வெள்ளி, 17 டிசம்பர், 2021

வைரஸ்கள் ஒரு ரோபோ : ஏன், வைரஸ்கள் சுயமாக இனவிருத்தி செய்து கொள்ள முடிவதில்லை, அதற்கான காரணமென்ன. வைரஸ்கள் உண்மையில் ஒரு உயிரினம் இல்லை அதுவொரு நானோ துகள்களினால் செய்யப்பட்ட ரோபோ, உயிரற்ற ஒரு ஜடம் அஃறிணை பொருள் கொண்டது. பூமியிலிருந்து செவ்வாய்க்கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் ரோவர்களுக்கு இணையானது.

வைரஸ்களுக்கு எப்படி செயல்பட வேண்டும் என்று முன்கூட்டியே தகவல்கள் செலுத்தப்பட்டு விட்டன, அதன்படியே அவைகள் தானியங்கி முறையில் இயங்கி கொண்டுயிருக்கின்றன. அவைகளை அழிக்கமுடியாது. வைரஸ்கள் தங்களை தாங்களே நகலெடுக்கும் ஒரு முறையை கைவசம் வைத்திருக்கின்றது. ஒன்றிலிருந்து பத்தாகவும் பத்து, பல மில்லியன் களாகவும் நகலெடுத்து தங்களை தக்கவைத்துக்கொள்ளுகின்றது.

வைரஸ்களை செயற்கையாக உருவாக்க முடியுமா..? இந்த கேள்விக்கான பதில் பல பில்லியன் மதிப்பு வாய்ந்தது. நவீன தொழில் நுட்பத்தில் உருவான தடுப்பூசிகளில் வைரஸ் துகள்களுக்கு இணையான இன்னுமொரு செயற்கையான நானோ துகள்களை உருவாக்கமுடியும் என்றால், ஒரு வைரஸின் கருப்புரதத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக இன்னுமொரு வைரஸ்களின் தகவல்களை செருகி வைத்து ஒரு புதிய கலப்பின வைரஸ்களை உருவாக்க முடியும், இது இன்றைய நவீன தொழில் நுட்ப வசதியால் சாத்தியமான ஒன்று.

ஒரு பாதிப்பு இல்லாத வைரஸின் கருப்புரதத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக பாதிப்புக்களை ஏற்படுத்தும் இன்னுமொரு வைரஸ்களின் தகவல்களை செருகி வைத்து ஆபத்துக்களை உருவாக்கும் வைரஸ்களை உற்பத்தி செய்யமுடியும்.ஆனால் கொரோனா அப்படியான ஒரு வைரஸ் கிடையாது அதனுடைய 30,000 மரபணு கட்டுமான தொகுதியில் தனியாக முனைப்புரதத்தில் (S1/S2) மட்டுமே மாறுபாடுகளை கொண்டுள்ளது. தற்சமயம் உலவும் புதிய வைரஸ்களும் இதையே பின்பற்றுகின்றன, இது வைரஸ்களுக்கு இருக்கும் இயல்பானதொரு தகவல் அமைப்பு.

இந்த உலகம் ஒரு விஞ்ஞானியால் மட்டும் ஆளப்படவில்லை, பல விஞ்ஞானிகள், பட்டதாரிகள், புத்திஜீவிகளினாலும் இந்த உலகம் கண்கானிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் அமைப்பில் ஏதாவது ஒரு தில்லுமுல்லு செய்திருந்தால் கண்டிப்பாக ஆய்வுகளில் தெரிய வந்திருக்கும் அதனுடைய மரபணு வரிசை சீர்குலைந்திருதிருந்தால் அதுவே காட்டிக்கொடுத்துவிடும். கொரோனா வைரஸின் பூர்விகம் இன்று வரைக்கும் அப்படியேதான் இருக்கின்றது.

கொரோனா வைரஸின் புதிய தலைமுறை வைரஸ்களும் இயல்பாகவே மரபணு மாற்றமடைந்த வைரஸ்கள் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம். வைரஸ்களின் மரபணு கட்டமைப்பு தெரிந்திருந்தால் மட்டுமே புதிய வைரஸ் மாறுபாடுகளுக்கு எதிராக இன்னும் சக்திவாய்ந்த மருந்து மாத்திரைகளை தயாரித்துக் கொள்ளமுடியும். கொரோனாவை எந்த இடத்தில் தட்டினால் சிதைக்கமுடியும் என்ற புது யுத்தியும் பிறக்கும்,

இந்த அறிவை பெற்ற விஞ்ஞானிகள் ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கிய A,G,C, U/T நான்கு மரபணு (மெசஞ்சர்) குறியீடுகளை பயன்படுத்தி 20 அமினோ அமிலங்களை கொண்டு, வைரஸின் முனைப்புரதத்தை சமைக்கும் அற்புதமான மெசஞ்சர்-RNA தொழில் நுட்பத்தினை உருவாக்கினார்கள்.

ஒரு கண்டுபிடிப்பு அதனுடன் முடிந்துவிடுவதில்லை அதற்குள்ளே இன்னும் பல கண்டுபிடிப்புகள் மறைந்திருக்கின்றன. இதை முறையாக கற்றறிந்திருந்தால் தற்சமயம் புழக்கத்திலிருக்கும் தடுப்பூசிகளை மெசஞ்சர்-RNA தொழில் நுட்பத்திற்கு மாற்றமுடியும்.

வைரஸ்கள் தங்களை நகலெடுப்பதற்கு முன்பாக முற்றிலுமாக குலைக்கப்பட்டு, மரபணு குறியீடுகளை பயன்படுத்தி தனித்தனி உதிரிப்பாகங்களாக நகல் எடுக்கின்றது. புதிதாக நகல் எடுத்த உதிரிப்பாகங்கள் மீண்டும் கூட்டுப்பொருத்தல் (அசெம்பிள்) செய்யப்பட்டு புதிய வைரஸ்கள் வெளியேறுகின்றது. எடுத்துக்காட்டாக: கார் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு இணையானது வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக உதிரிப்பாகங்களை  உற்பத்தியாக்கி இறுதியில் ஒரிடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதுபோல் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

வைரஸ் கட்டமைப்பு: SARS-CoV-2 நான்கு வகையான கட்டமைப்பு புரதங்களாலானது ஸ்பைக் புரதம் (S1/S2) RBD (முனைப்புரதம்) M (சவ்வு புரதம்), E (உறைப்புரதம்) மற்றும் N (நியூக்ளியோகாப்சிட்). N புரோட்டீன்கள் உள் பகுதியை அடைத்து RNA மரபணுவைக் கொண்டிருக்கின்றன S, E மற்றும் M ஆகியவை வெளிப்புற ஷெல்லை உருவாக்குகின்றன. மேற்பரப்பில் உள்ள அத்துனை புரதங்களும் ஆன்டிஜென்கள். (அந்நிய துகள்கள்)

இந்த ஆன்டிஜென்கள் தடுப்பூசிகளின் தயாரிப்பில். மிகவும் முக்கியமான S புரதமாகும், இது ACE2 ஏற்பி வழியாக வைரஸ்கள் உடல் செல் இடையே மேற்பரப்பு தொடர்பை ஏற்படுத்துகின்றது. அதாவது வைரஸ்கள் தங்களை நகல் எடுப்பதற்காக உடலில் நுழையும் வாயில்.

லிப்பிட் இரட்டை அடுக்கு (கொழுப்பு படலம்): வெளியில் தொற்று ஏற்படாதவாறு கைகளுக்கு சவர்காரம் போட்டு கழுவும்போது இந்த லிப்பிட்/கொழுப்பு சவர்கார நுரையில் கரைந்து வைரஸ்கள் சிதைவுறுகின்றது. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் வைரஸ்களை கொல்ல முடியாது ஏனென்றால் அவைகள் உயிரற்ற ஒரு ஜடம் ஆனால் சிதைக்கமுடியும் அதாவது சுக்குநூறாக உடைக்கமுடியும்.

ஸ்பைக் புரதம் (S1/S2) RBD (முனைப்புரதம்): தடுப்பூசிகள் இந்த முனைப்பரதங்களுக்கு எதிராக தயாரிக்கப்படுகின்றன. இருப்பினும், வைரஸ்கள் தங்களை தக்கவைத்துக் கொள்வதற்கு மாறுபாடு அடைகின்றன, அப்படி மாறுபாடு அடைந்த வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசிகள் தயாரிப்பது கடினமான ஒன்று, ஒவ்வொரு வருடமும் புதிய மாறுபாடுகளுக்கு எதிராக புதிய மேன்பாடு தழுவிய தடுப்பூசி செலுத்துவது அவசியமான ஒன்று.

முனைப்புரதம் மூன்று பகுதிகளை கொண்டது: [RBD – முனைப்புரத தலை] [S1-முனைப்புரத மார்பு] [S2- முனைப்புரத உடல்] பெரும்பாலும் சூரசம்ஹாரம், பத்மா சூரன் தலையை மாற்றுவது போல் கொரோனா வைரஸ்கள் அடிக்கடி தலையை மட்டுமே மாற்றுகின்றது.செயற்கை ஆன்டிஉடல்கள் தயாரிப்பில் தலையை குறி வைக்காமல் கழுத்து பகுதியை குறிவைக்கும் ஆன்டிஉடல்களை தயாரித்தால் எல்லாவகைக்குமான ஒரு தடுப்பு மருந்தாக இருக்கும்.

சவ்வு புரதம் (M) மற்றும் உறை புரதம் (E) : வெளிப்புற ஷெல்லை உருவாக்குகின்றன. மேற்பரப்பில் உள்ள அத்துனை புரதங்களும் ஆன்டிஜென்கள்.(அந்நிய துகள்கள்)

நியூக்ளியோகேப்சிட் புரதம்(N) (கருப்புரதம்) : SARS-CoV-2 நியூக்ளியோகேப்சிட் புரதங்கள் வைரஸ் RNA மரபணுவை பிணைக்கும் முக்கியமான கட்டமைப்பு புரதமாகும். புதிய சிகிச்சை உத்திகளுக்கு, குறிப்பாக COVID-19 இன் பிந்தைய மாறுபாடுகளுக்கு N-கருப்புரத நடுநிலைப்படுத்தல் ஒரு நம்பிக்கைக்குரிய இலக்காக இருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றது. இதை நடுநிலைப்படுத்துதல் அல்லது சீர்குலைக்கும் மருந்துகளை தயாரித்தல்.

ஒற்றை இழை-RNA (ஒற்றைக்கால் மரபணு வரிசை) : பொதுவாக வைரஸ்கள் ஒற்றை இழை அல்லது இரட்டை இழைகள் கொண்டது கொரோனா ஒற்றை இழை கொண்ட வைரஸ். சிதைந்த டிஎன்ஏ பிரதி அல்லது வாசிப்புக்காக பிரிக்கப்படும் போது இது விளைகின்றது. பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினையில் (PCR), இதை வெப்பமாக்குவதன் மூலமும் அடையலாம்.

கொரோனா வைரஸின் 30,000 மரபணு கட்டுமான தொகுதியில் தனியாக  உதிரிப்பாகங்கள் தயாரிக்க பயன்படும் மெசஞ்சர் பகுதியை மட்டும். வெட்டியெடுத்து தடுப்பூசி/மருந்து மாத்திரைகள் தயாரிப்பது. மெசஞ்சர் (mRNA) தடுப்பூசி இந்த முறையை கொண்டது.

பூஸ்டர் தடுப்பூசி: ஓமிக்ரான் மாறுபாடு, டெல்டா மாறுபாட்டை விட வெகு சுலபமாகவும் விரைவாகவும் தொற்றக்கூடியது. இரண்டு மாறுபாடுகளும் கொரோனா தொற்றின் அடிப்படை நோய்குறிகள்தான், ஓமிக்ரான் நுரையீரல் திசுக்களை குறுகிய காலத்தில் பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்கின்றது.

அதாவது நுரையீரலை அரித்து தின்னுகின்ற வேகம் கூடியது. இருப்பினும் நோயின் கடுமை நபருக்கு நபர் மாறுபடுகின்றது ஆரோக்கியமான இளையவர்களுக்கு மிதமானதாகவும். முதிர்வயது நோய் தடுப்பாற்றல் குறைந்தவர்களுக்கு சற்று கடுமையாக நோய்குறிகள் ஏற்படலாம். இன்றைய நிலவரம் கருதி அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி அவசியமானது.

குறைந்தது ஒரு ஆறுமாத காலத்திற்காவது உங்கள் இரத்தத்தில் கொரோனாவுக்கு எதிராக ஆன்டிஉடல்களின் செறிவு உயர்ந்து காணப்படும். இது கடுமையான தொற்றிலிருந்து உடனடியாக உங்களை பாதுகாக்கின்றது.

6-9 மாதங்கள் கடந்த பிற்பாடு, ஆன்டிஉடல்களின் செறிவு குறைய தொடங்கும். தொடர்ந்து வரும் வருடங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்தால் திரும்பவும் பூஸ்டர் தடுப்பூசி அவசியமானது. கொரோனா தொற்று முற்றுலுமாக மறையும் வரைக்கும் உங்கள் நோய்க்காப்பு திறனை புதுப்பித்தல் அவசியமானது. ஏனென்றால் உங்களுக்கு போடப்பட்ட முதல் தடுப்பூசிகள் வீரியம் குறைந்து காலாவதியாகிவிடும்.. இது உங்களை மருத்துவமனை சிரமங்களிலிருந்து தள்ளிவைக்க உதவுகின்றது.

புதிதாக பிறந்த ஒரு மழலை தன் தாயிடமிருந்து, தன்னை பாதுகாத்துகொள்வதற்கு ஆயுதங்களை (ஆன்டிஉடல்களை) கடனாக பெற்றுவருகின்றது இது 12-18 மாதங்கள் குழந்தையை தொற்று நோயிலிருந்து பாதுகாக்கின்றது. குழந்தையின் நோய்க்காப்பு திறன் பலம் பெற்றவுடன் இந்த ஆன்டிஉடல்கள் காணாமல் போய்விடுகின்றது.

அது போலத்தான் தடுப்பூசிகளினால் வெளிப்படும் ஆன்டி உடல்களும் அவசியம் இல்லாத பட்சத்தில் அவைகள் மறைந்துவிடுகின்றது. நினைவக-B செல்களில் அந்நிய உடல்களுக்கு (ஆன்டிஜென்) எதிரான ஆன்டிஉடல்களின் தகவல் பதிவுமட்டும் இருக்கும். இது நோய் எதிர்பின் பாரம்பரியம் நன்றி…

சவர்க்காரம் போட்டு கை கழுவுதல்: சோப்பு மூலக்கூறுகள் இரண்டு முனைகளைக் கொண்டுள்ளன ஒரு முனை நீர் (H2O) மூலக்கூறுகளுடனும், மற்றொரு முனை கொழுப்புடனும் இணைகின்றது. சோப்பு மூலக்கூறுகள் கொரோனா வைரஸின் கொழுப்பு அடுக்கை உடைக்கின்றன. பாதுகாப்பு உறை இல்லாமல், சிதலமடைந்த வைரஸ்களினால்  நகலெடுத்து  பெருக முடியாது.

வைரஸ் கட்டமைப்பு: SARS-CoV-2 நான்கு வகையான கட்டமைப்பு புரதங்களாலானது, ஸ்பைக் புரதம் (S1/S2) RBD (முனைப்புரதம்) M (சவ்வு புரதம்), E (உறைப்புரதம்) மற்றும் N (நியூக்ளியோகாப்சிட்). N புரோட்டீன்கள் உள் பகுதியை அடைத்து RNA மரபணுவைக் கொண்டிருக்கின்றன S, E மற்றும் M ஆகியவை வெளிப்புற ஷெல்லை உருவாக்குகின்றன.மேற்பரப்பில் உள்ள அத்துனை புரதங்களும் ஆன்டிஜென்கள்.(அந்நிய துகள்கள்)

இந்த ஆன்டிஜென்கள் தடுப்பூசிகளின் தயாரிப்பில். மிகவும் முக்கியமான S புரதமாகும், இது ACE2 ஏற்பி வழியாக வைரஸ்கள்  உடல் செல் இடையே மேற்பரப்பு தொடர்பை ஏற்படுத்துகின்றது. அதாவது வைரஸ்கள் தங்களை நகல் எடுப்பதற்காக உடலில் நுழையும் வாயில்.

- கொழுப்பு சவ்வு (லிப்பிட் அடுக்கு)

- ஸ்பைக் கிளைகோபுரோட்டீன் (S1, S2)

- உறை புரதம் (E)

- சவ்வு புரதம் (M)

நியூக்ளியோகேப்சிட்

- நியூக்ளியோபுரோட்டீன் (N)

- (+) RNA மரபணு

 


புகைத்தல்; ஒரு சிகரட் எரியும் போது அதன் புகையில் 6,000 இரசாயனங்கள் வெளியிடப்படுகின்றன, அவற்றில் 250 தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள், அவற்றின்நுள்ளும் 90 நச்சுக்கள் புற்றுநோய்க்காரணிகள். நிகோடின் வெவ்வேறு நச்சு வடிவங்களாக மாறுகின்றது

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக