புதன், 1 ஜூன், 2022

ஒளிச்சேர்க்கை: தாவரங்கள் கதிரவன் ஒளியில், பச்சையத்தின் மேல் கார்பநீர் ஒட்சைட் நீரின் மூலக்கூறுகளுடன் இணைந்து மாப்பொருளை, சர்க்கரையை தயாரிக்கின்றன. சர்க்கரை என்பது குளுக்கோசை குறிக்கும்.

வேதியியல் சூத்திரத்தில் சுருக்கமாக: 6H₂O + 6 CO₂ = 6O₂ + C₆H₁₂O₆ ஆறு நீர்மூலக்கூறுகள் மற்றும் ஆறு கார்பநீர் ஒட்சைட் மூலக்கூறுகளிலிருந்து ஆறு ஒட்சிசன் மற்றும் ஒரு சர்க்கரை மூலக்கூறு (குளுக்கோசு - C₆H₁₂O₆) உருவாகின்றன.

திராட்சைப் பழங்களில் சேமிக்கப்படும் போது விரைவில் குளுக்கோஸாக ஜீரணிக்ககூடிய ஒற்றைச்சர்க்கரையாக சேமிக்கப்படுகின்றது

வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் போன்ற மற்றைய கனிகளில் புருக்டோஸ் என்னும் பழச்சர்க்கரை இரட்டை சர்க்கரையாக சேமிக்கப்படுகின்றது. பூக்களிலுள்ள நெட்ரா, என்று சொல்லக்கூடிய சர்க்கரை தண்ணியும் இதே வடிவம்தான். பின்னால் இது தேனீக்களினால் தேனாக மாற்றப்படுகின்றது.

கரும்பு, சர்க்கரை கிழங்கு போன்ற கிழங்கு, தழைகளில் சேமிக்கப்படும் போது, விரைவாக செரிமானம் அடையக் கூடிய இரட்டை சர்க்கரையாக சேமிக்கப்படுகின்றது

நார் பொருள் நிறைந்த தாவரத்தின் இலைகளில் சேமிக்கப்படும் போது உடைக்க முடியாதசங்கிலித் தொடர் சர்க்கரையாக சேமிக்கப்படுகின்றது.

இலை தண்டு, சிறுமுழு தானியங்கள் கடலை, கிழங்கு பருப்பு வகைகளில் இருக்கும் குளுக்கோசு ஒன்றுக்கு மேற்பட்ட உடைக்க முடியாத சங்கிலித் தொடர் இணைப்புகளை கொண்ட பலசர்க்கரைகள் (பாலிசக்கரைடுகள்) வடிவத்தில் உள்ளது.

தாவரங்கள் தயாரித்த சர்க்கரையை மாறுபட்ட வடிவத்தில் வெவ்வேறு இடங்களில் சேமித்து வைத்திருக்கின்றது. செரிமான நொதியங்கள் இந்த சர்க்கரையை உடைத்து திரும்பவும் ஒற்றைச்சர்க்கரை குளுக்கோசு - C₆H₁₂O₆ இரத்த பிளாஸ்மாவில் கலந்து விடுகின்றது.

தாவரங்கள் இறந்து மண்ணிற்கு செல்கையில் இந்த சர்க்கரை கூறுகள், சர்க்கரையில் ஒட்சிசன் (O) கழற்றிவிடப்பட்டு எரிபொருள் ஹைட்ரோகார்பன் மீத்தேன்: CH₄ பியூட்டேன்: C₄H₁₀ எரிவாயுக்களாக மாற்றப்படுகின்றது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக