ஞாயிறு, 19 ஜூன், 2022

Keaton fasting (diet)

கீட்டோன் உடல்கள். ஒரு வாகனத்தை ஓட்டுவதற்கு பெட்ரோல் டீசலை மட்டுமே நம்பியிராமல் எரிவாயு, மின்சாரம் போன்ற பிற கூறுகளை கொண்டும் இயக்கமுடியும். இதே போல் மனித உடலை இயக்குவதற்கு சர்க்கரையை மட்டும் நம்பியிராமல், இன்னுமொரு ஆற்றல் சக்தியை உடல்/மூளை பயன்படுத்துகின்றது. இந்த ஆற்றல் சக்தியைதான் மகரிஷிகளும் சித்தர்களும் பயன்படுத்தி அரிய பல சித்த மருத்துவ நூல்கள், இதிகாசங்கள், காப்பியங்களை படைத்தார்கள்.

கார்போஹைட்ரேட்டுகள்(சர்க்கரை) கொழுப்பு அல்லது புரதத்தைப் பற்றி பேசவில்லை, மற்றொரு ஆற்றல் மூலத்தைப் பற்றி பேசுகின்றேன். அவை கீட்டோன்கள் அல்லது கீட்டோன் உடல்கள் என்று அழைக்கப்படுகின்றன. மனித உடலைப் பொறுத்தவரை, கீட்டோன்கள் ஒன்றும் புதிதல்ல. அதை நாங்கள் அறிந்து கொண்டதில்தான் கால தாமதமே தவிர அது மனிதன் தோன்றின காலத்திலிருந்தே பயன்பாட்டில் இருந்து கொண்டேதான் இருக்கின்றது மூளை அதை பயன்படுத்த தவறியதே இல்லை.

கீட்டோன் என்பது எரிசக்தியின் இன்னுமொரு சேமிப்பு வடிவம். நமது இதயம் மற்றும் மூளை செல்கள் கீட்டோன்களை ஒரு பகுதி எரிபொருளாகப் பயன்படுத்துகின்றன. மூளை செல்கள் இரத்த குளுக்கோஸை (இரத்த சர்க்கரையை) விட கீட்டோன்களைப் பயன்படுத்த அதிகமாக விரும்புகின்றன.

இதனால் உடல் திசுக்கள் சர்க்கரையை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு கொழுப்பை மட்டுமே எரிசக்தியாக பயன்படுத்திகின்றது.

நீங்கள் ஒரு நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் இருந்தால் அல்லது பசியாக இருந்தால், கீட்டோன் உற்பத்தி அதிகரிக்கும் மற்றும் தசை செல்கள் நரம்பு செல்கள், மூளை செல்கள் மற்றும் பிற உயிரணுக்களும் அவற்றை ஆற்றல் மூலங்களாகப் பயன்படுத்துகின்றது.

சாராம்சம்: சேமித்த கொழுப்பை விரதமிருந்து ஆற்றல் சக்தியாக மாற்றுவது, தவம் இருத்தல், உண்ணாமல் உடல் அசைவின்றி ஓரிடத்தில் உட்கார்ந்திருந்து கீட்டோன் சக்தி முழுவதையும் மூளையை பயன்படுத்த அனுமதித்தல். இதன் நிமித்தம் மூளை அபார ஆற்றலை பெறுகின்றது.

கீட்டோன் உற்பத்தி அதிகரிக்கும் போது உடல் அற்புத ஆற்றலை பெறுகின்றது, உடலில் பழுதுபட்ட திசுக்களின் திருத்த வேலைகள் முடுக்கிவிடப்படுகின்றது, தீராத நோய்கள் என்று நிலுவையில் போடப்பட்ட நோய் கூட மூளையினால் தூசி தட்டி புரட்டிப்பார்க்கப்படுகின்றது. உடல்/கணையம் ஏன் இப்படி தாறுமாறாக நடந்து கொள்கின்றது என்ற கேள்வியை முன் வைக்கின்றது.

கீட்டோன்-பத்தியம்(டயட்) சமீபத்தில் பிரபலமடைந்திருக்கலாம் கீட்டோன் மருத்துவம் 1921 ஆண்டு முதல் பயன்பாட்டிலுள்ளது. இது கால்-கை வலிப்பு உள்ளவர்களுக்கு ஒரு சிகிச்சையாகத் தொடங்கியது மற்றும் உண்ணாவிரதத்திற்கு ஆரோக்கியமான மாற்றீட்டை வழங்கும் நோக்கம் கொண்டது.

இன்று நமக்குத் தெரிந்த கீட்டோ டயட் உருவாக்கப்பட்டது அமெரிக்க உட்சுரப்பியல் மருத்துவ நிபுணர். “ரோலின் வுட்யாட்” அவர் இந்த துறையில் அவர் செய்த பங்களிப்பு, நோயாளிகள் அதிக கொழுப்பு, குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்ளும்போது, ​​கீட்டோன் உடல்கள் கல்லீரலால் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை கண்டுபிடித்தார்.

கீட்டோசிஸ் என்பது ஒரு இயற்கையான செயல்முறையாகும், இது உடலில் போதுமான கார்போஹைட்ரேட்டுகள் இல்லாதபோது ஆற்றலாக மாற்றப்படுகின்றது. இது நிகழும்போது, ​​​​உடல் ஆற்றலுக்காக கொழுப்புகளை எரிக்கத் தொடங்குகின்றது.

கொழுப்பை எரிக்கும்போது, ​​​​உடல் கீட்டோன் உடல்கள் எனப்படும் வளர்சிதை மாற்ற கலவைகளை உருவாக்குகின்றது, பின்னர் அவை ஆற்றலுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. கீட்டோன் உடல்கள் அசிட்டோஅசிடேட், அசிட்டோன் மற்றும்

3-ஹைட்ராக்ஸிபியூட்ரேட். இவை கல்லீரலில் உற்பத்தியாகி மூளைக்கு ஆற்றலை அளிக்கின்றன. எனவே உங்கள் உடல் கொழுப்பை ஆற்றலுக்காக திறம்பட எரிக்க உதவுவதே கெட்டோசிஸின் முக்கிய அம்சமாகும்., அதிகப்படியான கீட்டோன்கள் உடலை நச்சுத்தன்மையடையச் செய்யலாம். இது கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

கீட்டோசிஸின் வெளிப்பாட்டின் அறிகுறிகள்: வாய் துர்நாற்றம், பசியின்மை, கீட்டோன்கள் ஆற்றலுக்காக உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதால், சர்க்கரை உணவுகள் அல்லது உண்ணும் உணவுகள் மீது அதிக ஆசை நாட்டம் இருக்காது மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகள் கூட ஏற்படலாம். இதனால்த்தான் விரதம் இருப்பவரின் வாய் துர்நாற்றம் வீசுகின்றது.

70-90 விழுக்காடுகள் கொழுப்பு உணவுகள் 10 விழுக்காடுகள் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் 20 புரத உணவுகள் எடுக்கப்படுகின்றது. கீட்டோன்-பத்தியம்(டயட்) இருக்கும் போது முதல் வாரத்தில் விரைவான எடை இழப்பு ஏற்படலாம். அதிக கொழுப்பு, குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்ளுவதினால், விற்றமின்கள் குறைபாட்டினையும் சரிபார்க்க வேண்டும்.

நீங்கள் கீட்டோசிஸில் உள்ளீர்களா என்பதைப் பற்றிய துல்லியத்தை நீங்கள் அறிய விரும்பினால், உங்கள் உடலில் உள்ள கீட்டோன்களை உங்கள் சிறுநீர், சுவாசம் அல்லது இரத்தத்தில் கண்டறிவதன் மூலம் அவற்றை அளவிடலாம். அதற்காக மருந்தகங்களில் சிறுநீர் கீற்றுகள் மற்றும் கீட்டோன் மீட்டர் கிடைக்கின்றது.

சாராம்சம்: குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரத உணவுகள், அதிகப்படியான எண்ணை கொழுப்பு உணவுகள் கீட்டோன்-பத்தியம்(டயட்) எவ்வளவு தூரம் சாத்தியப்படும். இயற்கையான கீட்டோன் சுழற்சி ஆரோக்கியமாக உகணப்படுகின்றது.

அதை செயற்கையாக திணிக்கும் போது ஆபத்தான காரணியாக மாறக்கூடும் கீட்டோன்-பத்தியம் ஒரு குறுகியகால தெரப்பியாக எடுத்துக்கொள்ளலாமே தவிர, அதை நீண்டதாக எடுத்துச்செல்லக்கூடாது. திருவிழாக்காலங்களில் தேங்காய் உடைத்தால் எடுத்து சாப்பிடுங்கள் அதுதான் கீட்டோன்-பத்தியம்.

கெட்டோசிஸ் என்றால் என்ன?: கெட்டோசிஸ் என்பது ஒரு வளர்சிதை மாற்ற நிலையாகும், இது ஆரோக்கியமான கொழுப்புகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு உணவைப் பின்பற்றும்போது ஏற்படும். இந்த சிறப்பு வகை ஊட்டச்சத்து கீட்டோஜெனிக் உணவு என்று அழைக்கப்படுகின்றது. இதன் மூலம், கார்போஹைட்ரேட்டுகள் உங்கள் உணவில் இருந்து முற்றிலும் மறைந்துவிடும்.

கார்போஹைட்ரேட்டுகள் இல்லாவிட்டால், உங்கள் உடல் உங்கள் ஆற்றல் வளர்சிதை மாற்றத்தை கெட்டோசிஸ் என அழைக்கப்படும் நிலைக்கு மாற்றுகின்றது மற்றும் அதன் சக்தியை கிட்டத்தட்ட கொழுப்பிலிருந்து பெறுகின்றது. கெட்டோசிஸ் பட்டினி வளர்சிதை மாற்றம் என்றும் அழைக்கப்படுகின்றது,

ஏனெனில் உடல் கெட்டோஜெனிக் வளர்சிதை மாற்றத்திற்கு மாறுகின்றது, எடுத்துக்காட்டாக உண்ணாவிரதம் இருக்கும்போது. கெட்டோசிஸ் உடலில் உள்ள உங்கள் கொழுப்புத் தேக்கங்களைத் தாக்குவது மட்டுமல்லாமல், உங்கள் மன ஆற்றலையும் மேம்படுத்துகின்றது.

கீட்டோன் உடல்கள் எப்படி உருவாகின்றது. வழக்கமான உணவுப் பழக்கம்: அதிக கார்போஹைட்ரேட்டுகள்பாண்/ரொட்டி, சோறு காய்கறி, பழங்கள் சர்க்கரை உயர்வு --> கணையம் இன்சுலின் சுரப்பு --> திசுக்கள் குளுக்கோசு+ இன்சுலின் பயன்பாடு --> ஆற்றல் வெளிப்பாடு.

கீட்டோன்  உணவு: அதிக கொழுப்பு உணவுகள். ( அதிகமாக பசு நெய், தேங்காய், கடலை, ஒலீவ் நல்லெண்ணை உணவில் சேர்ப்பது)எண்ணெய்/கொழுப்புகள் —-> லிபேஸ் நொதியம் —— > கொழுப்பு (ட்ரைகிளிசரைடுகள்உடைக்கப்பட்டு —-> கொழுப்பு அமிலங்கள் கல்லீரல் நுழைவு  -->  கல்லீரல் கீட்டோன்களை உற்பத்திசெய்கின்றது  --> ஆற்றல் வெளிப்பாடு.

செரிமான அமைப்பு -என்சைம் அமிலேஸ், லிபேஸ், புரோட்டீஸ் நாளமில்லா சுரப்பி- ஹார்மோன் இன்சுலின், குளுகோகன், சோமாடோஸ்டேடின்,கணைய ஹார்மோன்

லிபேஸ்(LIP) என்பது: கணையத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒரு செரிமான நொதியம் ஆகும். கொழுப்புகளை (ட்ரைகிளிசரைடுகள்) ஜீரணிக்க உடலுக்கு இது தேவைப்படுகின்றது. கணையம் 20 க்கும் மேற்பட்ட செரிமான நொதியங்களை சுரக்கின்றது கணைய பாதிப்பு இந்த நொதியங்கள் குறைவுபடும்.

கார்போஹைட்ரேட்டுகள் ——> அமிலேஸ் நொதியம் ——> சுக்ரேஸ்-ஐசோமால்டேஸ் மால்டேஸ், லாக்டேஸ், —-> சர்க்கரைகள்(குளுக்கோசு) உடைக்கப்படுகின்றது.

புரதங்கள் —- > பெப்சின், டிரிப்சின் பெப்டிடேஸ் நொதியங்கள் ——> அமினோ அமிலங்கள்.  எண்ணெய்/கொழுப்புகள் —-> லிபேஸ் நொதியம் —— > கொழுப்பு அமிலங்கள்.

நன்மைகள்: சிறந்த சக்தி விநியோகம். ஒட்சிசன் ஏற்ற அழுத்தத்தைக் குறைத்தல். மூளைக்கு மிகச் சிறந்த ATP சப்ளை. சேமித்த கொழுப்பை எரிப்பதை அதிகரிக்கின்றது சர்க்கரை மற்றும் இன்சுலின் ஏற்ற இறக்கங்கள் இதில் இல்லை..

கார்போஹைதரேட் தடுப்பான் மாத்திரைகள். கார்போஹைதரேட்  தடுப்பான் மாத்திரைகள் ஆபத்தானதா? அதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கொழுப்பு தடுப்பான்கள் மற்றும் கார்போஹைட்ரேட் தடுப்பான்கள் குறைவான பக்க விளைவுகள், அபாயங்களை கொண்டவை இருப்பினும், செரிமான கோளாறு, வயிற்றுப் பிடிப்புகள், வயிற்றுப்போக்கு, வாயு, மலச்சிக்கல் அல்லது உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

கார்போஹைதரேட் தடுப்பான்கள் எவ்வாறு வேலை செய்கின்றனஉடல் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதற்கு, முதலில் அவற்றை அவற்றின் சிறிய கட்டுமானத் தொகுதிகளாக உடைக்க வேண்டும். இங்குதான்  கார்போஹைட்ரேட் தடுப்பான் மாத்திரைகள் வருகின்றது. இது கார்போஹைட்ரேட்டுகளை உடைப்பதற்கு காரணமான கணைய என்சைம் /நொதியைத் தடுக்கின்றது. இந்த வழியில் கார்போஹைட்ரேட்டுகளின் உறிஞ்சுதலைக் குறைக்கின்றது உங்கள் உடல் கார்போஹைட்ரேட்டுகளைப் (சர்க்கரையை பயன்படுத்த முடியாதவாறு செய்கின்றது.

அழற்சி  குடல் உறிஞ்சிகள்: புற்றுநோய், செலியாக், எரிச்சல் குடல் மற்றும் அல்சர் போன்ற மற்றய குடல்நோய்கள் இயல்பான உறிஞ்சுதலைக் குறைக்கின்றது. அல்லது தாறுமாறாக வேலை செய்கின்றது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக