சனி, 25 டிசம்பர், 2021

பூஞ்சை-நச்சு(அஃப்லாடாக்சின்கள்) அஃப்லாடாக்சின்கள்என்பது மைக்கோடாக்சின்களாகும், அவை அஸ்பெர்கிலஸ் இனத்தின் இரண்டு வகையான பூஞ்சைகளினால்  உற்பத்தியாகின்றன, இவை முக்கியமாக சூடான மற்றும் ஈரப்பதமான காலநிலை கொண்ட பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றது.

அஃப்லாடாக்சின்-(பி1) என்பது பொதுவில் உணவில், பருப்பு, கடலை, விதைகள், அரிசி, வடகம், அப்பளம், மோர் மிளகாய்  காய்கறிகளில் மற்றும் சமையல் செய்த உணவுகளில்  அதிகளவில் உருவாகும் ஒரு பூஞ்சை வகையாகும், இது மரபணு நச்சு, அதாவது மரபணுக்களை சீர்குலைத்து சிதைக்ககூடியது கல்லீரல் திசுக்களின் சிதைவு மற்றும் கல்லீரல் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்லாடாக்சின்களில் இதுவும் ஒன்றாகும்.

சூடான ஈரப்பதம் பூஞ்சைகளின் வளர்ச்சியை ஊக்கிவிற்கின்றது.உங்கள் வீட்டு சமையலறை பொருட்களை இரண்டு முறைகளில் பக்குவபடுத்தி வைத்துக் கொள்ளுங்கள். உடன் காய்கறிகள் மற்றும் சமையல் செய்த உணவுகளை குளிர் ஊட்டியில் சரியான குளிரூட்தல் (மெது குளிர்நிலை +5,+6°C டிகிரி மற்றும் உறை குளிர் நிலை -15, -18°C டிகிரியில் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

எப்பொழுதும் சமையலறை நீராவி பிடித்து ஈரப்பதம் உள்ள ஒரு இடமாகத்தான் இருக்கும் இந்த இடத்தில் உலர் நிலை பொருட்களை வைத்தால் கண்டிப்பாக பூஞ்சை பிடிக்கும், உலர் பொருட்களை தனியாக வேறொரு ஈரப்பதம் இல்லாத இடத்தில் வைத்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

கண்டிப்பாக இன்சுலின், மருந்து மாத்திரைகளை சூரிய ஒளி இல்லாத உலர் நிலை+25°C டிகிரிக்கு மேலே வெப்பம் இல்லாதவாறு இருக்கவேண்டும். அதிக வெளிச்சம், ஈரப்பதம் வெப்பம் மாத்திரைகளை செரிக்க வைத்து விடும். அதாவது பழுதடைந்துவிடுகின்றது.

பழுதுபட்டு காலாவதியான மாத்திரைகள், இன்சுலினை பயன்படுதினால் அதனால் எந்த பிரயோசனமும் இல்லை. இது போதாதென்று செயலிழந்த மாத்திரைகள் தீராத நோய்களை உண்டாக்கும் இரத்த நச்சூறலையும் உடலில்/கல்லீரலில் ஏற்படுத்திவிட்டு போகும். தவறுகள் எம்மிடத்தில் மனித உடல் அவ்வளவு சீக்கிரத்தில் பாழ்பட்டு போவதில்லை படைப்பின் திறன் அவ்வளவு வல்லமை வாய்ந்தது

மருந்து மாத்திரைகள், மருத்துவம் இல்லாத கற்கால வாழ்விற்கு ஏற்றவாறு மனித உடல் வீரியம் மிக்கதாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. மனிதனுக்கான நோய்ச்சூழல் 99 விழுக்காடு வாழ்வியல், உணவு, மாசுபட்ட சுற்றுச்சூழல் போன்ற வெளிக்காரணங்களே மனிதனை பீடிக்கும் நோய்காரணிகளாக இருக்கின்றது.

பூஞ்சை (அஃப்லாடாக்சின்கள்) பிடித்த உணவுகளை கையுறை, முகக்கவசம் அணிந்து அப்புறப்படுத்துங்கள்

IgE அளவு அதிகரிப்பு: இம்யூனோகுளோபுலின் E (IgE) ஆன்டிபாடிகள் சில ஒவ்வாமை எதிர்விளைவுகளை மத்தியஸ்தம் செய்வதற்கு காரணமாகின்றன IgE  ஒவ்வாமை கண்டறிதலில் பங்கு வகிக்கின்றது.

புரோட்டீன் தடுப்பூசிகள்: புரோட்டீன் அடிப்படையிலான கொரோனா தடுப்பூசிகளின் தயாரிப்புக்கள் இப்போது அதிகரித்து வருகின்றன. Novavax அதன் தயாரிப்புக்காக ஐரோப்பிய ஒன்றியத்தில் சந்தை ஒப்புதலுக்கு விண்ணப்பித்துள்ளது. குறைவான தயாரிப்புக்காலம் குறைந்த செலவின் நிமித்தம் அடுத்து வரும் வருடங்களில் இந்த தடுப்பூசியின் பயன்பாடும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புரோட்டீன் தடுப்பூசிகள். மெசஞ்சர் (“mRNA”)  தடுப்பூசி மற்றும் வெக்டர்/திசையன் தடுப்பூசிகளுக்கு இணையாக செயல்படக்கூடிய ஒரு தடுப்பூசி, இத்தகைய தடுப்பூசிகள் பயன்பாட்டிலுள்ள நலிவடைந்த/இறந்த பழைய தடுப்பூசிகளை விட பாதுகாப்பானதா? இது தொற்றுநோயை எவ்வாறு எதிர்த்து போராடுகின்றது.

Novavax (/NVX-CoV2373 ) என்பது: கொரோனா(சார்ஸ்-கோவி-2)  நோய்க்கிருமிக்கு எதிரான புரத அடிப்படையிலான ஒரு தடுப்பூசி அல்லது புரத சப்யூனிட் தடுப்பூசிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. சப்யூனிட் என்பது ஒரு புரத மூலக்கூறாகும், புரத மூலக்கூறுகளுடன் இணைந்து செயல்படும் புரதத்தை உருவாக்குகின்றது.

இது புரத வளாகம் என்றும் அழைக்கப்படுகின்றது. முன்னர் அங்கீகரிக்கப்பட்ட மரபணு, மெசஞ்சர் தடுப்பூசிகளுக்கு மாறாக, புரத அடிப்படையிலான தடுப்பூசியின் மைய செயலில் உள்ள மூலப்பொருள் செயற்கையாக ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட  "செயற்கை பெப்டைடுகள்". முனைப்புரதம்-S1/S2 (ஸ்பைக் புரதம்) ஆகும்.

ஒரு தடுப்பூசியின் தொழில் பாடே, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுக்கட்டாயமாக சண்டைக்கு இழுக்கும் ஒரு செயல் முறைதான். இந்த செயற்கையான பெப்டைடுகள். (ஸ்பைக் புரதம்) செயல்பட வம்பு சண்டைக்கு வலுச்சேர்க்க ஒரு பொட்டென்டியேட்டருடன் கலக்கப்படுகின்றது.

இந்த துணை பொருட்கள் உள்ளார்ந்த நோயெதிர்ப்பு மண்டலத்தை செயல்படுத்தும் பொருட்கள் அதாவது கொம்பு சீவி விடும் பொருட்கள். இந்த உள்ளடக்க பொருட்கள் இல்லாமல் தடுப்பூசிகள் செயல்படாது எதிர்காலத்தில் நோய்க்கிருமியின் முக்கியமான கட்டமைப்புகளை அங்கீகரிப்பதில் அவை நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கின்றன.

மெசஞ்சர் தடுப்பூசிகள் முனைப்புரதத்தை உடல் திசுக்களை பயன்படுத்தி உற்பத்தி செய்கின்றது, புரத அடிப்படையிலான தடுப்பூசிகளில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சார்ஸ்-கோவி-2(ஓமிக்ரான் மாறுபாடு) ஸ்பைக் புரதத்தை உள்ளடக்கியது அவ்வளவுதான் இரண்டுக்குமான வித்தியாசம்

தடுப்பூசி வகைகள்

நலிவடைந்த/இறந்த தடுப்பூசிகள்

முழுவதும் செயலிழக்கப்பட்டது.

நேரடி/உயிர்வளர்ச்சி.

 

புரோட்டீன் தடுப்பூசிகள்.

செயற்கை பெப்டைடுகள்.

 

மறுசீரமைப்பு துணைக்குழு

முனைப்புரதம் (ஸ்பைபுரோட்டீன்)

 

மெசஞ்சர் தடுப்பூசிகள் mRNA

RNA/DNA.

 

வெக்டர் தடுப்பூசி

மறுசீரமைப்பு பாக்டீரியா திசையன்கள்.

மறுசீரமைப்பு வைரஸ் திசையன்கள்.

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக