வியாழன், 9 டிசம்பர், 2021

Are you immune now?

நீங்கள் இப்போது நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவரா? புதிய மாறுபாடு ஓமிக்ரான் பரவல், முன்கூட்டியே தடுப்பூசி செலுத்தியவர்களின் நிலை என்ன? நீங்கள் கோவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி போட்டுவிட்டீர்களா? அப்படியானால் உங்களுக்கு போடப்பட்ட தடுப்பூசி, SARS-CoV-2 வைரஸ்க்கு எதிராக செயலில் உள்ளதா,

நீங்கள் இப்போது புதிய மாறுபாடு கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவரா, அப்படியானால் அது எவ்வளவு ஆன்டிஉடல் செறிவைக் கொண்டது. ஒரு சராசரி காப்பு திறனுக்கு நிறைய படைவீர்ர்கள் அதாவது பெருமளவு ஆன்டிஉடல்கள் இரத்தத்தில் காணப்படுகின்றது.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு எவ்வளவு கால இடைவெளி தேவைப்படுகின்றது, ஆய்வகம் மற்றும் சுய பரிசோதனையில் உங்கள் இரத்த ஆன்டிபாடிகளின் செறிவை கொண்டு தீர்மானிக்கமுடியும்.

நீங்கள் தீராத நோய்களினால் பீடிக்கப்பட்டிருந்தால் அல்லது முதிர்வயது காரணமாக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலமிழந்து நோஞ்சானாக இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு ஊக்கதடுப்பூசி தேவைப்படுகின்றது.

மெசஞ்சர் (mRNA) தொழில்நுட்பத்தை கொண்ட, பயோன்டெக் / ஃபைசர் மற்றும் மாடர்னாவின் கொரோனா பூஸ்டர் தடுப்பூசிகளில் புதிய வைரஸ் டெல்டா, ஓமிக்ரான் முனைப் புரதங்களை(S1/S2) புதிய மேன்பாடு தழுவி தயாரிக்கப்படுகின்றது.

அதாவது உங்களுக்கு பழைய வைரஸ்களுடன் இணைந்து புதிய வைரஸ் தொற்றில்லிருந்தும் 90 விழுக்காடுகள் பாதுகாப்பு கிடைக்கின்றது. இன்றைய நிலவரம் கருதி கண்டிப்பாக அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படுகின்றது.

தடுப்பூசி போடாதவர்களின் நிலை என்ன? SARS-CoV-2 கொரோனா வைரஸால் பாதிக்கப்படும்போது, ​​வைரஸை எதிர்த்துப் போராடக்கூடிய ஆன்டிபாடிகள் நோயெதிர்ப்பு T செல்கள் இயல்பாகவே உருவாகின்றன, PCR பரிசோதனை மூலம் SARS-CoV-2 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு குணமடைந்தவர்களில், தற்போதைய நிலையில், அவர்கள் ஓரளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என்று கருதப்படுகின்றது. இருப்பினும், காலப்போக்கில் ஆன்டிபாடிகளின் எண்ணிக்கை குறைகின்றது. இவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி அவசியமானது.

ஆய்வகத்தில் எப்போதும் IgG ஆன்டிஉடல் சோதனைகளின் இலக்கு ஆன்டிஜெனை (முனைப்புரதம் S1/S2) மட்டுமே பயன்படுத்துகின்றன. மறுபுறம், நேர்மறை IgG + உறுதிப்படுத்தல் சோதனையின் பொதுவான மதிப்பீடுகளிலிருந்து ஒரு தொகுப்பில் 3 இலக்கு ஆன்டிஜென்கள் கண்டறியப்படுகின்றது.

முனைப்புரதம்(S1, S2) மற்றும் நியூக்ளியோகேப்சிட்-(கருப்புரதம்) (Nc) புரதத்திற்கு எதிரான ஆன்டிபாடிகள் செயலில் உள்ளதா, உண்மையில் நோய்த்தொற்று ஏற்பட்டதா என்பதை மதிப்பிடுவதற்கு, ஆன்டிபாடியின் சுயவிவரத்தின் ஒட்டுமொத்த மதிப்பீடு மிகவும் நம்பகமானதாக பார்க்கப்படுகின்றது. நோயின் கடுமையான போக்கு T-செல்களும் பார்க்கப்படுகின்றது. தீராத நோய்களின் நிமித்தம் மற்றும் முதிர்வயது காரணமாக IgG ஆன்டிஉடல் சோதனைகளின் மதிப்பீடு குறைவானதாக காணப்படலாம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக