தால், அதாவது சிறுநீர்-புரத இழப்பு இருந்தால் வருடத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை பரிசோதனை செய்வது அவசியமானது அல்புமின் புரத இழப்பு அதிகமாக இருந்தால் சிறுநீரக பாதிப்பை காட்டுகின்றது. இது போன்ற மோசமான நிலை ஏற்படாதவாறு முன்கூட்டியே உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

சர்க்கரை நோய் ஒருவரை துரத்தும் பிரம்மஹத்தி தோஷம், விரும்பியதை உண்ணமுடியாது, கஞ்சியும் கூழும்  குடிக்கவைக்கும் உணவுத்தடை, எதிலும் நாட்டமின்மை, ஆரோக்கியமான சர்க்கரை நோய்காலத்தில் புரதச்சத்து உணவுகளை உண்ணவேண்டிய தேவையிருந்தது  அதற்கு எதி்ர்மாறாக சேதமடைந்த சிறுநீரகங்களினால் புரதத்தை சாதாரணமாக செயலாக்க முடியாது,

உங்கள் உணவில் சர்க்கரை, கார்போஹைட்ரேட்  உணவுகளை மட்டுமின்றி உடலுக்கு அவசியமான புரத சத்து உணவுகளையும்  குறைவாக உண்ண வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றீர்கள் மேலும் கொழுப்பு, உப்பு(சோடியம்)  குறைவாக உள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

வாழ்க்கை பூராகவும் சர்க்கரையுமில்லை, உப்புமில்லை உணவுத் தேவையே உங்களை சலிப்படைய வைக்கின்றது. நல்ல மருத்துவ ஆலோசனை மருத்துவம் உங்கள் ஆன்மாவை மீட்டெடுக்க உதவும். நன்றி

தடுப்பூசி போடுங்கள். பெருமளவு ஆன்டிபாடிகள் உங்கள் உடலுக்கு பாதுகாப்பை தருகின்றது. 

டேய்! ஆன்டிபாடி வாடா வெளியே நான் கொரோனா வந்திருக்கேன் சண்டைக்கு வாடா பயந்தான்கொள்ளி..

வேண்டாம் போயிடு ... தடுப்பூசி உன்னை பற்றிய தகவல் எல்லாம் சொல்லிட்டான், நீ முகத்தை மாற்றிய செய்தி உள்பட  நான் அடிச்சா தாங்கமாட்டாய் வந்த இடத்திற்கே திரும்பி ஓடிடு..




 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக