புதன், 15 ஜூன், 2022

Protein vs Carbohydrates.

 புரதம் Vs கார்போஹைட்ரேட்கள்.

புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இடையிலான வித்தியாசங்கள்:

கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு ஆற்றலை வழங்கும் பெரும் பணியை செய்கின்றது. இது “டெக்ஸ்ட்ரோஸ்” எனப்படும் ஒற்றை சர்க்கரை (மோனோசாக்கரைடு) குளுக்கோசினால் கட்டமைக்கப்படுகின்றது. இது சர்க்கரை/குளுக்கோசு(C6H12O6) உடல் திசுக்களின் எரிபொருளாக பயன்படுகின்றது.


புரதங்கள், 20 அமினோ அமிலங்களை கொண்டு கட்டமைக்கப்படுகின்றது. இதனுடைய இணைப்பு புரதங்களாக தொகுக்கப்படுகின்றது. இது இடம்சார்ந்த பண்புகளை கொண்டது அதாவது மாறுபட்ட உணவுகளில் வெவ்வேறு பண்புகள், சுவைகளை கொண்டது.


இது முதன்மையாக செல் மற்றும் தசைகளை உருவாக்கும் பணி மேலும் தேவையான மிக முக்கியமான ஊட்டச்சத்துக்கள் புரதங்களை எடுத்துச்செல்லும் கேரியர்களாகவும் செயல்படுகின்றது. முக்கியமான கொழுப்பு அமிலங்கள், விற்றமின்கள், செல் கூறுகள் மற்றும் ஆற்றல் கிடங்கின் முன்னோடிகளுக்கும் பொறுப்பாகும்.


புரதங்கள் உடலை கட்டும் கட்டுமான பொருளாக பயன்படுகின்றது. புரதம் மற்றவற்றை விட வலுவான, திருப்திகரமான விளைவைக் கொண்டுள்ளது இருப்பினும் சர்க்கரை என்னும் எரி சக்தி இல்லாமல் உடல் திசுக்களினால் ஒரு போதும் ஒழுங்காக இயங்க முடியாது.


எல்லாவற்றிற்கும் மேலாக புரதம் இல்லாமல், எந்த ஜீவராசிகளினாலும் உயிர்வாழ முடியாது. செல் புதுப்பித்தல், ஆரோக்கியமான செல் பராமரிப்பு மற்றும் சேதமடைந்த செல்களை சரிசெய்வதற்கு புரதம் அவசியம். தசையை உருவாக்க அல்லது தசை இழப்பைத் தடுக்க மற்றும் இணைப்பு திசுக்களை இறுக்குவதற்கும் புரதம் தேவைப்படுகின்றது.


மேலும் இரத்த உருவாக்கம், ஒட்சிசனை எடுத்துச்செல்வதற்கும் இந்த புரதம் கணிசமாக ஈடுபட்டுள்ளது என்சைம்கள்/நொதியங்கள் மற்றும் ஹார்மோன்களின் கட்டமைப்பு, நோயெதிர்ப்பு அமைப்பு, எலும்புகளின் செல் அமைப்புக்கும் புரோட்டீன்கள் அவசியமானது. கொலாஜன், இரத்த உறைதல் காரணிகள் மற்றும் ஆன்டிபாடிகள் உருவாவதற்கும் புரதம் ஒரு முக்கிய அங்கமாகும்.


நுண்ணூட்டச் சத்துக்கள்: அத்தியாவசிய நுண்ணூட்டச் சத்துக்களில் பலவற்றை எங்கள் உடலால் உற்பத்தி செய்ய முடியாது. நுண்ணூட்டச்சத்துக்களில் முக்கியமான விற்றமின்கள், சுவடு கூறுகள் மற்றும் தாதுக்கள் மற்றும் சில கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் ஆகியவை அடங்கும். இந்த நுண்ணூட்டச் சத்துக்களை வழங்குவதற்கு உணவில் இருக்கும் மூன்று முக்கியமான விநியோகிப்பாளர்கள், கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பு.


விற்றமின்கள் சத்துக்களை இந்த விநியோகிப்பாளர்கள் மூலம்தான் உடல் எடுத்துக்கொள்கின்றது.


இந்த நுண்ணுட்ட சத்துக்கள் மனித உடலின் அடித்தளத்தை உருவாக்குவதில் பெரும்பங்காற்றுகின்றது.. கார்போஹைட்ரேட் உள்ள உணவில் 70 விழுக்காடுகள்  நுண்ணுட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது, குறிப்பாக விற்றமின்கள் (விற்றமின்-C) மிகிதம் புரதம் மற்றும் கொழுப்பு உணவுகளிலிருந்து  பெறப்படுகின்றது.


தாவரப்புரதம் விலங்குபுரதம் என்று தனித்தனியாக எதுவும் கிடையாது இந்த இரண்டுமே 20 அமினோ அமிலங்களை கொண்டு கட்டமைக்கப்பட்டவைதான்.நீங்கள் புரத உணவுகளை இறைச்சியாக சாப்பிட்டாலும் சரி, அல்லது பயறு பருப்பு என்று தானியங்களாக சாப்பிட்டாலும் சரி உடல் அதை அமினோ அமிலங்களாக உடைத்துத்தான் எடுத்துக்கொள்கின்றது.


இந்த இடத்தில்தான் சர்க்கரை நோய் மாத்திரைகள் வேலை செய்கின்றன, அதாவது உணவு சரியாக செரிமானம் அடையாமல் பார்த்துக்கொள்கின்றது இதன் நிமித்தம் செரிமான நொதியங்கள், கார்போஹைட்ரேட்டுகள் (சர்க்கரை) மற்றும் கொழுப்பு உடைக்கப்படாமல் தடுக்கப்படுகின்றது.


இரண்டிலும் சர்க்கரைகள் ஒழிந்திருக்கின்றது தாவர புரதத்தில் குளுக்கோசு வடிவிலும் இறைச்சியில் கிளைகோசன் வடிவிலும் மறைந்திருக்கின்றது. இறைச்சி புரதத்தில் இரும்பு, துத்தநாகம் மற்றும் விற்றமின்கள் பி6, பி12 அமினோஅமிலங்கள் நிறைந்து காணப்படும் மற்றும் கடல் உணவுகளில் அயோடின், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றது.


கார்போஹைட்ரேட்டு உணவுகளில் கொழுப்பில் கரையக்கூடிய விற்றமின்கள்: ஏ,டி,ஈ,கே தாவர எண்ணை, கொழுப்பு உணவுகளுடன் இணைந்திருக்கும். மற்றும் விற்றமின் சி, நார்சத்து, மெக்னீசியம், இரும்பு கால்சியம், செப்பு, பொட்டாசியம், போலிக்கமிலம்(விற்றமின்-9/11) போன்ற முக்கியமான கனிம சத்துக்கள்,


மற்றும் இரண்டாம் நிலை தாவர பொருட்கள்: கரோட்டினாய்டுகள், ஃபிளாவனாய்டு, பைட்டோஸ்டரின், சப்போனைன், பாலிபினால்கள். சல்பைட். நிறைந்திருக்கும்.


மற்றய உணவுகளைவிட கொழுப்பு/ எண்ணை நிறைந்த கடலை விதை உணவுகளில் நுண்ணுட்டசத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக செலினியம், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள். எண்ணையிலுள்ள விற்றமின் ஈ இல்லாமல் எந்த விற்றமின்களையும் உடல் திசுக்கள் ஏற்றுக்கொள்ளாது இவைகள் விற்றமின்களை எடுத்துச்செல்லும் லிப்பிட் கொழுப்பு குழுமியங்களாக செயல்படுகின்றது.


நீங்கள் எவ்வளவுதான் கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு உணவு பத்தியம் மேற்கொண்டு, கடினமாக உடற் பயிற்சி செய்தாலும் சரியான நுண்ணுட்ட சத்துக்கள் இல்லாமல் போனால் உங்கள் வழக்கமான திறனைக் காட்டிலும் குறைவாகவே இருப்பீர்கள். சரியாகச் சொன்னால், 80 சதவிகிதம், ஊட்டச்சத்துகள் உங்கள் தனிப்பட்ட அறிவாற்றல் வெற்றியிலும் வலிமையிலும் பங்கெடுக்கின்றது.


புரதங்கள்: இறைச்சி, மீன், பருப்பு வகைகள், பால் பொருட்கள். கொழுப்புகள்: எண்ணெய், பருப்புக்கள், விதைகள், வெண்ணெய்/நெய், எள்ளு, ஒலீவ், வெண்ணைக்காய் (அவோக்காடோ) தேங்காய். கார்போஹைட்ரேட்: அரிசி, உருளைக்கிழங்கு, சிறுமுழு தானிய பொருட்கள், பழங்கள், காய்கறிகள்.


கார்போஹைட்ரேட்டுகள் உணவின் அடிப்படை இதைத் தொடர்ந்து நடுத்தரத்தில் புரதங்கள் உள்ளன இதற்கு மேலே கொழுப்புகள் உள்ளது. கொழுப்புகள் புரதங்கள் கார்போஹைட்ரேட்டுகளை விட இரண்டு மடங்கு அதிக கலோரி அடர்த்தியைக் கொண்டுள்ளன. எனவே கார்போஹைட்ரேட்டுகளை விட அளவு அடிப்படையில் கொழுப்பு, புரத உணவுகள் குறைவாக நுகரப்பட வேண்டும்.


இந்த இரண்டிலும் எது நல்லது எது கெட்டது என்று எதுவும் கிடையாது இரண்டுமே அத்தியாவசியமான ஒன்று ஒரு கட்டிடத்தை கட்டுவதற்கு இயந்திரங்கள், கல் மண் இருந்தால் மட்டும் போதாது அதை இயக்குவதற்கு மின்சாரமும் தேவை அத்தகைய சேவையை பூர்த்தி செய்கின்றது கார்போஹைட்ரேட்டுகள்


.இயற்கை எல்லா இடங்களிலும் உணவை பகிர்ந்தளித்து வைத்திருக்கின்றது அதை நீங்கள் தரம்பிரிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு சில ஊரில்/நாட்டில் விற்றமின்-சி நிறைந்த நெல்லிக்கனிகள் அதிகமாக இருக்கும், நெல்லிக்கனி இல்லாத நாட்டில்/ஊர்களில் அதற்கு பதிலீடாக ப்ரோக்கோலி அதிகமாக விளைகின்றது. உணவு எல்லா இடங்களிலும் மாற்றீடாக வைக்கப்பட்டிருக்கின்றது. உனக்கு எது கிடைக்கின்றதோ அந்த உணவை நீ விரும்பி எடுத்துக்கொள்


சர்க்கரை நோய்க்கு எதை சாப்பிடலாம் எதை சாப்பிட கூடாது என்று உனக்குள்ளே வினாவிடை தொகுக்காதே, உனக்கான உணவை நீயே முடிவு செய்துகொள்ள அதற்கான அறிவு உன்முன் வைக்கப்பட்டிருக்கின்றது. நன்றி








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக