செவ்வாய், 19 ஏப்ரல், 2022

 கியூரி ஆய்வகம்,

கியூரி ஆய்வகம், இயற்பியல் மற்றும் வேதியல் இடையிலான ஒரு ஆய்வகம் போர்களுக்கு இடையில், மேரி கியூரி தலைமையிலான கியூரி ஆய்வகம் கதிரியக்கத்தின் ஆய்வில் நிபுணத்துவம் பெற்று, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆராய்ச்சி மையமாக அன்று விளங்கியது, இது இயற்பியலுக்கும் வேதியிலுக்கும் இடையிலான எல்லையில் ஒரு புதிய அறிவியலாகும். ஐரீன் மற்றும் ஃபிரடெரிக் ஜோலியட்-கியூரி 1934 இல் செயற்கை கதிரியக்கத்தை கண்டுபிடித்தனர், அடுத்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அவர்களுக்கு வழங்கப்பட்டது.


ஐந்து நோபல் பரிசுகளுடன் ஒரு குடும்பம்: Pierre Curie (1859-1906), Marie Curie-Sklodowska (1867-1934), அவர்களது மூத்த மகள் Irène Curie (1897 1956) மற்றும் அவரது கணவர் Frédéric Joliot (1900-1958) ஆகிய மூவருக்கும் ரேடியோ கதிரியக்க ஆய்விற்காக குறைந்தபட்சம் ஒரு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த இரண்டு தலைமுறை விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் பொருளின் அமைப்பு மற்றும் அணுவைப் பற்றிய மேம்பட்ட புரிதல் மற்றும் அதன் பசிபிக் பயன்பாடுகள்,(பரந்த பயன்பாடுகள்) குறிப்பாக மருத்துவத் துறையில் கதிரியக்க புற்றநோய்க்கான காரணிகள் மற்றும் போர்வீர்ர்களின் குண்டடிபட்ட இடங்களை கண்டறிய பயன்பட்டிருக்கின்றது..


மேரி க்யூரி Marie Salomea Skłodowska-Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934 புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார்.


இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903, 1911 ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு தனிமத்தை கண்டுபிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்.


மேரி, பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக பாரிஸ் பல்கலைக்கழகம் நுழைந்தவர் கியூரி என்ற இளைஞனை சந்திக்க வைத்து அவரின் வாழ்க்கையை புரட்டிப்போட வைத்தது. கியூரியின், யுரோனிய தனிமத்தின் ஆய்வுகள் மேரியை ஈர்க்க இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். எந்த கதிர்வீச்சை கண்டுபிடித்தாரோ அந்த கதிர்வீச்சே அவரின் மரணத்திற்கும் காரணியாக அமைந்தது. கதிர்வீச்சு தாக்கி இரத்த புற்றுநோய் ஏற்பட்டு இறந்தார்.


ரேடியம் பற்றிய கட்டுக்கதைக்கும் உண்மைக்கும் இடையில் இயற்பியல் மற்றும் வேதியல் இடையே ரேடியம் மற்றும் அதன் பண்புகள் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பொதுமக்களை கவர்ந்தன. அவரின் கண்டுபிடிப்பு அசாதாரண மாயாஜாலமாகவும் அன்று பார்க்கப்பட்டனர். ஏதோ ஒரு கல்லை வைத்து வித்தை காட்டுகின்றார்கள் என்று நினைத்தார்கள்.


1898 ஆம் ஆண்டில் பியர் மற்றும் மேரி கியூரி ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரசாயன கதிரியக்க பொருள் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் உற்பத்தியாளர்களையும் ஊக்கப்படுத்தியது, அவர்கள் கதிரியக்கமான அழகு மற்றும் சுகாதார பொருட்களை சந்தைப்படுத்தினர் அன்று ரேடியத்தின் மீதான இந்த மோகத்திற்கு அந்தக் காலத்தின் படங்களும் பொருட்களும் ஒளிரும் கைக்கடிகாரங்களும் சாட்சியாக இன்றும் இருக்கின்றன.


மேரி கியூரி கிட்டத்தட்ட 120 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ரேடியம் இன்றும் ஆராய்ச்சி மற்றும் புற்று நோயை குணப்படுத்த உதவுகின்றது. கியூரி ஆய்வகம் கதிர்வீச்சு என்றால் என்ன அதை எப்படி அளவிடலாம் அதற்கான கெய்கர் கவுண்டர் (கதிர்வீச்சு அளவு மீட்டர்) கண்டுபிடிப்பு என்று அணு ஆராய்ச்சியின் முன்னோடியாக இன்றும் இருக்கின்றது.


மேரி, முனைவர் பட்ட ஆய்வறிக்கை எழுதுவதற்காக அவரது கணவர் கியூரி ஆய்வு செய்த யுரோனியம் கல்லை வைத்து தொடர்ந்து ஆய்வு செய்யும் போதுதான் நூறு மடங்கு கதிரியக்கத்தை வெளியேற்றும் ரேடியத்தை கண்டுபிடித்தார். இந்த கல் பின்னால் தனிம அட்டவணையில் அவரின் தாய்நாடு போலந்து நாட்டின் பெயரை தாங்கி இந்த புது தனிமங்கள் பொலோனியம்-84 மற்றும் ரேடியம்-88 என்று அறியப்படுகின்றது (யுரேனியம், பொலோனியம், ரேடியம்) *ரேடியம் என்றால் கதிர்வீச்சு என்று பொருள்படும். ரேடியம், லத்தீன் வார்த்தையான "ரேடியஸ்" = "ரே" என்பதிலிருந்து பெறப்பட்டது


மேரி கியூரி ரேடியம்  ரேடியம்-88 மற்றும் பொலோனியம்-84 : ஜூலை 1898 இல் அவர்கள் இறுதியாக கதிரியக்க தனிமமான பொலோனியத்தையும்  சில வாரங்களுக்குப் பிறகு ரேடியம் "ரேடியன்ட் எண்ட்" குறிப்பாக வலுவான கதிர்வீச்சு தனிமமாக தனிமைப்படுத்தப்பட்டது. அறிவியலுக்கு கதிரியக்கம் என்ற சொல்லையும் ரேடியம்-88 என்ற புதிய தனிமத்தையும் அறிமுகப்படுத்தினார்கள்.


ஆய்வகத்தில் செய்யப்பட்ட விஞ்ஞானப் பணிகளைத் தூண்டும் ஏராளமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன அறிவியல் கருவிகள், ஃபோ டோகிராஃப்கள், புத்தகங்கள் மற்றும் காப்பகங்களிலிருந்து ஆவணங்கள் மேரி கியூரி பயன்படுத்திய மேசை மற்றும் வேதியியல் ஆய்வகம் பாதுகாக்கப்பட்டு நிரந்தர கண்காட்சியின் மையமாக இந்த இடமுள்ளது. மேரியின் நோட்புக், ஆய்வு குறிப்பேடுகள் அவர் பயன்படுத்திய மேசை நாற்காலிகள் அறை கதவு கைப்பிடிகள் இன்றும் கூட கதிர்வீச்சினால் மாசுபட்டுள்ளது.


உலக புகழ் பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளின் நடுவில் ஒரு பெண்ணாக நின்று சாதித்திருக்கின்றார். இப்படிப்பட்ட மேதைகள் வாழ்ந்த இடங்களை ஒரு முறையாவது நேரில் சென்று பார்வையிட வேண்டும். (CurieMuseum 1 Rue Pierre et MarieCurie 75005 Paris,Frankreich) நுழைவு கட்டணம் இலவசம் திறந்திருக்கும் நேரம் மதியம் 1300 1700 மணி) *நான் இரண்டு தடவைகள் நேரில் சென்று பார்த்த ஒரு பதிவுதான் இது என்பது குறிப்பிடதக்கது.


மேரி கியூரி, சுயசரிதை புத்தகத்திலிருந்து மேரி கியூரியை பற்றிய மேலும் சில சிறப்புகள்: மேரி கியூரி (1867-1934) அவரது காலத்திற்கு ஒரு விதிவிலக்கான பெண்: ஆண்களின் ஆதிக்கம் பெண்கள் கல்வி கற்க விரும்பாத ஒரு காலம், 15 வயதில் அவர் தனது வகுப்பில் சிறந்தவராக, சிறந்த உயர்நிலைப் பள்ளி டிப்ளமோ தேர்ச்சி பெற்றார். இருப்பினும், ஒரு பெண்ணாக, அவர் தனது சொந்த ஊரான வார்சாவில் பட்டம் பெற மறுக்கப்பட்டார்,


எனவே மேரி தனது நிதி சேமிப்புக்காக, பாரிஸுக்குச் செல்லும் வரை சில ஆண்டுகளுக்கு ஒரு தனியார் ஆசிரியராக பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கு அவர் இயற்பியல் மற்றும் கணிதம் படிக்க ஆண்களின் ஆதிக்கம் செலுத்தும் சோர்போனில் சேர்ந்தார். அவர் தனது படிப்பை 1893/94 இல் கௌரவத்துடன் முடித்தார், பின்னர் ஹென்றி பெக்கரலின் உதவியாளரானார்.


அவர் பியர் கியூரியை அவரது ஆய்வகத்தில் சந்தித்து காதலித்தார் மற்றும் 1895 இல் அவரை மணந்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்: ஐரீன், *1897; † 1956 (வேதியியல் நோபல் பரிசு வென்றவர் 1935) மற்றும் ஏவ், *1904; † 2007 (பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர்)


அவர் கணவர் பியர் மற்றும் ஹென்றி பெக்கரெல் ஆகியோருடன் 1903 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற வரலாற்றில் முதல் பெண்மணி ஆனார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, வேதியியலுக்கான நோபல் பரிசு சேர்க்கப்பட்டது. இன்றுவரை இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற ஒரே பெண்மணியும் இவரே! 1906 ஆம் ஆண்டில், அவர் ஒரு வண்டி விபத்தில் தனது கணவரையும் நெருங்கிய விஞ்ஞான தோழரையும் சோகமாக இழந்தார், பின்னர் சோர்போனில் அவரது விரிவுரைகளை ஏற்றுக்கொண்டார்கள்.


இந்தப் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பேராசிரியரானார். முதல் உலகப் போரின் போது, ​​அவர் ஒரு மொபைல் எக்ஸ்ரே இயந்திரத்தை உருவாக்கி, காயம்பட்ட வீரர்களை முன்பக்கத்தில் நேரடியாகப் பரிசோதிக்கப் பயன்படுத்தினார். எக்ஸ்ரே இயந்திரத்தை பயன்படுத்தி குண்டடி பட்ட இடங்களை கண்டறிந்து பல போர்வீர்ர்களை மரணத்தின் வாயிலிருந்து காப்பாற்றினார். பெண்களுக்கு எக்ஸ்ரே தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் பயிற்சி அளித்தார்.


1920 களில் அவர் அமெரிக்காவிற்கு விரிவுரை சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார், மேலும் அவரது மேலதிக ஆராய்ச்சிக்கு நிதியளித்தார்கள்.


கதிரியக்கத்தின் கண்டுபிடிப்பு இன்னும் அவரது மிகப்பெரிய அறிவியல் வெற்றியாக கருதப்படுகின்றது. 1898 ஆம் ஆண்டில், இந்த தம்பதியினர் இரண்டு புதிய கதிரியக்க கூறுகளை கனிம பிட்ச்ப்ளெண்டிலிருந்து (யுரேனைனைட்) கண்டறிய முடிந்தது.


ரேடியம் மூலம், புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்தைக் கண்டுபிடித்ததை மேரி விரைவில் உணர்ந்தார். புதிய சிகிச்சைமுறையின்படி செயல்படும் நிறுவனங்கள் நிறுவப்பட்டன. “மனிதனின் துன்பங்களைத் தணிக்க முடியும் என்று நான் நம்புவதில் எவ்வளவு மதிப்பு வாய்ந்தவன் என்பதை எளிதாகப் பார்க்க முடிகிறது. ஆனால், கதிரியக்கப் பொருட்கள் தவறான கைகளுக்குச் சென்றால், அவை பெரும் சேதத்தை ஏற்படுத்தும்” என்ற பியரின் எச்சரிப்பு, அவள் மனதில் எப்போதும் பதிந்திருந்தது. மனித குலத்திற்கு கதிரியக்கத்தை அமைதியான முறையில் பயன்படுத்துவது குறித்த மருத்துவ, உயிரியல் மற்றும் வணிக ஆராய்ச்சியில் அவர் குறிப்பாக உறுதிபூண்டார்.


மேரி கியூரி 1602 ஆண்டுகள் அரை ஆயுள் கொண்ட ரேடியம்-226 தனிமத்தைக் கண்டுபிடித்தார். அந்த நேரத்தில் க்யூரியின் ரேடியம்-226 புற்றுநோய் எதிர்ப்பு ஆயுதமாக கருதப்பட்டாலும், வரலாற்று ரீதியாக அதன் நீண்ட அரை-வாழ்க்கையில் இருந்து பாதுகாப்பு கவலைகள் எழுந்துள்ளன. எடுத்துக்காட்டாக, மேரியின் நோட்புக் 1984 இல் மிக உயர்ந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கையின் கீழ் ஏலம் விடப்பட்டது, ஏனெனில் புத்தகம் இன்னும் மோசமாக கதிர்வீச்சினால் மாசுபட்டுள்ளது, அது படிக்க முடியாததாகக் இன்றும் கருதப்படுகின்றது.


ஆனால் அயராத ஆராய்ச்சியாளர் தனது விஞ்ஞான வெற்றிகளுக்கு அதிக விலை கொடுத்தார் என்று சொன்னால் மிகையாகாது. அவர் 1934 இல் சான்செல்மோஸில் (சவோய் / பிரான்ஸ்) ஒரு சுகாதார நிலையத்தில் இறந்தார். ரேடியம் கதிர்வீச்சுக்கு பல வருடங்களாக வெளிப்பட்டதால் ஏற்பட்ட ரத்தப் புற்றுநோயால்(லுக்கேமியா) அவர் பாதிக்கப்பட்டிருக்கலாம்.


ஆனால் மற்ற விஞ்ஞானிகள் கியூரியின் ஆராய்ச்சியை உருவாக்கி 100 ஆண்டுகளுக்கும் மேலாக ரேடியம்-223 ஐ உருவாக்கினர், அதன் அரை ஆயுள் வெறும் 11.4 நாட்கள். இன்றைய பார்வையில், புற்றுநோயைக் குணப்படுத்தவும் இது பயன்படுத்தப்படலாம். இருப்பினும் இது இன்று புற்றுநோய் மருத்துவத்திற்காக பயன்படுத்த தடை செய்யப்பட்ட ஒன்று.


அணுவாயுதம்: அணுக்குண்டை கண்டுபிடித்தவர் ராபர்ட் ஓப்பன்ஹைமர். அணுகுண்டு முதன்முதலில் அமெரிக்காவால் மன்ஹாட்டன் திட்டத்தில் உருவாக்கப்பட்டது. டிரினிட்டி என்ற திட்டத்தின் கீழ் அணு ஆயுத வெடிப்புடன் முதல் அணு ஆயுத சோதனை ஜூலை 16, 1945 அன்று, நியூ மெக்ஸிகோ பாலைவனத்தில் புளூட்டோனியம்-94(244) நிரப்பப்பட்ட முதல் அணுகுண்டு வெற்றிகரமாக வெடிக்க வைக்கப்பட்டது.


இதற்கு முன்னால்( பிளாஷ்பேக்) அணுவாயுதத்தின் தொடக்கமும் மேரிகியூரி ஆய்வகம் தான்.


ஓட்டோ ஹான் ஒரு ஜெர்மன் வேதியியலாளர் மற்றும் அணு ஆராய்ச்சி கதிரியக்க வேதியியலின் முன்னோடி, அவர் யுரேனியத்தின் பிளவு கண்டுபிடிப்பதற்காக 1944 இல் வேதியியலில் நோபல் பரிசைப் பெற்றார். அணுவை முதல்முதலில் பிளந்தவர் என்ற பெருமை இவரையே சேரும்.


1905-1921 க்கு இடையில் அவர் ஏராளமான, ஓரிடமூலகம் (ஐசோடோப்புகள்) 1909 இல் கதிரியக்க தனிமங்களை கண்டுபிடித்தவர். அடால்ஃப் ஹிட்லரின் வீழ்ச்சி அமெரிக்கப்படைகளினால் சிறைபிடிக்கப்பட்ட பல விஞ்ஞானிகளில் ஓட்டோ ஹானும் ஒருவர் இவர் ரூதர்போர்ட் மற்றும் பிரடெரிக் ஸோடியின் மாணவர்/யுரேனிய ஆய்வுகளில் பங்கெடுத்தவர்.


அணுவாயுதம் எப்படி ரஷ்யாக்கு கிடைத்தது: கிளாஸ்ஃபுக்ஸ்(1911, கிழக்கு பெர்லின்) என்ற ரஷ்ய உளவாளி ஜெர்மனியை விட்டு வெளியேறி, கிரேட் பிரிட்டனில் இயற்பியல் படிப்பை முடித்த அவர், பின்னர் அமெரிக்க-பிரிட்டிஷ் மன்ஹாட்டன் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். தனது ஆராய்ச்சிப் பணிக்கு இணையாக, சோவியத் யூனியனுக்கு சொந்தமான ஒரு அணுகுண்டை உருவாக்க உளவாளியாக உதவினார். ஆகஸ்ட் 1949 முதல் சோவியத் யூனியன் தன்னை அணுக்குண்டு தயாரிக்கும் ஒரு நாடாக அறிவித்தது.


அணுவாயுதத்தை அவ்வளவு சுலபத்தில் எல்லா நாடுகளினாலும் செய்துவிடமுடியாது, அதற்கு காரணம் யுரேனியத்தை பிரித்தெடுப்பதுதான். யுரேனியம் 235 அணுவைத்தான் பிளக்கமுடியும். இயற்கையில் 99.3 விழுக்காடுகள் யுரேனியம் 238 தான் காணப்படுகின்றது.


இதிலிருந்து U 235 பிரித்தெடுக்கவேண்டும். அணுக்குண்டு தயாரிப்பதற்கு யுரேனியம் செறிவூட்டல் அவசியமானது அதற்கு அதிவேகமாக சுழலும் மையவிலக்கு விசையாழிகள் தேவை. விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில நாடுகள்தான் இந்த விசையாழியை வைத்திருக்கின்றன.


கன உலோகம் யுரேனியம் பல்வேறு வகையான அணுக்களில் ஓரிடமூலகம் இயற்கையாகவே நிகழ்கின்றது 99.3 சதவீதம் U 238. இந்த வகை அணுக்கருவில் 92 புரோட்டான்கள் மற்றும் 146 நியூட்ரான்களைக் கொண்டுள்ளது, இது 238 அணுக்கரு கட்டுமானத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. மறுபுறம், உலோகத்தில் 0.7 சதவிகிதம் மட்டுமே நியூட்ரானை ஏவி குலைக்கக்கூடிய நிலையற்ற தன்மை உள்ள U 235 சங்கிலி எதிர்வினை கொண்டது. தொடர்ந்து படிக்க இதில் அழுத்தவும் தட்டம்மை - இந்த கலியுகத்தில் 11.04.2019 — http://mahesva.blogspot.com/2019/04/blog-post.html





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக