திங்கள், 6 டிசம்பர், 2021

stutter

திக்குவாய்💙💚💛 பேச்சுத் திணறல் (பால்பூடீஸ்) என்பது மோட்டார் தொடர்பான பேச்சுக் கோளாறாகும், அதாவது ஒருவரின் சரளமான பேச்சு ஓட்டம் தடைபடுகின்றது. (மோட்டார் இயக்கம் என்பது உடல் இயக்கத்திற்கும் அறிவாற்றல் வளர்ச்சிக்கும் இடையிலான ஒரு உறவு)

தத்தத்தன தத்தத் தனதன இது பொதுவாக எந்த அறிவிப்பும் இல்லாமல் வந்து வந்து போகும் பூனை என்று சொல்வதற்கு பதிலாக பூ-பூ-பூ……..பூ …. னை, கோழி, கோ-கோ……ழி ஈ என்ற எளிமையான சொற்கள் குழந்தையின் உதடுகளிலிருந்து சரளமாக வெளிவர விரும்புவதில்லை, அதற்குப் பதிலாக அவை ஒரு ஒலி அல்லது ஒரு எழுத்தை மீண்டும் மீண்டும் கூறுகின்றன.

சில சமயங்களில் பேசுவது முற்றிலுமாக நின்று முழு வார்த்தையும் சிக்கிக் கொள்ளுகின்றது. இரண்டு நிமிடங்கள் கடந்து மீண்டும் முழுமையாக வந்து போகும். பள்ளியில் ஆசிரியர் கேட்கும் ஒரு கேள்விக்கு பதில் சொல்வதற்குள்ளே அடுத்த பாடத்திற்கு மணியடித்துவிடுவார்கள்.

பேச்சு கோளாறின் போது ஏற்படும் கண் சிமிட்டுதல் மூச்சு வாங்கும் சுவாசம், நடுங்கும் உதடுகள், துளிரும் வியர்வை மாறுபட்ட தலை முக அசைவுகளையும் குழந்தையிடம் கவனிக்க முடியும். உலக மக்கள் தொகையில் சுமார் ஒரு சதவீத மக்கள் இந்த கோளாற்றினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் இதில் பெண்களை விட ஆண்களே அதிகம்.

திக்கு வாய்க்கும் உளறு வாய்க்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு அதிக மதுபானம், கல்லீரல் பாதிப்பால் நாக்கு தடித்து ஏற்படும் பேச்சு தடுமாற்றம், வார்த்தைகள் சுருங்கி உச்சரிப்பு கோளாற்றை ஏற்படுத்துவதுண்டு

இதனுடைய காரணிகளை களைந்துவிட்டால் குணமாகிவிடும். பேச்சுத் திணறலுக்கு நீண்டகால பயிற்சியும் நல்ல மருத்துவ ஆலோசனை, பேச்சு சிகிச்சையாளரின் உதவியும் தேவைப்படுகின்றது. திக்குவாய் உள்ள பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலைகள் நல்ல அரவனைப்பு அவர்களை மீட்டெடுப்பதற்கு உதவுகின்றது.

மூளையில் தவறான தொடக்கம் சரளமாகப் பேசும் மொழிப் பகுதிகளின் போதிய ஒருங்கிணைப்பு இல்லாமல் போவது ஒரு பிள்ளை பேசும் போது நாக்கு தடுமாறுகின்றது

குழந்தைகளில் திணறல் பெரும்பாலும் குழந்தை பருவத்திலேயே பேச்சு ஓட்டத்தின் தொந்தரவுடன் தொடங்குகின்றது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சரியான காரணத்தை அடையாளம் காண முடியாது. அவர்களின் இந்த மழலை வாழ்க்கை காலகட்டத்தில், அவர்கள் புதிய சொற்களைக் கற்றுக்கொள்கிறார்கள்,

மூளை சேமிப்பதில் மும்முரமாக உள்ளது மற்றும் புதிய பதிவுகள் செயலாக்கப்பட வேண்டிய நிர்பந்தத்தில் பேசுவதற்கு சொற்கள் இல்லாமல் பேச்சுத் திணறல் ஏற்படலாம். இது இயல்பானது குழந்தை வளரும்பருவத்தில் காணாமல் போய்விடும்.

திணறல் காரணங்கள்: பல்வேறு காரணங்களால் கண்டறியப்படலாம் என்று இன்றைய ஆராய்ச்சிகள் கூறுகிறது. அதில் ஒரு காரணம் நரம்பு சமிக்ஞைகளின் தொந்தரவு. குழந்தை பருவத்தில் அதிர்ச்சிகரமான மூளை காயம், மண்டையில் அடிபடுதல் விபத்து அல்லது நோய்களின் நிமித்தம் மூளை பாதிப்பு போன்ற உடல்ரீதியான காரணிகளும் திக்குவாய்க்கு சாத்தியமான காரணங்களாகும்.

கொரோனாவின் நீண்டகால பாதிப்புக்கள்: பொதுவாக எல்லா வைரஸ்களும் மரபணுக்களை அறுத்து சீர்குலைத்து விடக்கூடியது. கொரோனா வைரஸை சொல்லவா வேண்டும் அது தன்பாட்டில் ஏதோ செய்து கொண்டிருக்கின்றது.

கோவிட் -19 நரம்புகள் மற்றும் மூளையின் செயல்பாடுகளை சீர்குலைக்கின்றது. SARS-CoV-2 கொரோனா வைரஸ் மூளையில் கோளாறுகளை ஏற்படுத்தும். மூளை வீக்கம், செல்கள் மற்றும் இரத்த நாளங்களில் செயலிழப்பு, இரத்தகசிவு மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் எதிர்வினைகளுக்கு வழிவகுக்கும். இது பேச்சு திணறல் மட்டுமின்றி ஒருவரின் ஒட்டுமொத்த பேச்சையும் நிறுத்திவிடும்.

சம்பந்தப்பட்ட பேச்சு உறுப்புகளின் மோட்டார் கோளாறுடன் இணைந்து, பேச்சு ஓட்டத்தின் சீர்குலைவுகள் உருவாகலாம். குழந்தைகள் பேசுவதை விட வேகமாக சிந்திப்பதால் பேசும்போது திணறுகிறார்கள்.

திக்குவாய் (பால்புடிஸ்) உளவியல் ரீதியாகவும், மரபணு ரீதியாகவும் ஏற்படலாம். அடிக்கடி ஏற்படும் மன வருத்தம், கடுமையான மன அழுத்தம், அதிர்ச்சி, பயம் கடுமையான கோவம், குடும்பப் பிரச்சனைகள், பெற்றவர்களின் சண்டைகளினால் குழந்தைகளின் மனம்/மூளை பாதிக்கப்படுகின்றது. .

பிள்ளைகளை படி படி என்று தொல்லை கொடுக்கும் பெற்றவர்களின் கடுமையான போக்கு உணர்ச்சி அழுத்தத்தைத் தூண்டும் சூழ்நிலைகள் பேச்சுத் திணறலை  மட்டுமின்றி சில சமயங்களில் ஒட்டுமொத்தமாக பேசும் திறனும் முடக்கப்படுகின்றது. பிள்ளைகளின் திக்கு வாய்க்கு பெற்றவர்கள் கூட ஒரு காரணமாக அமையலாம்.

திறமையாக பேசும் ஒருவர் தனக்கு ஒரு துன்பம் ஏற்பட்டு, நீதிமன்றம் செல்லும்போது அவரால் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் போகின்றது அவ்வளவு தூரம் ஒருவரின் பேச்சுத்திறனை துன்பம் மன வேதனைகள் தடுத்துவிடுகின்றது.

கடும் கோபம் எரிச்சல், சரளமாக பேசும் ஒருவரின் பேச்சை முடக்கி விடுகின்றது தன்னுடைய எண்ணங்களை மற்றவர்களுடன் பரிமாற முடியாமல் போகும்போது அதை செயலில் காட்டுகின்றார். யாரையாவது போட்டு அடிப்பது தன்னுடைய அன்பை காட்ட முத்தம் கொடுப்பது. தான் சொல்ல வந்ததை இப்படி சொல்லி முடிக்கின்றார்.

உளவியல் காரணிகள்: மன உளைச்சலுக்குப் பிந்தைய வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்தும் ஒருவருக்கு பேச்சு திணறல் ஏற்படலாம். பயம், பதட்டம் போன்றவற்றுடன் இது நிகழ்ந்து அதன் பிறகும் தொடரலாம். இந்த கோளாறு உள்ள பிள்ளைகள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் போது மிகவும் மோசமானதாக வளர்கின்றது, அதாவது கிண்டல், கேலி அவமானம் போன்றவை அந்த பிள்ளையின் பேச்சு கோளாற்றை தீவிரமடைய செய்கின்றது.

நரம்பியல் காரணிகள்: பேச்சு தடுமாற்றத்தை பாதிக்கக்கூடிய சாத்தியமான நரம்பியல் காரணிகள் பற்றி பல்வேறு அனுமானங்கள் உள்ளன. உதாரணமாக, பேசுவதற்குப் பொறுப்பான நரம்பு சமிக்கைகளின் இடையூறு அல்லது பேச்சு உறுப்புகளின் மோட்டார் தொந்தரவுகள் திணறலைத் தூண்டும் என்று நம்பப்படுகின்றது.

கூடுதலாக, விஞ்ஞானிகள் மூளையில் ஒரு குறிப்பிட்ட பகுதி திணறலுக்கு முக்கிய பங்களிப்பாக இருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். இது மூளையின் முன் பகுதியில் அமைந்துள்ள ஒரு அதிகப்படியான நெட்வொர்க் ஆகும். பாதிக்கப்பட்ட நபர்கள் இதன் பாதிப்பால் தடுக்கப்படுகிறார்கள் மற்றும் பேச்சு இயக்கங்களைத் தயாரிக்கவோ அல்லது செயல்படுத்தவோ முடியாது, இது சரளமான உச்சரிப்பை சீர்குலைக்கின்றது.

பேச்சுத் திணறலுள்ள பிள்ளைகள் அவசரகாலங்களில் அவர்களினால் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவமுடியாமல் போகலாம், அதற்கு அவர்களை வாட்ஸ்அப்பில் விரைவாக எழுதும் எழுத்துப் பயிற்சி கொடுங்கள். அவர்களின் உடல் கை அசை மொழியை விரைவாக புரிந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் அதற்கான பயிற்சியும் கொடுங்கள். இது அவர்களை ஆபத்தான காலத்தில் தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்வதற்கு உதவும். நன்றி.

பேச்சுத் திணறல்

- எழுத்துஒலி.

- வரைவிலக்கணம்.

- கட்டுப்படுத்துதல்.

- கடுமையான போக்கு.

- மன அழுத்தம்.

- தகவல் தொடர்பு.

- ஒழுங்கின்மை.

- உரை/பேச்சு.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக