புத்திமான் பலவான்; புத்திசாலிகள் எப்பவும் பலவான்களாக இருக்கிறார்கள். அறிவாற்றல் இருந்தால் மலையை கூட எங்களால் தூக்க முடியும்.
காகமும் பாம்பும், ஆபத்துக்காலத்தில் உதவிய தந்திரம் உள்ள நரியும்: புத்திமான் பலவான் கதைகள் பல உண்டு, சின்னவயதில் படித்த பாட்டி வடை சுட்ட கதையப்போல் இதுவும் ஒன்று. ஒரு ஊர்ல பெரிய ஆலமரம் ஒன்று இருந்துச்சு, அதுல பல பறவைகள் கூடு கட்டி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தன அதில் காகமும் ஒன்று. அந்த மரக்கிளையில் காகம் கூடுகட்டி முட்டையிட்டு அடைகாத்துக் கொண்டிருந்த காலம்.
அந்த ஆலமரத்தடியில் கரையான்கள் வாழ்ந்த புற்றில் ஒரு நாக பாம்பு அவைகளின் புற்றை ஆக்கிரமிப்பு செய்து வாழ்ந்து கொண்டிருந்தது.
ஒரு நாள் காகம் இரைதேட கூட்டை விட்டு வெளியே செல்லும் சமயத்தில் பாம்பு அதன் முட்டைகளையும் குஞ்சுகளையும் முழுங்கி விட்டது. காகம் திரும்பி வந்து பார்க்கும்போது கூட்டில் ஏதும் இல்லாதது கண்டு மனம் வருந்தியது.
முட்டை திருட்டு நீண்ட காலமாக திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருந்தது. தங்களுக்கும் முட்டை திருட்டு நடப்பதாக சக பறவைகளும் புகார் சொன்னது. "யாரது நான் இல்லாத சமயம் பார்த்து எனது முட்டைகளை திருடுவது" அதை கண்டறிய காகம் துப்பறியும் வேலையில் இறங்கியது.
ஒரு நாள் சற்று தூரமாக உள்ள மரக்கிளையில் மறைந்திருந்து பார்த்தது அப்போது இவ்வளவு காலமும் தன்னை நண்பன் என்று அறிமுகப்படுத்திய பாம்பு தனது முட்டைகளை திருடுவது கண்டு திகைத்துப் போனது. "அடேய்! நண்பா நீயா என் முட்டைகளை திருடுவது, கோபப்பட்டு ஆவேசத்துடன் அந்த பாம்பை தாக்க முற்பட்டது. "பசிச்சது சாப்பிட்டு விட்டேன் என்றது பாம்பு," காகம் பாம்புடன் எதிர்த்து போராட முடியாமல் மயக்கமுற்று கீழே விழுந்தது.
அந்த நேரத்தில் நரி ஒன்று அந்த வழியே வந்து கொண்டிருந்தது, மயக்கமுற்றுக்கிடந்த காகத்திடம் வினாவியது, "உனக்கு என்ன நடந்தது சொல் நண்பா நான் உனது எதிரியாக இருந்தாலும் உனக்கு உதவுகின்றேன்" காகம் தனக்கு நடந்ததை சொன்னது. அப்போது நரி ஒரு யோசனை சொன்னது.
இன்றைக்கு இந்த நாட்டின் இளவரசி குளிப்பதற்காக ஆற்றம் கரைக்கு தனது தோழிகளுடன் வருவார். குளிப்பதற்கு முன்னால் அவர் தன் கழுத்தில் அணிந்திருந்த முத்துமாலையை கழட்டி ஒரு கல்லின் மேல் வைப்பாள் அந்த நேரம் பார்த்து அந்த முத்துமாலையை எடுத்துக் கொண்டு வந்து இந்தப் பாம்பு புற்றுக்குள் போட்டு விடு அப்புறம் நடப்பதை தூரத்தில் இருந்து பார் என்று சொல்லிவிட்டு நரியும் அந்த இடத்தை விட்டு நடந்தது.
காகமும் நரி சொன்னது போல் செய்தது, இளவரசியின் முத்து மாலையை தன் அலகில் கொத்திக்கொண்டு பறந்து, பாம்பு புற்றுக்குள் போட்டது. அதனைத் தொடர்ந்து வந்த அரண்மனை காவலாளிகள் காகம், பாம்பு புற்றுக்குள்ளே மாலையை போடுவதை அவதானித்து அந்தப் புற்றை கடப்பாறைகள் கொண்டு உடைத்து தள்ளி, அதிலிருந்து சீறிப்பாய்ந்த பாம்புகளையும் அடித்து கொன்று போட்டார்கள்
இதிலிருந்து குட்டீஸ்கள் நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் உங்களால் முடியாவிட்டாலும் உங்கள் மூளையை பயன்படுத்தி உங்களைக் காயப்படுத்தியவர்களை உங்களால் தண்டிக்க முடியும்.
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்
http://mahesva.blogspot.com/?view=magazine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக