ஓமிக்ரான் மாறுபாடு, ஏன் மற்றய பிறழ்வுகளை விட ஆபத்தானது. கொரோனா வைரஸின் 30,000 மரபணு கட்டுமான தொகுதியில் தனியாக முனைப்புரதத்தில் (S1) மட்டும் 33 மாறுபாடுகளை கொண்டுள்ளது. தற்சமயம் உலாவும் புதிய இந்திய பிறழ்வு - டெல்டா வைரஸ்களின் முனைப்புரதம் 11-18 வரையிலான மாறுபாடுகளை மட்டுமே கொண்டுள்ளது. இது 60 % ACE-2 ஏற்பிகளுடன் மிகவும் இலகுவாக இணையக்கூடியது..
தென்னாப்பிரிக்கா பிறழ்வு – ஓமிக்ரான் உடல்/நுரையீரல் திசுக்களில் 90 % ACE-2 ஏற்பிகளுடன் மிகவும் இலகுவாக இணையக்கூடியது. அதாவது ஓமிக்ரான் மாறுபாடு, டெல்டா மாறுபாட்டை விட வெகு சுலபமாகவும் விரைவாகவும் தொற்றக்கூடியது.
ஸ்பைக் புரதத்தில் (S1) முக்கியமான பிறழ்வுகள். ACE-2 ஏற்பி பிணைப்பு தளத்தின் மூலம் வைரஸ்கள் பிரதி எடுப்பதற்கு உடல் செல்களில் ஊடுருவுகின்றது. இந்த புதிய மாறுபாடுகள் பழைய மாறுபாடுகளைவிட 90 % ACE-2 ஏற்பிகளுடன் மிகவும் இலகுவாக இணையக்கூடியது..
ஸ்பைக் புரதத்தில்(S1) உள்ள மாறுபாடுகள்.
B.1.1.7-பிரிட்டிஷ் பிறழ்வு – ஆல்பா.
(செப்டம்பர் 2020,S1-10-13 மாறுபாடுகள்)
B.1.351-தென்னாப்பிரிக்கா பிறழ்வு – பீட்டா.
(அக்டோபர் 2020,S1-10 மாறுபாடுகள்)
B.1.1.28-பிரேசில் பிறழ்வு – காமா.
(டிசம்பர் 2020,S1-11 மாறுபாடுகள்)
B.1.617-இந்திய பிறழ்வு - டெல்டா.
(அக்டோபர் 2020,S1-15-18 மாறுபாடுகள்)
B.1.1..229-தென்னாப்பிரிக்கா பிறழ்வு – ஓமிக்ரான்
(நவம்பர் 2021,S1-33-34 மாறுபாடுகள்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக