ஹார்மோன்கள் எமது உடலின் சிற்பிகள்: நமது உடல் சிக்கலான, அதுவும் சக்திவாய்ந்த ஹார்மோன் அமைப்புகளால் நிறுவப்பட்டுள்ளது. ஏறத்தாழ 1000 ஹார்மோன்கள் நம் உடல் உயிர்வாழ அவசியமானது. இவைகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் உடலில் பல நோய்களை ஏற்படுத்துகின்றன. இவைகளை எப்படி சமநிலையில் வைத்திருப்பது.
இந்த உணவை, இந்த உடற்பயிற்சியை செய்யுங்கள் என்று சும்மா சொல்லிவிட்டு போகலாம். ஆனால் உடல் அதற்கு பதிலளிக்க வேண்டுமல்லவா, இந்த சுரப்பிகளும் வயதாகி தளர்வடைந்து போகின்றன சில சமயங்களில் நோய் எதிர்ப்புச் சக்தி, [சுய-உடல் தாக்க எதிர்வினைகள்] புற்று நோய் காரணமாக பழுதுபட்டும் போகின்றன. மற்றும் சிலருக்கு பிறப்பிலிருந்து வளர்ச்சி அடையாமல் இருக்கின்றது. இந்த பாதிப்புகளை தணிப்பதற்கு தற்சமயம் மருத்துவம் மருந்துகள் உள்ளது.
இந்த முக்கிய ஹார்மோன்கள் எட்டு நாளமில்லா சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் ஆறு மிகவும் முக்கியமான சுரப்பிகள். ஹைபோதாலமஸ், பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு, கணையம், அட்ரீனல் சுரப்பிகள் மற்றும் கோனாட்ஸ்: பெரும்பாலான பல்லுயிர் விலங்குகளிலும், மனிதர்களிலும் காணப்படும் பாலியல் செல்கள் [பெண் கருப்பை மற்றும் ஆண் விந்தணுக்கள்]
இந்த சுரப்பிகள் நமது அன்றாட பணிகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுமார் 50 ஹார்மோன்கள் இந்த சுரப்பிகளில் உற்பத்தி செய்யப்பட்டு இரத்தத்தில் வெளியிடப்படுகின்றன. இந்த ஹார்மோன்கள் ஒவ்வொன்றிலிருந்தும், சுமார் ஆறு புதிய மாறுபாடுகள் உடலில் உருவாக்கப்படுகின்றன. மேற்கோளாக: பெண்களின் கருவுறுதலுக்கு முக்கியமான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை எடுத்துக் கொண்டால் இது 30 க்கும் மேற்பட்ட பெண் பாலியல் ஹார்மோன்களின் குழுமம் ஆகும்.
இரத்த சர்க்கரையை குறைக்கும் இன்சுலின் மற்றும் செரிமானத்திற்கு உதவும் ஹார்மோன்களை சுரக்கும் கணையம் 35 குழும ஹார்மோன்களை சுரக்கின்றது. இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் இன்சுலின் மற்றும் குளுகோகன் தவிர்த்து.
டிரிப்சின், சைமோட்ரிப்சின், கார்பாக்சிபெப்டிடேஸ், எலாஸ்டேஸ், α-அமிலேஸ், ரைபோ- மற்றும் டிஆக்ஸிரைபோநியூக்லீஸ்கள் மற்றும் லிபேஸ்கள் உட்பட அசினார் செல்களில் பல செரிமான நொதிகளை கணையம் உருவாக்குகின்றது, இவை இல்லாமல் உணவை ஜீரணிக்க முடியாது.
மற்றும் இரைப்பை சுரப்பிகளின் ஹார்மோன்கள்: சோமாடோஸ்டாடின், காஸ்ட்ரின், கோலிசிஸ்டோகினின், செரோடோனின், ஹிஸ்டமைன், எண்டோர்பின்கள் என்று ஆறு ஹார்மோன்களை சுரக்கின்றது.
தலைமைச் சுரப்பி பிட்யூட்டரி சுரப்பிக்கு அடுத்து தலைமை வகிக்கும் இரண்டாவது சுரப்பி தைராய்டு, இது உற்பத்தி செய்யும் ஹார்மோன்களில், நன்கு அறியப்பட்டவை இரண்டு, ட்ரையோடோதைரோனைன் [T3] மற்றும் தைராக்ஸின் [T4] என்று அழைக்கப்படுகின்றன.
தைராய்டு தொண்டையின், குரல்வளை அடிப்பகுதியில் காணப்படும் ஒரு பட்டாம்பூச்சி வடிவ உறுப்பு மற்றும் ஒரு மிகமுக்கியமான நாளமில்லா சுரப்பி. இது பல உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகின்றது மற்றும் வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இதைச் செய்ய, சுரப்பி தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட அளவு தைராய்டு ஹார்மோன்களை இரத்தத்தில் வெளியிடுகின்றது. இருப்பினும், தைராய்டு சுரப்பியில் இருந்து பல்வேறு நோய்கள் வரலாம் , அதாவது அதிகப்படியான அல்லது செயலற்ற தைராய்டு சுரப்பி போன்றவை. அத்தகைய நோய் இருந்தால், அது முழு வளர்சிதை மாற்றத்தையும் குழப்பி, உடலில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். மனித உடல் இது போன்று இன்னும் அறியப்படாத பல உயிரியல் தொழில் நுட்ப இரகசியங்களை உள்ளடக்கியது.
ஆண்/ பெண் உயிரியல் சின்னங்கள்: பெண் சின்னம் ♀ [வீனஸின் கண்ணாடி] ஆணுக்கான சின்னம் ♂ [செவ்வாய் கிரகத்தின் வேல்/ஈட்டி மற்றும் கேடயம்] இது முருகனை குறிக்கின்றது.
இரைப்பை சுரப்பிகளின் ஹார்மோன்கள்:
சோமாடோஸ்டாடின்
காஸ்ட்ரின்
கோலிசிஸ்டோகினின்
செரோடோனின்
ஹிஸ்டமைன்
எண்டோர்பின்கள் என்று ஆறு ஹார்மோன்களை சுரக்கின்றது.
கோனாட்ஸ்: பெரும்பாலான பல்லுயிர் விலங்குகளிலும், மனிதர்களிலும் காணப்படும் பாலியல் செல்கள் [பெண் கருப்பை மற்றும் ஆண் விந்தணுக்கள்]
கார்டிசோல்: போராடு/தப்பியோடு [எஸ்கேப்] கார்டிசோல் ஹார்மோன் இந்த வேலைகளை செய்விக்கும்.
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்
http://mahesva.blogspot.com/?view=magazine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக