மனதைக் கிள்ளும் பூக்களின் வாசம்: எந்த பூக்களின் வாசம் உங்கள் மனதை கிள்ளிவிடக் கூடியது. மல்லிகை, ரோசா அல்லது செவ்வந்தி இந்த மூன்று பூக்களை வைத்து ஆராய்ச்சி செய்ததில் கிடைத்த முடிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
மனதை மயக்கும் மல்லிகைப்பூ தாம்பத்திய உணர்வை கொடுக்கின்றது. மூளையில் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தும் ரோசாப்பூ, காதல் உணர்வுகளை கொடுக்கின்றது. இந்த வருடம் ஆய்வுக்காக எங்களது வீட்டு பால்கனி பூந்தொட்டியில் செவ்வந்தி விதைகளை போட்டேன் மிகவும் வளர்ந்து நன்றாக பூத்திருந்தது.
15 நாள் முடிவுகள் இது: செவ்வந்திப் பூக்களின் வாசம் ஒரு புது விதமான அனுபவத்தை தந்தது ஒவ்வொரு முறையும் பூந்தொட்டிக்கு அருகில் செல்லும் போது செவ்வந்திப் பூவின் வாசம் ஒரு பிள்ளையின் மனதை தாலாட்டுவது போல் புத்துணர்ச்சி மற்றும் பிள்ளைகள் போல் துள்ளிப் குதிக்கும் ஒரு மனசை தந்தது.
அடம் பிடிக்கும் பிள்ளைகளையும் எதிர் விவாதம் செய்பவர்களையும் ஒரு சமதளத்தில் கொண்டு வரக்கூடிய மகிமை செவ்வந்தி பூ வாசத்திற்கு உண்டு. செவ்வந்திப் பூவின் வாசம் வெயில் நேரங்களில் அதிகமாக வீசும் மற்றும் படி அதனுடைய வாசம் அவ்வளவாக வீசாது. கிட்டப்போய் மோந்து பார்த்தால் தான் உண்டு.
செவ்வந்தி மேரிகோல்ட்ஸ் [ டெய்சி] குடும்பத்தைச் சேர்ந்தவை மற்றும் முதலில் வடக்கு மத்திய அமெரிக்காவிலிருந்து வந்தவை, [ மெக்சிக்கோ] சுமார் 50 முதல் 60 இனங்கள் உண்டு என்று மதிப்பிடப்பட்டுள்ளது, அவற்றில் சில வருடாந்திர கோடைகால அலங்கார தாவரங்களாக வளர்க்கப்படுகின்றன. அதனுடைய வாசனை தேனீக்கள் வண்டுகளை ஈர்க்கக் கூடியது.
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்
http://mahesva.blogspot.com/?view=magazine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக