ஞாயிறு, 5 டிசம்பர், 2021

இரத்த தானம் யார், யாருக்கு உதவ முடியும். 1901 ஆம் ஆண்டில் மனிதர்களில் இரத்த வகை அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இன்று அனைத்து முதுகெலும்புள்ள உயிரினங்களுக்கும் வெவ்வேறு இரத்தக் குழுக்கள் இருப்பதாக கருதப்படுகின்றது.

இரத்த அணுக்களில், குறிப்பாக இரத்த சிவப்பணுக்களில் மரபணு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட கட்டமைப்பு வேறுபாடுகள் இரத்தக் குழுக்கள் என குறிப்பிடப்படுகின்றன.

Rh காரணி இரத்தக் குழுவின் ஒரு முக்கிய பண்பாகும். இது முதல்முதலில் ரீசஸ் குரங்கு இனத்தில் கண்டறியப்பட்டது. அதனால்தான் ரீசஸ் குரங்கின் பெயரை தாங்கிவருகின்றது.

பிறக்கும் போது தாய், குழந்தையின் இரத்தம் . வெவ்வேறு இரத்தக் குழு பண்புகள் Rh+,  Rh- ஆக இருந்தால், இது சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

விலங்குகளில் இரத்தப்பிரிவு மாடுகள்  14, பன்றிகள் 78, குதிரைகள் 34 மற்றும் , செம்மறி ஆடுகளில் 20 க்கும் மேற்பட்ட இரத்த பிரிவுகளைக் கண்டறியலாம். நாய்களில் வெவ்வேறு இரத்தக் குழுக்கள் இருப்பதாக அறியப்படுகின்றது. அவை நாய் எரித்ரோசைட் ஆன்டிஜென்கள் (DEA) என்று அறியப்படுகின்றன. பூனைகளில் A,B மற்றும் AB என்ற இரத்தக் குழுக்கள் உள்ளன.

எங்களுடைய அவநம்பிக்கை, கவலையீனம் உலகளாவிய பஞ்சத்திற்கு வழிவகையை தேடித்தரும். கொரோனாவை சாதாரணமாக நினைக்காதீர்கள் அது ஒவ்வொரு நாளும் எங்களை அரித்து தின்று கொண்டே இருக்கின்றது. நாம் சீராக இருக்க வேண்டும் அரைகுறை மனப்பான்மையையுடன் நடந்து கொள்வதை கொரோனா ஒருபோதும் மன்னிக்காது. இந்த பேராபத்திலிருந்து விடுபடுவதற்கு ஒன்றுபட்டு செயல்பட்டால் உண்டு இல்லையேல் கொரோனா எங்களை முழுசாக விழுங்கிவிடும்.

கொரோனாவிற்கு தடுப்பூசி போட்டு எங்களை நாங்கள் காப்பாற்றிக் கொண்டாலும் அது அடித்து நொருக்கிய பொருளாதாரத்திலிருந்து மீண்டெழுவதற்கு நீண்டகாலம் தேவைப்படலாம்.

நடைமுறை வாழ்க்கை முடக்கம், குறுகலாக வெட்டப்படும் பொழுதுபோக்கு, வேலைவாய்ப்பு இழப்பு, பள்ளிச் சிறார்களின் கல்வி, மன உடல் சோர்வு எதிர்காலத்தை குறித்ததொரு பயம் நடுக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், கட்டுக்குள்ளே அடங்காமல் ஏறிக்கொண்டே போகும் வீட்டுவாடகை, எரிபொருள், மின்சார கட்டணம் நடுத்தர மக்களின் சிறு சேமிப்புக்களை எல்லாம் அரித்து தின்றுகொண்டு இருக்கின்றது.

புதுவருட பண்டிகை கொண்டாட்டத்தை சிறு அங்கத்தவர்கள் வட்டத்திற்குள் கொண்டாடுங்கள் இது நாளைய வாழ்விற்கு நன்மை செய்திடும்.

“இனியது இனியது, பண்டிகை என்றும் இனியது இன்புற்று மகிழ்ந்திட எங்களுது இதயம் கனிந்த இனிய வாழ்த்துக்கள்


நாளை வரும் வாழ்வை நல்லதாக கனிந்துவர ஆடி வரும் கொரோனாவை ஒடித்துவிட, தடுப்பூசி கொண்டு துரத்தி மகிழ்ந்திடுவோம்” நன்றி மகேஷ்-ரவி.

 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக