திங்கள், 3 ஜூலை, 2023

Addiction: How dangerous is the active ingredient in ecstasy pills [XTC]?

போதைப் பொருள்: எக்ஸ்டசி மாத்திரைகளின் [XTC] செயலில் உள்ள மூலப்பொருள் எவ்வளவு ஆபத்தானது. XTC மாத்திரைகளில் மிக முக்கியமான செயலில் உள்ள மூலப்பொருள் MDMA தவறாகப் பயன்படுத்தப்படும்  ஒரு மனநல மருந்து.

தெருவில் Extasy  என்று விற்பனை பெயரில் அழைக்கப்படும் இது பெரும்பாலான நாடுகளில் சட்டவிரோதமானது. MDMA என்பது நீரில் கரையாத பிசுபிசுப்பான எண்ணெய், எனவே கையாளுவது கடினம். இதன் காரணமாக, இது வழக்கமாக அதன் ஹைட்ரோகுளோரைடு உப்பின் அக்வஸ் கரைசலாக தயாரிக்கப்படுகின்றது.

இந்த திரவங்கள் எரியக்கூடியது, கடுமையான நச்சுத்தன்மை மற்றும் விழுங்கினால் இரைப்பை குடலுடனான தொடர்புகள்  அரிக்கும் தன்மை வாய்ந்தது. உறுப்புகளை  சேதப்படுத்தும். காலப்போக்கில் குடலில் இரத்த கசிவு ஏற்படும்.

[3,4-methylenedioxymethylamphetamine] ஆகும், இருப்பினும் XTC மாத்திரைகளின் பகுப்பாய்வுகளில் வேதியியல் தொடர்பான பிற செயலில் உள்ள பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. MDMA இன் 120 மில்லிகிராம்கள் [mg] அதிகமாக, இரண்டு மாத்திரைகளுக்கு மேல் உட்கொள்வது கடுமையான உடல்நல விளைவு, இழப்புகளை ஏற்படுத்தும்.

எம்.டி.எம். மூளையில் உள்ள பல்வேறு வகையான செல்களுக்கு சேதத்தை விளைவிக்கும்உங்களால் ஒழுங்காக பள்ளிப் பாடங்களை  படிக்க முடியாது.

நரம்பியக்கடத்தல் குறைபாடுகள்,  அம்னெஸ்டிக் சிண்ட்ரோம், [ஞாபக மறதி, நினைவாற்றல் இழப்பு, நடவடிக்கை கோளாறு.]  கடுமையான அட்டாக்ஸியா  நடை [மனச்சோர்வு, கவலை, பதட்டம்], தூக்கக் கோளாறுகள் மற்றும்   மனச்சோர்வு கவலைக் கோளாறுகளை நிரந்தரமாக ஏற்படுத்தும்.

மதுபானம் உட்பட போதைப் பொருட்கள் எதுவாக இருந்தாலும்  அது முதலில் பாதிப்படைய செய்வது கல்லீரலையும்  மூளை செல்களையும்.

[மெத்திலினெடியோக்சிமெதம்பேட்டமைன்பொதுவாக மோலி அல்லது எக்ஸ்டஸி என அழைக்கப்படும் இந்த போதை மாத்திரை 1912 ஆம் ஆண்டில் முதன்முதலில் ஹீமோஸ்டேடிக் ஏஜெண்டுகளின் தொகுப்புக்கு முன்னோடியாக உருவாக்கப்பட்ட செயற்கைப் பொருளாகும். தவறாகப் புகாரளிக்கப்பட்ட பசியை, மனஉளைச்சல் சீர்கேடுகளை அடக்கும் பொருளாக இல்லாமல் மாறாக பரவசத்திற்கு பச்சாதாபத்தை ஊக்குவித்தல் விளைவுகளுக்கு பயன்படுகின்றது.

கடுமையான  மனஉளைச்சல் சீர்கேடு [PTSD] நோயாளிகளுக்கு இந்த மருந்து பலனளிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் இருப்பினும் இது ஒரு தவறான பரிந்துரை.

XTC மாத்திரைகள் வெவ்வேறு லோகோக்கள் மற்றும் பல்வேறு வடிவமைப்புகளில் வருகின்றன

போதைப்பொருள் மற்றும் போதைப் பழக்கத்திற்கான ஐரோப்பிய கண்காணிப்பு மையத்தின் [EMCDDA] புள்ளிவிவரங்கள் அடிப்படையில் XTC மாத்திரைகளின் சராசரி ஆற்றல் பல ஆண்டுகளாக கணிசமாக அதிகரித்துள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றது.

மாத்திரையின் கலவையைப் பொறுத்து, விரும்பிய விளைவு உட்கொண்ட பிறகு நேர தாமதத்துடன் [15 நிமிடங்கள் முதல் பல மணிநேரம் வரை] ஏற்படலாம், இது பெரும்பாலும் இரண்டாவது மாத்திரையை உட்கொள்வதால் அடிக்கடி உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று இதில் சொல்லப்பட்டிருக்கின்றது.

இளைஞர்களே யுவதிகளே ஆபத்தான இந்த மாத்திரையை தொட்டுக் கூட பார்க்காதீர்கள். உங்கள் மன உளைச்சலை போக்குவதற்கு முறையாக மருத்துவம் எடுத்துக் கொள்ளுங்கள்.

இது போன்ற மாத்திரைகள் உங்கள் மன உளைச்சலுக்கு தீர்வாக ஒருபோதும் அமையாது, மாறாக அது உங்களை  அடிமைத்தனத்தில் தள்ளி விடும். உங்களால் ஒழுங்கான நடைமுறை வாழ்க்கையில் ஒரு போதும் பயணிக்க முடியாதுநாளைய சமூகம் வேற்றுகிரகங்களில் குடியேறி வாழப்போகின்றது அதில் உங்களுடைய பங்களிப்பு என்னவாக இருக்கும்..?  சிந்தியுங்கள்.

"சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று, தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ"

 

பிரபலமான  டாப்-20 போதைவஸ்துகள்- PopularTop 20 drugs


ஹைட்ரஜன் [H₂] மின்னாற்பகுப்பு தொழில்நுட்பம்: பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கு இயற்கையாக உற்பத்தியாகும் சோலார் [சூரிய ஒளி தகடுகள்] மின்சாரம் தேவை இதற்கு மாற்றாக காற்றாலை மின்சாரம் மற்றும் அதிகளவு நீர் அதுவும் காய்ச்சி வடிகட்டிய சுத்தமான தண்ணீர் தேவை. இந்த இரண்டும் தாராளமாக உள்ள இடங்களில் மட்டுமே பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி சாத்தியப்படும்.


CO₂ இல்லாத சுற்றுச்சூழலுக்கான பாதுகாப்பிற்கு, ஹைட்ரஜன் உற்பத்தி ஒரு தீர்வாக அமையும். இதில் இருக்கும்  இன்னும் ஒரு  சிறப்பம்சம் இந்த தொழில்நுட்பத்தை தனியார் தொழிலாக குறைந்த முதலீட்டில் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். உற்பத்தி செய்யும் ஹைட்ரஜனை பாதுகாத்து வைத்திருக்க ஒதுக்குப்புறமான பாதுகாப்பான சேமிப்பு கிடங்குகள் அவசியம்.


இதற்கு நாடுகளுடைய இறையாமையை பொறுத்து அரசு அனுமதி தேவை. அரசு அனுமதி பெற்றால் தான் உங்களுடைய உற்பத்தியை விற்பனை/ஏற்றுமதி செய்ய முடியும்.


புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

http://mahesva.blogspot.com/?view=magazine




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக