திங்கள், 27 ஜூன், 2022

How long does it take for food to move through the digestive tract:

செரிமானப் பாதை வழியாக உணவு நகர்வதற்கு எவ்வளவு நேரம் எடுக்கின்றது: ஜீரணிக்கும்போது, ​​உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை பிரித்தெடுத்து, மலக்குடல் மற்றும் ஆசனவாய் காலக்கடமையில் (கழிப்பறையில்) முடிவடைவதற்கு உடல் ஒரு நாளிற்கு மேல் எடுக்கின்றது. இதில் குடல்-வாழ்-நல்ல பாக்டீரியாக்களின் பங்களிப்பு மூன்றில் ஒரு பங்கு உள்ளது.

உணவு உடலில் எவ்வளவு நேரம் இருக்கும்:

வாய்: 1 முதல் 60 வினாடிகள்.

உணவுக்குழாய்: 1 முதல் 10 வினாடிகள்.

இரைப்பை: 2 முதல் 6 மணி நேரம்.

சிறு குடல்: 2 முதல் 6 மணி நேரம்.

பெருங்குடல்: ஒரு நாளுக்குமேல் (2-3 நாட்கள்)


இரைப்பை: இதனுடைய முக்கிய பணி உட்கொண்ட உணவை தற்காலியமாக சேமித்து வைத்து பின்னர் அதை, செரிமானத்திற்காக எளிதாக சிறிய அளவில் குடலுக்கு சமமாக அனுப்புகின்றது. மற்றும் இரைப்பை பெரிய உணவுகளை அரைத்து சிறிய துண்டுகளாக உடைத்து ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவுகின்றது.


இரைப்பையிலுள்ள மிகமுக்கியமான நொதிகள்: பெப்சின் இது 0.5 சதவீதம் உப்பு அமிலம்(HCl) ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைக் கொண்டுள்ளது, எனவே இது மிகவும் அரிக்கும் தன்மை கொண்டது. பெப்சின் பாக்டீரியாக்களை அழித்து, உணவில் உள்ள புரதங்களை உறைய வைத்து புரதத்தை உடைக்கின்றது.


இருப்பினும், பெப்சின் இரைப்பை அமிலம்-ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் இணைந்து மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். ( அமில மிகைப்பு தடுப்பான்களின் பயன்பாடு இதற்கு இடைஞ்சலாக செயல்படுகின்றது) ஹைட்ரோகுளோரிக் அமிலம் புரத மூலக்கூறுகளை உப்ப வைக்கின்றது. அவை பின்னால் கணைய நொதிகளால் உடைக்கப்படுவதற்கு எளிதானதாக மாறுகின்றது.


சிறுகுடல்: சிறுகுடலில், நொதிகள் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகள் போன்ற உணவுக் கூறுகளை அவற்றின் தனிப்பட்ட பாகங்களாக, அதாவது சர்க்கரை, அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்களாக உடைக்கப்படுகின்றன.


உணவின் ஊட்டச்சத்துக்களை உடைப்பதற்கு தேவையான என்சைம்கள் உமிழ்நீர் சுரப்பிகளில் வாய், வயிறு மற்றும் கணையத்தில் உள்ள சுரப்பிகளினால் உருவாகின்றன மற்றும் செரிமான சாறுகளாக குடலில் வெளியிடப்படுகின்றன. கூடுதலாக, பித்தநீர் மற்றும் குடல் சுரப்புகளும் உள்ளன. இந்த நொதிகள் உணவை உடைப்பதை எளிதாக்குகின்றன


கூடுதலாக, வயிறு மற்றும் குடல் சளியை சுரக்கின்றது, இது சளி சவ்வுகளைத் தாக்கும் நொதிகளைத் தடுக்கின்றது. பல்வேறு செரிமான சாறுகள் மற்றும் சளியுடன் கூடிய சைம், நிறைய தண்ணீரில் கலந்து இருப்பதால், அது சிறுகுடலில் மிகவும் மெல்லியதாக இருக்கும்.


இதுவரைக்கும் உணவுகள் திரவங்கள் நிறைந்த கூழ்மம்மாக, செல்லுலோஸ் வடிவத்தில் பெரிய குடலுக்கு தள்ளப்படுகின்றது. இங்குதான் திரவங்கள் உறிஞ்சப்பட்டு, மலம் தடிமனாகின்றது.


பெருங்குடல்: வலது அடிவயிற்றில், சிறுகுடல் முதல், 1.5 மீட்டர் நீளமுள்ள பெரிய குடலுக்குள் பாய்கின்றது. இது பிற்சேர்க்கை, பெரிய குடல் (பெருங்குடல்) மற்றும் மலக்குடல் உடன் பின்னிணைப்பு (ஆசனவாய்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது ஆசனவாயில் உள்ள குத கால்வாயுடன் முடிவடைகின்றது.


பெரிய குடலில் உள்ள திரவ சைமிலிருந்து நீர் மற்றும் உப்புகள் அகற்றப்படுகின்றன. இதன் விளைவாக, குடல் உள்ளடக்கங்கள் மலத்தில் தடிமனாக இருக்கும்.(மலம் கெட்டிப்படுதல்) அதே நேரத்தில், பெரிய குடல் தசைநார் வலுவான, அலை அலையான இயக்கங்களில் நீள் வடிவ உருண்டைஉருளையாக ஆசனவாய் திசையில் குடலின் உள்ளடக்கங்களை வெளிப்படுத்துகின்றது.


மலக்குடலுக்குள் மலம் நுழைந்தவுடன், கழிப்பறைக்குச் சென்று மலம் கழிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகின்றது. நீங்கள் நேராக கழிப்பறைக்கு செல்லவில்லை என்றால், மலக்குடல் மலத்தை நாள் கணக்கில்(2-3 நாட்கள்) சேமிக்கின்றது.


குடல் இயக்கங்களின் அதிர்வெண் நபருக்கு நபர் பெரிதும் மாறுபடும். சிலர் ஒரு நாளைக்கு மூன்று முறை கழிப்பறைக்குச் செல்கிறார்கள், மற்றவர்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே. அதற்காக மலச்சிக்கல் என்று கைமருத்துவம் பார்க்காதீர்கள் இந்த இரண்டு நடவடிக்கைகளும் முற்றிலும் இயல்பானவை.


உணவில் நார்ச்சத்துகள் எவ்வளவு அதிகமாக உள்ளது என்பதைப் பொறுத்தும் அதிர்வெண் உள்ளது. நார்ச்சத்து உணவுகள் அதிக நீர் ஆகாரங்கள் மலம் கழிப்பதை உங்களுக்கு எளிதாக்கின்றன.


பெரிய குடலின் மற்ற முக்கிய பணிகள் விற்றமின்களை உறிஞ்சுதல் மற்றும் விற்றமினை உற்பத்தி செய்வதும். குடல்-வாழ்-நல்ல பாக்டீரியாக்களின் பங்களிப்பு இதற்குத் தேவை.


இது உணவின் ஜீரணிக்க முடியாத கூறுகளில் வாழும் பில்லியன் கணக்கான பாக்டீரியாக்களைக் கொண்டுள்ளது, அவை முக்கிய விற்றமின் B,K மற்றும் குறுகிய இணைப்பை கொண்ட கொழுப்பு அமிலங்களையும் உற்பத்தி செய்கின்றன.


கூடுதலாக குடல்-வாழ்-நல்ல பாக்டீரியாக்கள், குடலில் தேவையில்லாமல் குடியேறி, பெருகும் பிற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களிலிருந்து குடலை பாதுகாக்கின்றது. உணவு செரிமான தொகுதி ஒரு தொழிற்சாலையில் இயங்கும் ஊரும் வரிசை போல் வேலை செய்கின்றது (work on the assembly line)


வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் ஏற்படும் போது செரிமான தொகுதியில் என்ன நடக்கின்றது, குடலின் இரண்டு முக்கியமான பணிகள்:


குடல் உள்ளடக்கத்தை(மலம்) தள்ளும் தசை இயக்கங்கள் பெரிய குடலில் நீர் மற்றும் உப்புகளை பதிவு செய்தல் இந்த செயல்பாடுகள் ஒன்று அல்லது இரண்டும் சேர்ந்து தொந்தரவு செய்தால், செரிமான சிக்கல்கள் ஏற்படலாம்.


மலச்சிக்கலின் போது, ​​பெருங்குடல் தசைகள் பொதுவாக மந்தமாக இருக்கும், குடல் உள்ளடக்கம் மெதுவாக மட்டுமே நகரும். நீர் பற்றாக்குறை காரணமாக, மலம் உறுதியானதாகவும் கடினமாகவும் மாறுகின்றது.


சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணமும் இதுதான், குடலிலிருந்து அதிகமான திரவத்தை உறுஞ்சி, மிதமிஞ்சிய சர்க்கரை சிறுநீர் மூலம் வெளியேற்றுவதினால் குடலில் மலம் கெட்டிப்படுகின்றது.


வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், இதற்கு நேர்மாறாக நடக்கின்றது. பெரிய குடல் மலத்திலிருந்து போதுமான திரவத்தை உறிஞ்சுவதை நிர்வகிக்காது. இதன் நிமித்தம் சிறுகுடலில் இருந்து அதிகப்படியான திரவம் வருவதால் அல்லது குடல் உள்ளடக்கம் பெரிய குடல் வழியாக மிக விரைவாக கொண்டு செல்லப்படுவதால். திரவ நிலையில் வயிற்றுப்போக்கு ஏற்படுகின்றது. மேலும் நோய்த்தொற்றுகள், சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் பெரும்பாலும் வயிற்றுப்போக்குக்கு இன்னுமொரு காரணியாகும்.


பெரும் குடல் பாக்டீரியாக்கள் இடம்மாறி குடியேறியிருந்தாலும் தீராத வயிற்றுக்கோளாறுகளை ஏற்படுத்தும். குடல்-வாழ்-நல்ல பாக்டீரியாக்கள் பெரும் குடலில் மட்டும்தான் குடியேறியிருக்க வேண்டும் சிறுகுடல் வழியாக உணவுக்குழாய்களில் குடியேறியிருந்தால் எரிச்சல் ஏப்பம் போன்ற பல கோளாறுகளை ஏற்படுத்தும்.


மற்றும் குடல் உட் கசிவுகள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் ஊடுருவல் உள்ளுறுப்புகளை சேதப்படுத்தும் இதன் நிமித்தம் தோல் நோய்கள், தீராத அரிப்பு, சொறி, ஒவ்வாமையை ஏற்படுத்தும். குடல் கசிவு மூலம் வெளிவந்த இந்த பாக்டீரியாக்கள் மூளை வரை சென்று அங்கும் ஆக்கரமிப்பு செய்யும். இதன் நிமித்தம் பைத்தியம்(விசர்) ஏற்படுகின்றது.


குடலை குத்திக்கிழிக்கும் உணவுகளை எடுக்காதீர்கள். (எ.கா: கோழி, ஆடு சிறு எலும்புகள், மீன் முள்ளுகள், நண்டுக்கோது, உணவின் மூலம் வரும் கண்ணாடி பிளாஸ்டிக் உலோக பிசுறுகள் மற்றும் விபத்து, காயங்கள். மதுபானம், மாத்திரைகள், அதிக அமிலம் நச்சு உணவுகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்) உணவை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் நன்றாக சமையல் செய்து மென்று சாப்பிடுங்கள்.


செரிமானத்திற்கு முன். வாய்: உணவு மெல்லுதல். உமிழ்நீருடன் கலக்கின்றது இதில் என்சைம் உள்ளது. தொண்டை: விழுங்குதல்உணவுக்குழாய்: உள்ளிழுப்பு.


இரைப்பையில் தற்காலிய சேமிப்பு :இதுவரைக்கும் தான் உங்கள் சாப்பாட்டிற்கு இறைச்சி, பருப்பு, சாதம், புரியாணி என்ற பெயர் இதற்கு பிறகு அதற்கு வேறு பெயர் “சைம் கூழ்மம்”


இரைப்பை நொதிகள்: இரைப்பை உப்பு அமிலம்(HCl) , பெப்சின் நொதி உணவு சிறு துண்டுகளாக உடைப்பு.


சிறுகுடல்: நொதி பிளவு மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுதல். (20க்கும் மேற்பட்ட கணைய என்சைம்/நொதிகள், கல்லீரல் பித்தநீர் போன்ற கல்லீரல் என்சைம் ஊட்டசத்துக்கள் மற்றும் சர்க்கரை, கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்களை உடைப்பதில் பணியாற்றுகின்றன. நீங்கள் எந்த உணவை சாப்பிட்டாலும் உடல் அதை இந்த வடிவத்தில் உறுஞ்சிக்கொள்கின்றது.


பெரும் குடல்: சைம் தடித்தல்/தற்காலிய சேமிப்பு. திரவங்களை உறிஞ்சுதல். இங்குதான் குடல்-வாழ்-நல்ல பாக்டீரியாக்கள் தங்கள் பணிக்காக அமர்த்தப்பட்டிருக்கின்றார்கள் மற்றும் மலம் கெட்டிப்படுதல். மலக்குடல்: வெளியேற்றம் (மலத்தை நீக்குதல்)


சாராம்சம்: என்னுடைய கட்டுரைகள் அத்துனையும் பிள்ளைகளை மனதில் வைத்து அவர்களுக்காக எழுதப்பட்டது, இதில் கடும், சுடும் சொற்கள் தரக்குறைவான படங்கள் ஏதுமில்லை.


ஒவ்வொரு எழுத்தும் என்னுடைய கைப்பட எழுதியவை. நம்பிக்கையுடன் மூன்று வயதிலிருந்து உங்கள் பிள்ளைகளை அனுமதிக்கலாம். அவர்கள் படங்களை பார்த்து அறிந்து கொள்வார்கள்.


இது நாளைய வாழ்வியலுக்கான அடிப்படை கல்வி ஒவ்வொரு பிள்ளைகளும் தெரிந்திருக்கவேண்டிய பாடம். உங்களுக்காக எழுதப்பட்டது, கறையான்கள்(வைரஸ்கள்) அரிப்பதற்கு முன்னால் உங்கள் கணனிகளில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். நன்றி.

 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக