ஞாயிறு, 12 ஜூன், 2022

Pancreatic cancer

கணைய புற்றுநோய்: கணைய புற்றுநோய் எதனால் வருகின்றது. கணைய புற்றுநோயின் வளர்ச்சிக்கான காரணங்கள், மிக முக்கியமான காரணம் சர்க்கரை நோய் வகை-2: (மிகைப்படைந்த இன்சுலின் சுரப்பால் கணையம் சிதைந்து போகின்றது) முறையான கவனிப்பு, மருத்துவம் இல்லாதது மற்றும் தவறான மருத்துவம்/சுயமருத்துவம் சர்க்கரை நோயாளிகளின் கணையம் காலப்போக்கில் சிதைந்து புற்றுநோயாக பரிணாமிக்கின்றது.

சர்க்கரை நோயாளிகள் கவனத்தில் கொள்ளவேண்டும் ஆரம்பத்திலிருந்தே சர்க்கரை நோய்க்கு முறையாக மருத்துவம் எடுத்துக்கொள்ளுங்கள். கணையம் இன்சுலினை மட்டுமின்றி மிக முக்கியமான செரிமான நொதியங்களையும் சுரக்கின்றது. பின்னால் நீங்கள் சாப்பிட்ட சாப்பாடு கூட ஜீரணமாகாமல் அவதிப்படும் ஒரு சூழல் ஏற்படும்.

சர்க்கரை நோய்க்காக எடுக்கப்படும் மருந்து மாத்திரைகள் கூட செயல்படாமல் போகும் அளவிற்கு மூன்றில் இரண்டு பேர்கள் இந்த கணைய புற்றுநோயினால் அவதிப்படுகின்றார்கள். பாதிக்கப்பட்ட 100 பேரில் 95 பேருக்கு கணையத்தின் எக்ஸோகிரைன் பகுதியில் கணைய புற்றுநோய் உருவாகியிருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது. ஜெர்மன் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் கணைய புற்றுநோய், நிபுணர்களால் கணைய புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகின்றது, இது கணையத்தின் வீரியம் மிக்க கட்டியாகும்.

இதற்கு தீர்வாக கணைய மாற்று அறுவைசிகிச்சை கூட தேவைப்படும். அதற்கான செலவுகள் வேதனைகள் மிகப்பெரியது.

மேலும் அதிக எடை, அதிகப்படியான மது அருந்துதல். சிகரெட் புகைத்தல், மற்றும் பட்டினி, பெரும்தீனி உடல் உழைப்பு இல்லாதது, அதிகளவு பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளின் நுகர்வு, கணையத்தின் நாள்பட்ட கணைய அழற்சி மற்றும் பரம்பரை காரணிகள்.

பரம்பரை, மரபணு காரணிகள் குடும்பத்தில் யாருக்காவது மார்பக அல்லது கருப்பை புற்றுநோய் இருந்தால் மற்றும் குறைந்தது இரண்டு முதல்-நிலை அதாவது நெருக்கமான இரத்த உறவினர்களுக்கு கணைய புற்றுநோய், குடல்/இரைப்பைக் குழாயில் உள்ள பாலிப்கள் நோய்க்குறிகள் இருந்தால் அது தொடர்ந்து வரும் சந்ததியையும் பாதிக்கும்.

பாலிப்கள் நோய்க்குறிகள் என்பது: இரைப்பை குடலில் வயிற்றில் தோன்றும் பவள மொட்டுக்கள் வடிவிலான கட்டிகள் (பாலிப்கள்) பெரும்பாலும் அறிகுறியற்றவை. இருப்பதற்கான இதனுடைய முழுமை உணர்வு பசியின்மை, மலச்சிக்கல் மற்றும் மேல் வயிற்றில் அழுத்தம் வலி ஆகியவை அடங்கும். வயிற்றில் இரத்தப்போக்கு மற்றும் அதன் விளைவாக கருப்பு மலம் மற்றும் இரத்த வாந்தி போன்ற அறிகுறிகள் அரிதானவையாக தோன்றும். சர்க்கரை நோயாளிகளுக்கு இது போன்ற பாலிப்பன்கள் அடிக்கடி தோன்றி மறையும்.

நாளமில்லா மற்றும் எக்ஸோகிரைன் கணைய செயல்பாடுகள்: கணையம் இரண்டு முக்கியமான செயல்பாடுகளை செய்கின்றது: நாளமில்லா கணையத்தின் செயல்பாடு: இன்சுலின் மற்றும் குளுகோகன் உருவாவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துதல்.

எக்ஸோகிரைன் கணையத்தின் செயல்பாடு: செரிமான நொதிகளின் உருவாக்கம் மற்றும் வழங்கல் இதன் நிமித்தம் நீங்கள் உட்கொண்ட உணவைப் பயன்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை இந்த நொதியங்கள் வழங்குகின்றது. சர்க்கரை, கொழுப்பு ஊட்டச்சத்துக்கள் உடைக்கப்பட்டு, வளர்சிதை மாற்ற செயல்பாடுகளுக்கு உதவுகின்றது. கணையம் சிதைந்து போனால் இதெல்லாம் நடைபெறாமல் போகும்.

மரபணு சிதைவுகள்: இன்றைய எங்களுடைய வாழ்வியலில் நிறைய காரணிகள் செறிந்து புதைந்து கிடக்கின்றது, அதில் பெரும்காரணியாக மாசுபட்ட சுற்றுச்சூழல், கதிர்வீச்சு. நச்சு உணவுகள் மற்றும் வைரஸ் பரவல்(வைரஸ்கள் மரபணுக்களை அறுத்துவிடும் செயல்களை செய்கின்றன)

புரதங்கள்(புரோட்டீன்) இந்த உலகத்து அத்துனை ஜீவராசிகளும் 20 அமினோ அமிலங்களை கொண்டுதான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது இதனுடைய இணைப்பு புரதங்களாக தொகுக்கப்படுகின்றது.

இந்த புரதம்(புரோட்டீன்) அமினோ அமிலத்தின் ஒரு மடிப்பு வடிவமைப்பு இது இடம் சார்ந்து மாறுபடுகின்றது. இதை கட்டமைக்க மரபணுக்களை உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் பயன்படுத்துகின்றன.

இரண்டு அமினோ அமிலங்கள் ஒன்றிணைந்து டிபெப்டைடை உருவாக்குகின்றன. இது புரதத்தின் அடிப்படை கட்டுமானம். ஒரு அமினோ அமிலத்தின் OH குழு மற்ற அமினோ அமிலத்தின் NH₂ குழுவுடன் வினை புரிகின்றபோது. H₂O (நீர்) பிரிக்கப்பட்டு, ஒரு டிபெப்டைட் உருவாகின்றது. டிபெப்டைட் மற்றும் திரிபெப்டைடுகள், ஒலிகோபெப்டைட்களைப் பற்றி பேசுகின்றபோது

3-10அமினோ அமிலங்கள் இணைக்கப்பட்டிருந்தால், அது ஒலிகோபெப்டைட்கள் என்று அழைக்கப்படுகின்றது. 10–100 அமினோ அமிலங்களுடன் கூடிய சேர்மங்கள் பெரும்பாலும் பாலிபெப்டைடுகள் என்று அழைக்கப்படுகின்றன, 100 அமினோ அமிலங்கள் அல்லது அதற்கு மேற்பட்டவை பொதுவாக புரதங்கள் என குறிப்பிடப்படுகின்றன இருப்பினும், புரதங்களின் ஒரு பொதுவான பண்பு அவற்றின் வரையறுக்கப்பட்ட இடஞ்சார்ந்த கட்டமைப்பாகும்.

புரதங்கள்: அமினோ அமிலங்களின் மூலக்கூறு சங்கிலிகள் ஆகும். அமினோ அமிலங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒத்திசைவு புரதங்கள் மாறுபடுகின்றது,

- ஒரு பெப்டைட் (இரு, அமினோ அமிலம்), ஒரு பெப்டைட், புரதத்தின் அடித்தளம். - ஒலிகோபப்டைடு (10 வரை உள்ள அமினோ அமிலம்), - பொலிபீப்டைட் (10 அமினோ அமிலங்களுக்கு பிறகு )- புரதம் (50 அமினோ அமிலங்களுக்கு பிறகு ) புரோட்டீன் ஆகும். |: இன்சுலின் 51 அமினோ அமிலங்கள் நீளம் கொண்டது ஆகவே, இது ஒரு புரதம் ஆகும். (அறியப்பட்ட புரதங்களின் பெரும்பகுதி 50 முதல் 1000 அமினோ அமில சங்கிலி இணைப்பை கொண்டது)

மனித இன்சுலின் 51 அமினோ அமிலத்தின் ஒரு மடிப்பு வடிவமைப்பு, இதுவொரு புரதம் இருப்பினும், இன்சுலின் இரண்டு பெப்டைட் ஹார்மோனாக உடைக்கப்படுகின்றது. ஒன்று உடல் திசுக்களின் பயன்பாட்டிற்கும் மற்றது பயன்பாடற்று வெளியேறிகின்றது.

மாசுபடிந்த உலகத்தின் நச்சுக்கள், போதை, மது மற்றும் கலப்பட உணவுகளின் விஷங்கள், மருந்து மாத்திரைகளின் நச்சுக்களின் தேக்கங்கள், இன்சுலின், சி பெப்டைட் உடைக்கப்பட்டு வெளியேறுகின்றதை தடுத்து விடுகின்றது இதன் நிமித்தம் இன்சுலின் திசுக்களில் செயல்படுத்துதலில் தடைகள் தாமதங்கள் ஏற்பட காரணியாகின்றது,

நச்சுக்கள் நரம்பு மண்டலத்தை மட்டுமல்லாமல் உள்ளுறுப்புகளையும் சேர்ந்து சேதப்படுத்தும் ஆபத்தான பெப்டைட் இணைப்பை கொண்டது.

இந்த கட்டமைப்பை கட்டுவதற்கு மரபணு என்ற கோட், ஒரு குறியாக்கம் தேவைப்படுகின்றது. இது செல் கருவுக்குள்ளே இருக்கின்றது. இதை மாசுபட்ட சுற்றுச்சூழல், கதிர்வீச்சு. நச்சு உணவுகள் மற்றும் வைரஸ் பரவல்கள் சிதைக்கின்றன. தவறாக கட்டமைக்கப்பட்ட புரதங்கள் புற்றுநோய் கட்டிகளாக உருவாகின்றது.

சில இடம் சார்ந்த நிலைகளில் நோய் எதிர்ப்பு சக்தி கூட இதை அந்நிய ஊடுருவலாக நினைத்து எதிர்க்கின்றது இது கணைய அழற்சிக்கு வழிவகை செய்கின்றது. சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த மருத்துவம் குறைவுபடும் இன்சுலினை எடுத்துக்கொள்வதுதான் இது அதிர்ந்துபோன கணையத்தை ஆறுதல்படுத்தும். நன்றி.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக