வெள்ளி, 10 டிசம்பர், 2021

வைரஸ்கள் எதற்காக மாறுபாடு அடைகின்றன..? அவைகள் தங்களை இனவிருத்தி செய்து கொள்ள விரும்புகின்றன அதற்காக வைரஸ்கள் பரவ விரும்புகின்றது. அவைகள் ஒட்டுண்ணிகள் போல் முட்டையிட்டு இனவிருத்தி செய்வதில்லை, எனவே வைரஸ்கள் தன்னைத் தானே நகலெடுக்கின்றது. அவைகளினால் சுயமாக நகல் எடுக்க முடிவதில்லை அதற்காக அவைகள் எங்களை தேடிவருகின்றது. மனித செல்களை அவைகள் பிரதி அடிக்கும் இயந்திரமாக பயன்படுத்துகின்றது.

அப்படி பிரதி எடுக்கும் போது அவைகள் கள்ளநோட்டு அடிக்கும் கும்பல்போல் ரவுடித்தனமாக நடந்து கொள்ளுகின்றன. நகல் எடுத்ததும் அச்செடுத்த செல்களை அழித்து விட்டு செல்கின்றன.

வைரஸிலிருந்து வரும் புதிய நகலும் தன்னைத்தானே நகலெடுக்கின்றது. அப்படியே அது நீண்டு கொண்டே செல்கின்றது. அப்படி நகலெடுக்கும்போது அவைகளில் பிழைகள் ஏற்படும். அந்த பிரதிகள் வித்தியாசமானவைகள் அதனால் வைரஸ்களின் அமைப்பு மாறிவிட்டது இந்த மாற்றம் பிறழ்வு, புதிய மாறுபாடு என்று அழைக்கப்படுகின்றது.

இது அடிக்கடி நடக்கின்றது பெரும்பாலான நேரங்களில், நகல் பிழைகள் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. வைரஸ்கள் உடலில் நுழைவதும் தெரியாது அது நகல் எடுத்து வெளியேறுவதும் தெரியாது இது பாதிப்பு இல்லாத தொற்று என்று அழைக்கப்படுகின்றது.

சில நேரங்களில் ஒரு நகல் எடுப்பு வைரஸை மேம்படுத்துகின்றது. அதாவது ஒரு சில உயிரினங்களில் பிரதியெடுத்து வெளியேறும் போது அந்த வகை வைரஸ்கள் வேகமாக பரவுகின்றது. இந்த புதிய மாறுபாடு வைரஸ்கள் நம் உடலில் உள்ள செல்களை நன்றாக ஊடுருவிச் செல்லுகின்றது.

நகல் வைரஸ்கள் ஒரேமாதிரி உருவ அமைப்பில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை, அவைகள் மேற்பரப்பில் ஊனமுற்று சிதைந்தும் கூட இருக்கலாம் ஒருசில பகுதிகளில் முனைப்புரதங்கள் காலியாகவும் பாதி, நீள்வட்டம் ஓவல், கசக்கிய வடிவமாக இருக்கலாம். அதனுடைய அமினோ அமில சங்கிலி சீர் குலைந்து மாறுபட்டு காணப்படலாம் இதன் நிமித்தம் அதனுடைய புரத அமைப்பு முற்றிலுமாக மாறுபட்டு காணப்படுகின்றது.

வெவ்வேறு விலங்கு மற்றும் நாட்டுமக்களின் உணவுப்பழக்கம், உடல்வாசி வைரஸ்கள் நகல் எடுத்து வெளியேறும் போது வீரியம் அடைய செய்கின்றது, புதிய மாறுபாடுகள் உருவெடுக்கின்றது. அசைவ உணவு வைரஸ்களுக்கு விருந்து, தொற்றுநோய் காலங்களில் சைவ உணவு மிகச்சிறந்தது.

தீராத நோயாளிகள், புற்றுநோய், ஏய்ட்ஸ் நோயாளிகள் மற்றும் அதிகளவு மருந்து மாத்திரைகள் எடுப்பவர்களின் உடல் திசுக்கள் நாறி உப்பிபோயிருக்கும் இந்த செல்களில் நகல் எடுத்த வைரஸ்கள் சிதைவுற்று வெளியேறுகின்றன, தற்சமயம் உலவும் புதிய மாறுபாடு டெல்டா வைரஸ்கள் தீராத நோயாளியிடமிருந்து உருமாறி வந்திருக்கலாம். ஓமிக்ரான் வைரஸ் ஒரு எச்.ஐ.வி நோயாளியிலிருந்து தோன்றியிருக்கலாம். *(இருக்கலாம் என்று முடிவுறுவது சரியாக தெரியாது என்று பொருள்படும்)

மனித உடல் வைரஸ்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அவைகள் தங்களை தக்கவைத்துக்கொள்வதற்கு மாறு வேடம் போடுகின்றது அதன் மூலம் வைரஸ்கள் நம்மை நன்றாக பாதிக்கலாம். இதன் நிமித்தம் மனிதர்கள்/விலங்குகள் கடுமையாக நோய் அல்லது இறப்பு வரை இட்டுச்செல்லுகின்றது. இந்த வைரஸ்கள் மிகவேகமாக பரவுகின்றதினால் அதன் தொடக்கம், மூலத்தை கண்டுபிடிப்பது கடினம். .

இப்போது வேதாளம் முருங்கமரத்தில் மீண்டும் உடலில் ஏதோ நடக்கின்றது புதிய மாறுபாடு மற்றும் சிறந்த வைரஸ் பழைய வைரஸை இடமாற்றம் செய்கின்றது. இப்போது வைரஸ்கள் தன்னைத் தானே அறிமுகம் செய்கின்றது

சும்மா சிவனே என்று கிடந்த என்னை எதற்காக தட்டி எழுப்பினாய் அதற்கான தண்டனைதான் இது, பட்டுத்தெளிந்துகொள் இது உனக்கான பாடம் கற்றுக்கொள். காடுகளையும் காட்டு விலங்குகளையும் தொந்தரவு செய்யாதே இந்த முறை தப்பித்துக் கொண்டாய் மீண்டும் வந்தால் தாங்கமாட்டாய், நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று சொல்லி விடை பெற்றுக்கொண்டது ஓமிக்ரான்.

◼ஓமிக்ரான் வைரஸ் ஒரு ஏய்ட்ஸ் நோயாளியிடமிருந்து தொடங்கியிருக்கலாம். ஓமிக்ரானைப் பற்றி இதுவரை அதிகம் அறியப்படாததால்,  புதிய SARS-CoV-2 பரம்பரையின் தற்போது பரவலிலுள்ள உள்ள இந்திய-டெல்டா மாறுபாட்டின் வழித்தோன்றல் அல்ல.

ஒன்று மட்டும் நிச்சயம், மாறுபாடு வைரஸ் மரபணுவில் பல மாற்றங்கள் உள்ள டெல்டாவை விட கொரோனா வைரஸ் குடும்ப மரத்தின் வேறு கிளையில் ஓமிக்ரோன் வைரஸ் வைக்கப்பட்டுள்ளது.

◼உலகம் முழுவதிலுமிருந்து வைரஸின் வரிசைமுறை முடிவுகளின் தரவுத்தளத்தில்  ஓமிக்ரானின் ஆரம்ப வடிவம் ஆல்பா மற்றும் டெல்டா போன்ற நான்கு மாறுபாடுகள் தோன்றுவதற்கு முன்பே அதன் சொந்த வைரஸ் வகையாக உருவாக்கப்பட்டுவிட்டது. அப்படி என்றால் இவ்வளவு காலமும் எங்கிருந்தது அல்லது  அறியப்படாமல் மறைந்திருந்ததா..?

◼கோவிட்-19, ஆரம்ப காலப்பகுதியில் தொற்றுநோயின் தொடக்கத்தில், பாதிக்கப்பட்ட விலங்குகளில் SARS-CoV உடன் இணைந்து ஓமிக்ரான் மாறுபாடு தோன்றியிருக்கலாம்.  ◾ஒரு கொறித்துண்ணி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட  பின்னர் வைரஸ் இந்த விலங்கில் குடியேறி, நீண்ட காலத்திற்கு மேலும் வளர்ச்சியடைந்து பிறழ்ந்திருக்கலாம்...?

◼டென்மார்க்கில், 2020 இல் ஒரு பிறழ்வு கண்டறியப்பட்டது வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகின்றது என்று, ஓமிக்ரான் இப்போது அதையே செய்து கொண்டிருந்திருக்கலாம். பிறழ்வு முதலில் மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்குத் தாவி பின்னர் மீண்டும் பிறழ்ந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம்..?  நன்றி மகேஷ்-இரவி

 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக