வியாழன், 27 ஜூலை, 2023

Differences between the atomic bombs dropped on Nagasaki and Hiroshima:

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி: ஆகஸ்ட் 6, 1945 அன்று காலை 8:15 மணிக்கு, மனித வரலாற்றில் முதல் அணுகுண்டு ஹிரோஷிமாவில் வீசப்பட்டது. ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை 11:02 மணிக்கு இரண்டாவது அணுகுண்டு வெடித்தது.

மனிதன்  எந்தக்காலத்திலும் அணுகுண்டை தொட்டுக் கூட பார்க்க மாட்டான் என்று நினைக்கிறேன். அவ்வளவு மோசமான ஒரு அழிவை ஜப்பானில் ஏற்படுத்தியிருந்ததுமேலும் பிகினி தீவு அணு சோதனைகள் அதை தீர்க்கமாக நிருபித்தும் காட்டியிருக்கின்றது

பிகினி தீவு அணு சோதனைகள், 1ஜூலை 1946 - 22 ஜூலை 1958 மார்ஷல் தீவுகளில் உள்ள பிகினி அட்டோலில் 1946- 1958 க்கு இடையில் அமெரிக்காவால் 24 அணு ஆயுதங்களை வெடிக்க செய்து உலகத்தில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது

பிகினி அட்டோலில் நடத்தப்பட்ட அணுசக்தி சோதனைகள், பாறைகளில், கடலில், காற்றில் மற்றும் நீருக்கடியில் 7 சோதனை தளங்களில் சோதனைகள் நடந்தன. இதற்காக அங்கு வாழ்ந்த மக்கள் வலுக்கட்டாயமாக இடம் மாற்றப்பட்டார்கள்

இந்த சோதனைகள் எல்லாம் உலக மக்கள் பார்வை நிமித்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக செய்து காட்டினார்கள்ஏனென்றால், அன்று அந்த நிகழ்வில் பங்கேற்ற கடற்படையினரை காட்டிலும்  பத்திரிகையாளர்கள் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் தொலைக்காட்சி கேமராக்களும் நிறைந்து இருந்ததாக, அதே நிருபர்களே பதிவு செய்திருக்கின்றார்கள்.

ஹிரோஷிமா: ஆகஸ்ட் 6, 1945 8:15 am யுரேனியம் 235 அணுக்குண்டு போடப்பட்டது. விமானம்: B29 மற்றும் விமானி: எனோலா கே.

விமானம் 9600 மீ உயரத்தில் இருந்து  நகர மையத்தில் உள்ள ஷிமா மருத்துவமனைக்கு மேலே 600 மீ உயரத்தில் காற்றில் வெடிப்பு  ஏற்பட்டது [ வெடிப்பு நேரத்தில் நகரத்தில் சுமார் 350,000 மக்கள் குவிந்திருந்தார்கள்]

நாகசாகி: ஆகஸ்ட் 9, 1945 11:02 a.m புளூட்டோனியம் 239 அணுக்குண்டு போடப்பட்டது. விமானம்: B29 மற்றும் விமானி: போக்ஸ்கார். இந்த இடம் தீர்மானிப்பதற்கு  முன், வேறு ஒரு இடம் தீர்மானமாக இருந்தது, காலநிலை  காரணமாக விமானம் திருப்பப்பட்டு  நாகசாகி மக்கள் தலை மேல் போடப்பட்டது.

சுமார் 9600 மீ உயரத்தில் இருந்து வான்வெளி நகரின் வடக்கே மாட்சுயாமா மாவட்டத்திலிருந்து சுமார் 500 மீ உயரத்தில் காற்றில் வெடிப்பு ஏற்பட்டது. வெடித்த இடம் [வெடிப்பு தரையில் இருந்து ஒரு குறிப்பிட்ட உயரத்தில் ஏற்பட்டது] அப்போதைய மக்கள் தொகை சுமார் 240,000 அந்த நகரத்தில் கூடியிருந்தார்கள்.

நாகசாகி மற்றும் ஹிரோஷிமா மீது வீசப்பட்ட அணுகுண்டுகளுக்கு இடையிலான வேறுபாடுகள்: ஹிரோஷிமா ரக அணுகுண்டு:  [யுரேனியம் 235]  " லிட்டில் பாய்" என்று பெயரிடப்பட்டது,

அணுகுண்டை வெடிக்க ஒரு குறிப்பிட்ட அளவு பிளவு பொருள் தேவைப்படுகின்றது. ஹிரோஷிமா அணுகுண்டு நீண்ட உலோகக் குழாயைக் கொண்டிருந்தது. பிளவு பொருள் [யுரேனியம் 235] இரண்டு முனைகளிலும் இரண்டு பகுதிகளாக நிரப்பப்பட்டது,

ஒவ்வொரு பகுதியும் முக்கியமான அளவை [நிறை] விட சிறியதாக இருக்கும். இரண்டு பகுதிகளும் வழக்கமான வெடிமருந்துகளுடன் ஒன்றாகக் கொண்டுவரப்பட்டன, இதனால் முக்கியமான அளவை [நிறை] மீறியது. இது பீரங்கி கொள்கை என்று அழைக்கப்படுகின்றது.

நாகசாகி வகை அணுகுண்டு: [புளூட்டோனியம் 239]  "ஃபேட்மேன்" என்று பெயரிடப்பட்டது,

நாகசாகியின் அணுகுண்டுக்கான பிளவுப் பொருள் [புளூட்டோனியம் 239] வெடிபொருட்களால் சூழப்பட்டு ஹெர்மெட்டிக் சீல் வைக்கப்பட்டது. வெடிமருந்து வெடித்ததன் மூலம், வெடிகுண்டிற்குள் இருந்த பிளவுப் பொருள் சுருக்கப்பட்டது, இதனால் அது முக்கியமான அளவை [நிறை] மீறியது. இது வெடிப்புக் கொள்கை என்று அழைக்கப்படுகின்றது.

பிகினி தீவு அணு சோதனைகள் தனி ஒரு  வரலாறு: 1946 மற்றும் 1958 க்கு இடையில் மார்ஷல் தீவுகள் அணு ஆயுதங்களுக்கான சோதனைக் களமாக மாறியதுபோருக்குப் பிறகு அமெரிக்கா அவற்றை தனது பிரிவின் கீழ் எடுத்துக் கொண்டது. தீவுகளின் தனிமைப்படுத்தப்பட்ட இடம் அமெரிக்கர்கள் மொத்தம் 67 அணுகுண்டு சோதனைகளை மேற்கொள்ள உதவியது, பிகினி அட்டோலில் 20 க்கும் மேற்பட்டவை உட்பட .

1954 இல் சோதிக்கப்பட்ட "பிராவோ" ஹைட்ரஜன் வெடிகுண்டு அதிக சக்தியை செலுத்தியது . இது ஹிரோஷிமா வெடிகுண்டை விட 1,000 மடங்கு அதிகமான, சுமார் 15 மெட்ரிக் டன் வெடிக்கும் ஆற்றலைக் கொண்டிருந்தது. மேலும் இது அமெரிக்கர்களால் இதுவரை வெடித்த மிக சக்திவாய்ந்த அணுகுண்டாகக் கருதப்படுகின்றது.

42,000 தொழில்நுட்ப வல்லுநர்கள் , விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ வீரர்கள் பிகினியில் சோதனைக்காக நிறுத்தப்பட்டனர் . கூடுதலாக, 242 கப்பல்கள், 156 விமானங்கள் மற்றும் 5,400 சோதனை விலங்குகள் [எலிகள், ஆடுகள் மற்றும் பன்றிகள்] பயன்படுத்தப்பட்டன.

ஹைட்ரஜன் குண்டு: அணுக்கரு இணைவுக்கான பற்றவைப்பாக, அணுக்கரு பிளவு ஏற்படுத்தப்படுகின்றது. மார்ச் 1, 1954 / 06:45 மணிக்கு [பிப்ரவரி 28 GMT அன்று 18:45] மார்ஷல் தீவுகளில் உள்ள பிகினி அட்டோலில் வெடித்தது

மன்ஹாட்டன் திட்டம்:  இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவின் அனைத்து நடவடிக்கைகளும் ஜெனரல் லெஸ்லி ஆர் இராணுவ வழிகாட்டுதலின் கீழ் அணுகுண்டை  உருவாக்குவதற்கான அவசரத்திட்டம் போடப்பட்டது. அதற்கு காரணம்,

ஜெர்மன் நாசி படைகள் அணுகுண்டை உருவாக்குவதற்கான சகல திட்டங்களையும் வைத்திருந்தார்கள், அமெரிக்காவின் கூட்டு படைகளின் தாக்குதல்கள் அதற்கு சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. அணுகுண்டு ஹிட்லர் கைக்கு கிடைத்திருந்தால்,   இந்த உலகம் வேறுவிதமாக இருந்திருக்கும்.

ஜெனரல் லெஸ்லி குழுமத்தில் இதற்கு பொருத்தமானவர்கள் யாரும் கிடைகவில்லை, அப்போது அமெரிக்க/ நியூ ஜெர்சியின் பிரின்ஸ்டன் நகரில் இருந்து வந்த, ஒரு தத்துவார்த்த இயற்பியலாளரின்  கை  உயர்த்தப்பட்டது அவர்  ராபர்ட் ஓபன்ஹைமர் ஆவார். பல சிரமங்களின் மத்தியில் யுரேனியத்தை எப்படி செறிவூட்டுவதை  கண்டறிந்தார்.

யுரேனியத்தை [235] செறிவூட்டுவதை காட்டிலும் புளூட்டோனியம் தயாரிப்பது அன்று இலகுவாக இருந்தது.

இயற்கையில் 99 சதவீதத்திற்கும் அதிகமான யுரேனியத்தில் [யுரேனியம்-238] உள்ளது, இதை பிளவுபடுத்துவது கடினம்.  [யுரேனியம்-235]  0.7 சதவீதம் மட்டுமே அதில்  உள்ளது, ஆனால் 235 U  எளிதில் பிளவுபடக்கூடியது, அணுகுண்டு தயாரிப்பதற்கு ஏற்றது.

யுரேனியம் [ 238U ] ஒரு நியூட்ரானைப் பிடிப்பதன் மூலம் புளூட்டோனியம் [239Pu] ஆக மாற்றப்படுகின்றது. அதனால்தான் நாகசாகி மேல் போடப்பட்ட அணுகுண்டு புளூட்டோனியத்தை  பயன்படுத்தினார்கள்.

புளூட்டோனியம் என்பது அணுமின் நிலையங்களில் ஆற்றல் உற்பத்தியின் தவிர்க்க முடியாத துணைப் பொருளாகும்எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் யுரேனியம் கதிரியக்கப்படும்போது, அதாவது நியூட்ரான்களால் தூண்டப்படும் போது யுரேனியத்தின் ஒரு பகுதி புளூட்டோனியமாக மாறுகின்றதுசெலவழிக்கப்பட்ட எரிபொருள் தனிமத்தில் சுமார் ஒரு சதவீதம் புளூட்டோனியம் உள்ளது.

அணுவாயுதம்: அணுக்குண்டை கண்டுபிடித்தவர் ராபர்ட் ஓப்பன்ஹைமர். அணுகுண்டு முதன்முதலில் அமெரிக்காவால் மன்ஹாட்டன் திட்டத்தில் உருவாக்கப்பட்டது. டிரினிட்டி என்ற திட்டத்தின் கீழ் அணு ஆயுத வெடிப்புடன் முதல் அணு ஆயுத சோதனை ஜூலை 16, 1945 அன்று, நியூ மெக்ஸிகோ பாலைவனத்தில் புளூட்டோனியம்-94(244) நிரப்பப்பட்ட முதல் அணுகுண்டு வெற்றிகரமாக வெடிக்க வைக்கப்பட்டது.

இதற்கு முன்னால் [பிளாஷ்பேக்] அணுவாயுதத்தின் வழித்தோன்றல்கள்: அணுவாயுதத்தின் தொடக்கம் மேரிகியூரி ஆய்வகம், யுரேனியத்தின் தன்மையும் அதன் கதிர்வீச்சும் அது இன்னுமொரு தனிமமாகவும் [அரை ஆயுள் கொண்ட ரேடியம்-226] மாறுவதும் கண்டறியப்பட்டது.

ஓட்டோ ஹான் ஒரு ஜெர்மன் வேதியியலாளர் மற்றும் அணு ஆராய்ச்சி கதிரியக்க வேதியியலின் முன்னோடி, அவர் யுரேனியத்தின் பிளவு கண்டுபிடிப்பதற்காக 1944 இல் வேதியியலில் நோபல் பரிசைப் பெற்றார். அணுவை முதல்முதலில் பிளந்தவர் என்ற பெருமை இவரையே சேரும்.

1905-1921 க்கு இடையில் அவர் ஏராளமான, ஓரிடமூலகம் [ஐசோடோப்புகள்] 1909 இல் கதிரியக்க தனிமங்களை கண்டுபிடித்தவர். அடால்ஃப் ஹிட்லரின் வீழ்ச்சி அமெரிக்கப்படைகளினால் சிறைபிடிக்கப்பட்ட பல விஞ்ஞானிகளில் ஓட்டோ ஹானும் ஒருவர் இவர் ரூதர்போர்ட் மற்றும் பிரடெரிக் ஸோடியின் மாணவர்/யுரேனிய ஆய்வுகளில் பங்கெடுத்தவர்.மற்றும் இன்னுமொருவர் அமெரிக்க-பிரிட்டிஷ் மன்ஹாட்டன் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த கிளாஸ்ஃபுக்ஸ்  ஆல்பர்ட்  ஐன்ஸ்டீன்,  மன்ஹாட்டன் திட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை,

நியூட்ரான் குண்டு என்பது: யுரேனியம்/புளுட்டோனியம் அல்லது ஹைட்ரஜன் அணுகுண்டுகளை விட மிகக் குறைந்த வெடிக்கும் சக்தியை கொண்டது, இருப்பினும் அது  அதிக ஆற்றலாக, நியூட்ரான் மற்றும் காமா கதிர்வீச்சுக்களை அள்ளி வீசக்கூடியது. இது ஒரு ஒருங்கிணைந்த பிளவு-இணைவு அணுகுண்டு மற்றும் இது  நியூட்ரான் குண்டு, அதிகளவு மேம்படுத்தப்பட்ட கதிர்வீச்சு ஆயுதம் என்றும் அறியப்படுகின்றது.

வெடிப்பு அல்லது வெப்பத்தின் விளைவுகளைக் காட்டிலும் முதன்மையாக கதிரியக்க மாசுபாட்டின் மூலம் உயிர்களை கொல்ல வடிவமைக்கப்பட்டது.

இதுவொரு ஹைட்ரஜன் குண்டு.இதில் பயன்படுத்தப்படும் இணைவு பொருட்கள் 3H மற்றும் 2H ஆகும், அவை 4He ஐ ஹீலியம்-4 ஓரிடமூலகம் [ஐசோடோப்பு] உருவாக்குகின்றன, ஒவ்வொரு முறையும் ஒரு நியூட்ரானை உருவாக்குகின்றன. இது ஆபத்தானது.

இது எவ்வளவு தூரம் ஆபத்தானது: இந்த குண்டு 1958 இல் கண்டுபிடிக்கப்பட்டு, 1962 இல் முதன்முதலில் தரையில் இருந்து சில நூறு மீட்டர் உயரத்தில் வெடிக்க வைத்து சோதனை செய்யப்பட்டது, சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. மற்றும் இது நீண்ட கால கதிரியக்க மாசு எதுவும் இதிலிருந்து வெளியிடப்படவில்லை சுமார் 24 மணி நேரம் கழித்து ஒருவர் பாதுகாப்பாக அந்த பகுதிக்குள் நுழைய முடியும் என்று சோதனை முடிவுகள் கூறுகின்றன.

அதாவது இந்த குண்டு வெடித்தால் உடனடியாக வெப்ப கதிர் வீச்சினாலும்  வெப்ப  அழுத்த அலைகளினாலும் உடலை சல்லடை போடும்  நியூட்ரான் மற்றும் காமா கதிர்வீச்சுகளினாலும் பல மில்லியன் மக்கள் கொல்லப்படுவார்கள். அடுத்த 24 மணி நேரம் கடந்து, மக்கள் அதே இடத்தில் பயமின்றி நடமாடமுடியும் என்று நம்பப்படுகின்றது.  

புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

http://mahesva.blogspot.com/?view=magazine

 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக