DPP-4 தடுப்பான்கள் & சர்க்கரை நோய் வகை 2: சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் மருத்துவ சந்தையில் பல வகை பெயர்களில் கொட்டிக்கிடந்தாலும் அதன் செயல்பாடு மற்றும் அதனுடைய விளைவுகளின் நோக்கம் ஒன்றுதான் இன்சுலினை சுரக்க வைத்து இரத்த சர்க்கரையின் அளவினை கட்டுக்குள்ளே வைத்திருப்பது.
மருத்துவ சந்தையிலிருந்து ஒரு 25 சர்க்கரை மாத்திரைகளை ஆய்வு செய்து பார்த்ததில் அவைகள் அத்துனையும் ஒரு குறிப்பிட்ட நான்கு மூல வேதிப்பொருள்களை கொண்டு தயாரிக்கப்பட்டவை என்பதை என்னால் அறியமுடிந்தது.
மூல வேதிப்பொருள்: 1) லினாக்ளிப்டின். (Linagliptin) 2) சாக்சிளிப்டின் (Saxagliptin)3) சிட்டாக்ளிப்டின்( Sitagliptin) 4)விதாக்ளிப்டின்( Vidagliptin)
சிட்டாக்ளிப்டின் மூல வேதிப்பொருளை அடிப்படையாக கொண்டு 15 நிறுவனங்களின் பெயரில் 20 க்கும் மேற்பட்ட மாத்திரைகள் இருக்கின்றன. இந்த நான்கு மூல வேதிப்பொருள்களின் செயல்பாடும் ஒன்றாகத்தான் இருக்கின்றது அவைகளின் செயல்பாடுகள் பற்றி பார்போம்.
DPP-4 இன்ஹிபிட்டர்கள் டிபெப்டைடில் பெப்டிடேஸ்-4, சுருக்கமாக DPP-4 என்பது மனித உடல் செல்களில் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஒரு நொதியம் இது உடலின் எல்லா பாகங்களிலிலும் உற்பத்தியாகின்றது. இது குடலில் உற்பத்தியாகும் GPL-1 நொதியத்தை சிதைத்து இன்சுலின் உற்பத்தியை தடுக்கின்றது. DPP-4 சர்க்கரை நோய்க்கு ஆதரவு தரும் ஒரு கெட்ட நொதியம்.
இந்த நொதி/என்சைம் இல்லாவிட்டாலும் ஆபத்து, உடல் கட்டுப்பாடின்றி வளரும். அதனுடைய குறுகிய நேரத்தை மாத்திரைகள் தாமதப்படுத்துகின்றது அவ்வளவுதான் இந்த மாத்திரைகளின் வேலை.
GPL-1 குளுக்ககோன்-லைட்-பெப்டைட் 1, சுருக்கமாக GPL-1, ஒரு பெப்டைட் ஹார்மோன் ஆகும், இது குடலில் உற்பத்தி செய்யப்படுகின்றது (இலியம் (குருட்டு குடல் பகுதி) மற்றும் பெருங்குடலின் L-செல்கள்) இந்த ஹார்மோன் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்ற நல்ல நொதியம்.
GPL-1 இன்ரெடின்களுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. (வளர்சிதைமாற்ற உறுப்புகள் கல்லீரல், கணையம் மற்றும் செரிமான கருவிகள்) DPP-4 மற்றும் GPL-1 இவை இரண்டும் ஓன்றுக்கொன்று எதிரும் புதிருமானது.
DPP-4 கூடுதல் உற்பத்திக்கும் மற்றும் GPL-1 சிதைவுக்கும் மாறுபட்ட பல காரணங்கள் இருக்கின்றது முதுமை, நோய் வைரஸ் தொற்று மாசுபட்ட சுற்றுச்சூழல், நச்சு உணவுகள், மாத்திரைகள் குடல் நோய்கள்.
சாராம்சம். DPP-4 தடுப்பான்கள் குடல் ஹார்மோன் GLP 1 இன் முறிவை தாமதப்படுத்துகின்றன, இது உணவுக்குப் பிறகு பல வழிகளில் வளர்சிதை மாற்றத்தில் தலையிடுகின்றது, இதன் நிமித்தம் இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகின்றது. தடுப்பான்களின் செல்வாக்கு காரணமாக, குடல் ஹார்மோன் GLP 1 இன் நீண்ட விளைவை ஏற்படுத்தும்.
இந்த நொதி/என்சைம் இல்லாவிட்டாலும் ஆபத்து, உடல் கட்டுப்பாடின்றி வளரும். அதனுடைய குறுகிய நேரத்தை மாத்திரைகள் தாமதப்படுத்துகின்றது அவ்வளவுதான் இந்த மாத்திரைகளின் வேலை.
சர்க்கரை நோய்க்கு, பல்வேறு சிகிச்சை விருப்பங்கள் இருந்தபோதிலும் வகை 2 நீரிழிவு நோயாளிகளில் 50% க்கும் அதிகமானோர் உகந்த இரத்த சர்க்கரை இலக்கு மதிப்புகளை அடைவதில்லை. இதன் நிமித்தம், பல நோயாளிகள் மாரடைப்பு, பக்கவாதம், குருட்டுத்தன்மை,கணைய புற்றுநோய், அழற்சி, ஊனம் போன்ற கடுமையான சிக்கல்களால் பாதிக்கப்படுகின்றனர்.
புதிய மாத்திரை DPP-4- தடுப்பான், சாக்ஸாக்ளிப்டின்போன்ற புதிய சர்க்கரை நோய் தடுப்பு (ஆண்டிடியாபெடிக்) அணுகுமுறைகள் எதிர்காலத்தில் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு மிக சிறந்ததாக பங்களிக்கக்கூடும்.
இரத்தச் சர்க்கரைக் குறைவு என்பது 40 mg/dl (2.22 mmol/l) க்கும் குறைவான இரத்த குளுக்கோஸ் அளவு என வரையறுக்கப்படுகின்றது.
DPP-4 தடுப்பான், "சிட்டாக்ளிப்டின்" வகை 2 நீரிழிவு நோய்க்கான மோனோதெரபி மற்றும் கூட்டு சிகிச்சைக்கு நல்ல பயனுள்ள ஆண்டிடியாபெடிக் மாத்திரை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக