சனி, 5 ஆகஸ்ட், 2023

Calculating Compound Interest with Calculator: The world of tomorrow is yours, cuties.

கால்குலேட்டரைக் கொண்டு கூட்டு வட்டியைக் கணக்கிடுதல்: குட்டீஸ் நாளைய உலகம் உங்களுக்கானது.  உங்கள் பெற்றோர்கள் நீங்கள் ஆறு வயதாக இருக்கும்போது மேற்படிப்புக்காக வங்கியில் பத்தாயிரம் [10,000€] வைப்பு பணம் போடுகிறார்கள். உங்கள் முதலீட்டுக்கு வங்கியில் 4% வட்டி தருவதாக  சொல்லுகிறார்கள். 16 வயதில் அதாவது 10 வருடம் கழித்து  உங்கள் வங்கியில் எவ்வளவு  முதலீடு இருக்கும் வட்டியுடன் சேர்த்து.  

மேற்கோளாக:

a) மூலதனம் : 10,000 €

b) இவ்வளவு காலம்: 5 வருடம்

c) இவ்வளவு சதவீதம்: [வட்டி%] 4%

 

1) முதல் வருட வட்டி:  10,000 + 4 [ 2nd]அல்லது [SHIFT]  % = 10,400 €. [ மூலதனம்]

2) இரண்டாம் வருட வட்டி: 10,400 + 4 [ 2nd]அல்லது [SHIFT] % = 10,816€ [மூலதனம்]

3) மூன்றாம் வருட வட்டி: 10,816 + 4 [ 2nd] அல்லது [SHIFT] %  = 11,248,64 € [மூலதனம்]

 

4) நான்காம் வருட வட்டி: 11,248,64  + 4 [ 2nd] அல்லது [SHIFT] %  = 11,698,58 € [மூலதனம்]

5) ஐந்தாம் வருட வட்டி: 11,698,58  + 4 [ 2nd] அல்லது [SHIFT] %  = 12,166,52 € [மூலதனம்] 5 வருட முடிவில் இருப்புத்தொகை: 12,166,52

 

ஒவ்வொரு முறையும் சமன்பாடு [=] அழுத்தி, அடுத்த கூட்டலூக்கு போக வேண்டும். பத்து வருட முடிவில் எவ்வளவு முதலீடு இருக்கும் உங்கள் வங்கியில்.  இந்த வழிமுறையை பயன்படுத்தி கணக்கிட்டு பார்த்துக் கொள்ளுங்கள். மொத்தமாக கூட்டுவதற்கும் இப்படி தனித்தனியாக கூட்டுவதற்கும்  இடையில் [வெட்டு] உள்ள வித்தியாசத்தை நீங்கள் கண்டுகொள்ளுங்கள்.. 

 

கால்குலேட்டரை [SHIFT] பட்டன்  கூகுள்  கால்குலேட்டர் [ 2nd]அல்லது [ Rad]   பட்டன் அல்லது நேரடியாக % அழுத்தம். இந்த பட்டன்கள் ஒரு மாற்றியாக செயல்படுகின்றன. அவ்வளவு தான் அவைகளின் செயல்பாடு மற்றும் கால்குலேட்டர் கணக்கில் தொடர்ந்து வட்டியை கணக்கெடுப்பதற்காக கூட்டல் [+] பயன்படுத்தவும்.

 

கை கணக்கு: [10,000 × 4%/100 = 400€ %] கை கணக்கில் பெருக்கல்[×]  இவ்வளவு தான்  இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசம். மற்றும் படி சதவீத கணக்கு ஒன்றுதான்.

 

கூட்டு வட்டி formula:

Kn= இறுதி மூலதனம்

K =ஆரம்ப மூலதனம்

P= வட்டி விகிதம் [சதவீதத்தில்]

n= காலம் [நட ஆண்டுகள்]

 

10,000×((1+4÷100))^10  =  [14,802,44€]

 

 புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

http://mahesva.blogspot.com/?view=magazine





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக