புதன், 8 ஜூன், 2022

Glucagon Vs Insulin:

குளுகோகன் Vs இன்சுலின்: மனித உடல் இன்று வரைக்கும் கற்கால வாழ்க்கைக்கு ஏற்றாப்போல்தான் இயங்குகின்றது, அது என்றைக்குமே மாறாதது. அப்படியேதான் இருக்கும் நாங்கள் தான் எங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். மனித உடல் எறும்பு போல் உழைப்பதற்காக மட்டுமே, வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

சும்மா இருந்து சாப்பிடுவதற்காக இல்லை, கற்கால மனிதன் காடுகளில் ஓடியாடும் வேட்டை சமூகமாக வாழ்ந்தார்கள், இன்று எங்களுக்கு காடுகளும் இல்லை, வேட்டையாடுவதற்கு விலங்குகளும் இல்லை அதற்கு பதிலீடாக எங்களை நாங்கள் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். (எ.கா: உடற்பயிற்சி கூடங்களை ஒரு நவீன காடாக, வேட்டையாடும் களமாக எடுத்துக்கொள்ளவேண்டும்)

குளுகோகன் இன்சுலினின் ஒரு எதிரி. எதிரி என்பது எதிரும் புதிருமாக செயல்படுகின்றது. இன்சுலின் அளவிற்கு அதிகமான இரத்த சர்க்கரையை சேமித்து வைத்துக் கொள்ள உதவுகின்றது, குளுகோகன் அதை தின்று தீர்க்க உதவுகின்றது..

அளவிற்கு அதிகமான குளுகோகன் சுரப்பு இரத்த சர்க்கரையின் உயர்வினை ஏற்படுத்தும். குளுகோகன் இன்சுலின் செயல்களை சமநிலைப்படுத்த வேலை செய்கின்றது. உணவு உட்கொண்ட பிறகு, நான்கு முதல் ஆறு மணி நேரம் கழித்து உங்கள் இரத்தத்தில் குளுக்கோசின் அளவு குறைகின்றது,

அப்போது உங்கள் கணையம் குளுகோகனை உற்பத்தி செய்ய தூண்டுகின்றது. இந்த ஹார்மோன் உங்கள் கல்லீரல் மற்றும் தசை செல்களில் சேமிக்கப்பட்ட கிளைகோஜனை மீண்டும் குளுக்கோஸாக மாற்ற சமிக்ஞை செய்கின்றது.

விரதம், பட்டினி அல்லது கடுமையான உடல் உழைப்பு இரத்தச் சர்க்கரைக் குறைவினை ஏற்படுத்தும் இது இயல்பானது, இருப்பினும் இது குளுகோகன் சுரப்பை நான்கு மடங்கு வரை அதிகரிக்கசெய்கின்றது.

ஒரு சாதாரண உணவில், இன்சுலினுடன் ஒப்பிடும்போது குளுகோகனின் சுரப்பு ஒப்பீட்டளவில் மாறாமல் இருக்கும். இரத்தச் சர்க்கரைக் குறைவு, மிகக் குறைந்த இரத்த சர்க்கரை அளவு.

புரதம் நிறைந்த உணவுகள், உடற்பயிற்சி காரணமாக உட்கொள்ளும் அர்ஜினைன், அலனைன் போன்ற அமினோ அமில பவுடர் மாவு, நீடித்த கடுமையான உடல் உழைப்பு மற்றும் மன அழுத்தம் ஆகியவை அதிகரித்த குளுகோகன் சுரப்பு வெளியீட்டிற்கான முக்கிய தூண்டுதல்களாகும்.

சர்க்கரை நோயாளிகள் விரதம் இருப்பது அவ்வளவு உகந்ததல்ல இருப்பினும் விரதம் இருக்கும் போது ஒரு மேசைக்கரண்டி குளுக்கோசை வாயில் போட்டு மென்று கொள்ளுங்கள். காரணம், உடல் பசித்திருக்கும் போது, தனக்கு தேவையான சர்க்கரை/குளுக்கோசை தேடுகின்றது,

அப்படி தேடும்போது கேடகோலமைன்களின் குழுமத்திற்கு சொந்தமான சிறுநீரக மேற்பட்டை அட்ரீனல் சுரப்பிகள் ஹார்மோன் அட்ரினலின் (எபிநெஃப்ரின்) உருவாகின்றது. அட்ரினலின் மத்திய நரம்பு மண்டலத்திலும் ஏற்படுகின்றது,

அங்கு இது அட்ரினெர்ஜிக் நரம்பு செல்களில் நரம்பியக்கடத்தியாக உள்ளது. இதன் நிமித்தம் உங்களுக்கு பதட்டம், கை கால் நடுக்கம் அறிகுறியாக வெளியிடப்படுகின்றது. இதனுடைய தொடர்ச்சியாக மயக்கம் சுயநினைவு இழப்பும் ஏற்படுகின்றது.

உடனடியாக சர்க்கரை/உணவை எடுக்கவில்லை என்றால் குளுகோகன் சுரப்பு பல மடங்குகள் அதிகரிக்க செய்கின்றது. இதன் வெளியீடு இன்சுலின், சோமாடோஸ்டாடின் மற்றும் GLP1 ஆகியவற்றால் தடுக்கப்படுகின்றது. GLP-1 என்பது குளுகோகன் போன்ற பெப்டைட் ஹார்மோன்.

சோமாடோஸ்டாடின் என்பது செரிமானத்தின் போது கணையத்தால் சுரக்கும் ஒரு பெப்டைட் ஹார்மோனாகும். ஹைபோதாலமஸ் பிட்யூட்டரி சுரப்பி, வளர்ச்சி ஹார்மோன் சோமாட்ரோபின் உருவாவதைத் தடுக்கின்றது.

சர்க்கரை நோய் ஒரு வளர்சிதை மாற்றக் கோளாறு, இதனுடைய ஆணிவேர் எது என்று கண்டுபிடிக்க முடியாதவாறு உடலின் பல இடங்களிலும் பரவியிருக்கின்றது. இன்றைய சமூகம் பணி, பள்ளிக்கூட அழுத்தங்கள் காரணமாக வேளை தவறிய உணவு மற்றும் அதிகளவு இறைச்சி உணவின் நுகர்வு,

குளுகோகன் சுரப்பு அதிகரிப்பதற்கு ஒரு காரணியாக இருக்கின்றது. இது பிற்காலத்தில் சர்க்கரை நோயாக பரிணாமிக்க அடியெடுத்துக்கொடுக்கின்றது. பிள்ளைகளே வேளாவேளைக்கு சாப்பிட்டுக்கொள்ளுங்கள்.! சர்க்கரை நோய் இனிப்பு சாப்பிடுவதினால் வருவதில்லை மாறாக பட்டினி, உடல் உழைப்பு இல்லாததினால் வருகின்றது.

சர்க்கரை நோய் ஒரு பொதுவான கோளாறாக அறியப்பட்டாலும் அது நபருக்கு நபர் மாறுபட்ட சேனல்களை கொண்டது அவரவர் தங்களுக்கான சர்க்கரை நோயைப்பற்றி அறிந்து வைத்துக்கொள்ளுதல் அவசியமானது. அப்பத்தான் உங்களுக்கு எந்த சர்ந்தப்பத்தில் இன்சுலின் அல்லது குளுகோகன் ஊசி போடவேண்டும் என்ற ஒரு தெளிவு பிறக்கும்.

 இன்சுலின் எதிர்ப்பு (ஹைப்பர் இன்சுலினீமியா) முன்கணிப்புகளைக் காட்டும் படங்கள். இன்சுலின் எதிர்ப்பு (ஹைப்பர் இன்சுலினீமியா) மற்றும் கணைய பீட்டா β செல் குழும செயலிழப்பு ஆகிய இரண்டிற்கும் அடிப்படையான மரபியல் காரணங்கள். பெரும்தீனி மற்றும் உடல் செயல்பாடு, உடல் உழைப்பு இல்லாமை, இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்சுலின் எதிர்ப்பு உருவாகின்றது. (நீ படுத்துக்கிடந்து தின்றால் நான் இப்படித்தான் செயல்படுவேன் என்று சொல்லாமல் சொல்கின்றது)

காலப்போக்கில், இன்சுலின் எதிர்ப்பிற்கான கணைய பீட்டா β செல் குழும செயலிழப்பு/சிதைவுகள் ஏற்படுகின்றது. இதன் விளைவாக பீட்டா β செல் குழும செயல்பாட்டில் முற்போக்கான சரிவு, குளுக்கோஸ் சகிப்புத்தன்மை உருவாகின்றது. கணைய பீட்டா β செல் குழும செயலிழப்பு/சிதைவு மீள முடியாதவாறு தொடர்ந்து சரிகின்றது. பட்டினி மறுபுறம் பெரும்தீனீ கொழுப்பு கல்லீரல், தொப்பை இன்சுலின் எதிர்ப்புக்காண மிக முக்கியமான காரணிகள். (பீட்டா β செல்கள் கணையத்தில் தீவு கூட்டங்கள் போல் இருக்கின்றது)

இரத்தத்தில் இன்சுலின் அதிகமாகச் செறிவூட்டப்படுதல் அல்லது அதிகமான இன்சுலின் (ஹைப்பர் இன்சுலினீமியா) வகை 2 நீரிழிவு நோய்க்கு பெரும்பாலும் காரணமாகும். உடல் செல்கள் இன்சுலின் என்ற ஹார்மோனுக்கு குறைவாகவே பதிலளிக்கின்றன, இதன் நிமித்தம் இரத்த நாளங்களிலிருந்து சர்க்கரையை உடல் திசுக்களுக்கு அனுப்புவது தடைப்படுகின்றது. சுருக்கமாக, சர்க்கரையை/குளுக்கோசை பயன்படுத்த முடியாமலும் சேமிக்கமுடியாமலும் இரத்தத்தில் சர்க்கரை உயர்வு ஏற்படுகின்றது (பிட்யூடரி சுரப்பியின் சமிக்கை சிறுநீரகங்கள் அளவிற்கு அதிகமான சர்க்கரையை திறந்துவிடுகின்றது.

யாருக்கெல்லாம் அவசரகால குளுகோகன் ஊசி தொகுப்பு தேவைப்படுகின்றது ?: கடுமையான இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கு ஆளாகும் நீரிழிவு நோயாளிகளிக்கு மருத்துவர் குளுகோகன் ஊசி தொகுப்பை பரிந்துரை செய்கின்றார்.

இது மருந்தகத்திலும் கிடைக்கும். அவசரகால மருத்துவர் இல்லாத தருணங்களில் எடுத்துக்காட்டாக, விரதகால திருவிழாக்கள், விமானத்தில் பயணம் செய்யும் போது, உங்களுடன் ஒரு குளுகோகன் ஊசி செட் வைத்திருக்க வேண்டும் மற்றும் அதனுடன் சிறிய அளவு குளுக்கோசு/சர்க்கரை பையும் வைத்திருக்க வேண்டும்.

குளுகோகன் ஹார்மோன் இன்சுலினின் எதிரி என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் இது கல்லீரலில் சேமித்த கிளைகோஜனை உடைத்து இரத்தத்தில் சர்க்கரையை வெளியிடுகின்றது. இது பொதுவாக பத்து நிமிடங்களுக்குள் இரத்தச் சர்க்கரையை மீண்டும் அதிகரிக்கச் செய்கின்றது, அப்போதிருந்து இன்சுலின் குறைபாட்டினையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

ஊசி போட்ட பிறகு மயக்கமடைந்த பாதிக்கப்பட்ட நபர் விழித்தெழுவார். அந்த நபர் சுயநினைவு திரும்பியவுடன், அவர்கள் உடனடியாக குளுக்கோஸ் சர்க்கரையுடன் ஏதாவது சாப்பிட வேண்டும் அல்லது சர்க்கரை தண்ணி, பழச்சாறு, சர்க்கரை உள்ள கோலா குடிக்க வேண்டும்.

இது இரத்த சர்க்கரையை விரைவாக அதிகரிக்கின்றது, இதன் நிமித்தம் இரத்தச் சர்க்கரைக் குறைவு மீண்டும் ஏற்படுவதைத் தடுக்கின்றது மற்றும் அவசரகால பயன்பாட்டிற்கு கல்லீரலில் சர்க்கரை மீண்டும் சேமித்து வைக்கப்படுகின்றது.

குளுகோகன் ஊசி, மாத்திரை அல்லது நாசி தெளிப்பான் வடிவிலும் கிடைக்கின்றது. இதை பயன்படுத்தும் விளக்கம் அதனுடன் இணைக்கப்பட்டிருக்கின்றது. படித்து தெரிந்து கொள்ளுங்கள் அல்லது உங்கள் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

மதிப்பு மிக்க பிரபலத்தின்(…..) மரணம் கூட இந்த ஹைப்பர் இன்சுலினீமியா பாதிப்புத்தான் அடித்தளம் அமைத்துக்கொடுத்திருக்கும். சர்க்கரை இறக்கம் மயக்கம், தலை சுற்றலுடன் நின்றுவிடுவதில்லை அதனுடைய நீண்டகால பாதிப்பு மூளைத்திசுக்களின் அழிவிற்கு வழிவகை தேடித்தரும். 

அருகில் இருப்பவர்கள், உறவினர்கள் பதட்டமில்லாமலும் அக்கறையுடனும் நடந்து கொள்ள வேண்டும் பாதிக்கப்பட்ட நபருக்கு உடனடியாக குளுகோகன் ஊசி செலுத்தவேண்டும் 3-6 நிமிடங்களில் மீண்டும் அந்த நபர் புத்துணர்சியுடன் எழுந்திருப்பார். சர்க்கரை நோயை எதிர்க்காமல் அதனுடன் கூடி வாழ்ந்தால், ஒரு சர்க்கரை நோயாளியால் 100 வயது க்கு மேல் ஆரோக்கியமாக வாழமுடியும்

குளுகோகன் போன்ற பெப்டைட் 1  சுருக்கமாக GLP-1 என்பது குடலில் உற்பத்தி செய்யப்படும் ஒரு பெப்டைட் ஹார்மோனாகும்  இலியம் மற்றும் பெருங்குடலின் எல் செல்களினால் உற்பத்தி செய்யப்படுகின்றது இது குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. GLP-1 இன்க்ரெடின்களுக்கு சொந்தமானது. இது இன்க்ரெடின் விளைவுக்கு பொறுப்பாகும் குடல் குளுக்கோஸ் சப்ளையுடன் இன்சுலின் சுரப்பையும் அதிகரித்து இரண்டையும் சமநிலையில் வைத்திருக்கின்றது.

GLP-1 குடலின் நியூரோஎண்டோகிரைன் எல் செல்களால் ஒருங்கிணைக்கப்படுகின்றது மற்றும் உட்செலுத்தலின் போது இரத்த ஓட்டத்தில் வெளியிடப்படுகின்றது. அங்கு அது மிகக் குறுகிய அரை-வாழ்க்கை மட்டுமே கொண்டுள்ளது இது சில நிமிடங்களில் டிபெப்டிடைல் பெப்டிடேஸ் 4 (DPP 4) மூலம் உடைக்கப்படுகின்றது. இதன் நிமித்தம் கணையம்  இன்சுலின் சுரப்பு தடைப்படுகின்றது. ( 4 (DPP 4)  தடுப்பான் மாத்திரைகள் கணையம் நீண்ட நேரம் இன்சுலினை வெளியிடுவதை உறுதி செய்கின்றது.

மேலும் வாசிக்க இதில் கிளிக் செய்யவும்

http://mahesva.blogspot.com/2020/09/dpp-4-inhibitors-diabetes-type-2.html

 GLP-1 குளுகோகன்; பெப்டைட் ஹார்மோன்.

மூளை

-சினாப்டிக் டிரான்ஸ்மிஷன்.

-நரம்பு பாதுகாப்பு.

-கற்றல் குறைபாடுகள்/நினைவு.

-நரம்பு ஸ்டெம் செல்களின் பெருக்கம்.

-நினைவாற்றல் குறைபாடு↓

-நரம்பு அழற்சி.

-மோட்டார் செயல்பாடு.

-திருப்தியின் சமிக்ஞை நிலை.

 

கல்லீரல்

-கல்லீரல் குளுக்கோஸ் உற்பத்தி.

-கல்லீரல் கொழுப்பு சத்து.

-பிளாஸ்மா கல்லீரல் நொதி நிலை⇓

-கல்லீரல் ஸ்டீடோசிஸ்↓

 

கணையம்

-இன்சுலின் தொகுப்பு.

-இன்சுலின் சுரப்பு.

-இரத்த குளுக்கோஸ்.

-பீட்டா ẞ செல் பாதுகாப்பு↑ பீட்டா ẞ செல் பெருக்கம்.

-பீட்டா செல் செயலிழப்பு.( வகை 2 நீரிழிவு)

 

இதயம்

-கார்டியோவாஸ்குலர் பாதுகாப்பு →இதய துடிப்பு.

-எதிர்ப்பு அழற்சி நடவடிக்கை மாரடைப்பு இஸ்கெமியா காயம்.

-எண்டோடெலியல் செயலிழப்பு.

-இரத்தக் கொழுப்பு.

-ஏட்ரியல் நேட்ரியூரிடிக் பெப்டைட் சுரப்பு.

 

செரிமான அமைப்பு

-இரைப்பை காலியாக்குதல்.

-இரைப்பை, சிறு/பெரும் குடல் அடைப்பு நீக்குதல்.

 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக