சனி, 22 ஜூலை, 2023

Rheumatoid arthritis is a chronic inflammatory disease. Caused by an auto-immune reaction [autoimmune disease] that particularly affects the joints. In this disease, the body's immune system attacks and destroys the inner lining of the joints.

முடக்கு வாதம். [மூட்டு வாத நோய்]: மூட்டு வாத நோய் என்பது ஒரு நாள்பட்ட அழற்சி நோயாகும்சுய-உடல்-தாக்கி எதிர்வினையால் ஏற்படுகின்றது [ஆட்டோ இம்யூன் நோய்இது குறிப்பாக  மூட்டுகளை பாதிக்கின்றதுஇந்த நோயில், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு மூட்டுகளின் உள் தோலைத் தாக்கி அழிக்கின்றது.

வேலியே பயிரை மேய்வது போல் நோய்களிலிருந்து உடலை காக்க வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியே சில சமயங்களில் சொந்த உடலை தாக்குகின்றது . மருத்துவத்தில் இதற்கு ஒரு சில விளக்கங்களை தந்தாலும் இது ஏன் எதற்காக நடக்கின்றது என்று இன்று வரைக்கும் அறிவியலை கடந்த விடயமாக இருக்கின்றது. [ஒற்றை வார்த்தையில் சொல்வதென்றால் "கர்மா"]

முடக்கு வாதம் ஏற்படுவதற்கான மற்றய காரணங்களை ஆராயும்போது, ஆராய்ச்சியாளர்கள் குழு நமது குடலில் உள்ள பாக்டீரியாக்களுக்கும் பல்வேறு மூட்டுப் பிரச்சினைகளுக்கும் இடையே சாத்தியமான தொடர்பைக் கண்டறிந்துள்ளனர்.

பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பும் ஒரு காரணமாகும். இரைப்பை குடல் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. மேற்கோளாக : ஆரோக்கியமான குடலில் ஏராளமான நுண்ணுயிரிகள் உள்ளன, அவை நோய்க்கிருமிகளிடமிருந்து நம்மை திறம்பட பாதுகாக்க நம் உடலில் உள்ள நோயெதிர்ப்பு செல்களை திறம்பட செயல்படுத்துகின்றன.

மேலும் குடல் பாக்டீரியாக்கள் [குடல் பூக்கள்], ஒரு நல்ல குடல்-வாழ் பாக்டீரியா காலணியை உறுதி செய்து, நமக்கு தீங்கு விளைவிக்கும் மற்ற பாக்டீரியாக்கள் அங்கு குடியேறாமல் தடுக்கின்றது. எனவே நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டால், உங்கள் குடல்-வாழ் நுண்ணுயிரிகளின் காலனி சமநிலையில் இல்லாததால் இது ஏற்படலாம். குடல்-வாழ்-நல்ல  பாக்டீரியாக்கள் பற்றி பல தடவைகளுக்கு மேல் என்னுடைய கட்டுரைகளில் பேசியிருக்கிறேன்.

சமீபத்திய ஆய்வுகள் இந்த கண்டுபிடிப்பை உறுதிப்படுத்துகின்றன, முடக்கு வாதம் உள்ளவர்கள் ஒரு செயலிழந்த குடல் நுண்ணுயிரியைக் கொண்டுள்ளனர் மற்றும் தவறான பாக்டீரியாக்கள் குடலில் காலனித்துவப்படுத்துகின்றன, அங்கு அவை முழு உடலையும் பாதிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர்.இதன் நிமித்தம் தலையில் முடி உதிர்வது, முடக்குவாதம் தொடங்கி சரும நோய்கள் வரை ஏகப்பட்ட  நோய்களுக்கு காரணியானது.

குடல், தான் பாதிக்கப்பட்டு இருக்கின்றேன் என்பதை. இந்த வெளிப்படுத்தல் மூலம் வெளிப்படுத்துகின்றன நாங்கள் அதை உணராமல் புறக்கணித்துவிட்டு  நடைமுறை வாழ்க்கையை தொடர்கிறோம். குடல் பாதிக்கப்படுவதற்கு பல காரணங்களை முன்வைக்கலாம் குறிப்பிட்டு சொல்வதென்றால் மற்றய நோய்களுக்காக எடுக்கப்படும் மருந்து மாத்திரைகள்.

ஆண்டிபயாடிக் சிகிச்சை இல்லாமல் இன்றைய மருத்துவத்தை நினைத்துப் பார்க்க முடியாது. ஆண்டிபயாடிக் மருந்துகள் இல்லாமல் உணவு தயாரிப்பு கூட இன்னைக்கு சாத்தியம் இல்லாத ஒன்றாக இருக்கின்றது ஆண்டிபயாடிக்  மருந்துகள் நல்ல, கெட்ட பாக்டீரியாக்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாததால், ஆண்டிபயாடிக் சிகிச்சைக்குப் பிறகு குடல்  நுண்ணுயிரிகள் மிகவும் பலவீனமாக இருக்கும்.

ஆண்டிபயாடிக் மாத்திரைகள் அதனுடைய சேர்க்கையில்  தயாரிக்கப்படும் உணவு உற்பத்திகள் மற்றும் மதுபானம். புரத ஒவ்வாமை [ ஆடு மாடு பால் ஒவ்வாமை கோழி முட்டை வெள்ளை கரு ஒவ்வாமை. கோதுமை உணவு ஒவ்வாமை: அல்புமின், குளோபுலின் மற்றும் பசையம் போன்ற பல்வேறு புரத கூறுகளால் நோய் எதிர்ப்பு மண்டலம் தூண்டப்படுகின்றதுஇதன் விளைவாக குடல் சத்துறிஞ்சிகள் [. நுண்விரலிகள்] தாக்கி   அழிக்கப்படுகின்றன.

குடல் சத்துருஞ்சிகளின் தரம் குன்றி  செலியாக் என்ற நோய் ஏற்படலாம்பாதிக்கப்பட்டவர் எப்படிப்பட்ட சத்துணவுகளை சாப்பிட்டாலும் குடல் எந்த சத்துக்களையும் எடுத்துக் கொள்ளாமல் வெளியே தள்ளிவிடுகின்றது. மிக முக்கியமாக இரத்த உற்பத்திக்கு அவசியமான இரும்பு சத்து , விற்றமின் B-12 குறைபாடு ஏற்படும்.

இது மட்டும் இல்லை, குடல் காயப்பட்டு ஓட்டை விழுந்து மலக் கசிவு ஏற்பட்டால் தீராத நோய்கள் மட்டுமல்ல பைத்தியம் கூட பிடிக்க வைக்கும். குடல் மற்றும் மூளை ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வது உண்மையில் நடக்கின்ற ஒரு செயல், [பசி வந்தால் பத்தும் பறந்து போகும்நமது செரிமானப் பாதை நமது மூளையின் செயல்பாடுகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

http://mahesva.blogspot.com/?view=magazine

 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக