வெள்ளி, 17 ஜூன், 2022

Enzyme-Q10: Ubichinon-10 (C59H90O4)

என்சைம்-Q10: விலங்கு உணவுகளில் அதிக அளவில் இந்த என்சையும் காணப்படுகின்றது, குறிப்பாக இறைச்சி, மீன், கோழி, கல்லீரல் கறி, முட்டை மற்றும் வெண்ணெய். சோயா, ராப்சீட் மற்றும் ஓலிவ், எள், நல்லெண்ணை, பருப்பு வகைகள், விதைகள், நட்ஸ் போன்ற சமையல் எண்ணெய்களைத் தவிர, தாவர அடிப்படையிலான உணவுகளில் குறைவான அளவிலேயே காணப்படுகின்றது.

இதயத்திற்கு அவசியமான ஒரு என்சைம் என்ற காரணத்தினால் விலங்கு மாடு ஆட்டிறைச்சி இதயத்தில் பெருமளவில் உகணப்படுகின்றது.

என்சைம் Q10 உடலில் ஆற்றல் உற்பத்திக்கு தேவைப்படுகின்றது. இது ஒரு முக்கியமான (ஆன்டி-ஒக்ஸிடன்ட்) ஒட்சிசன் ஏற்ற தடுப்பு ஆற்றல் உள்ளது என்று அறியப்படுகின்றது. இதன் பொருள் உடலின் சொந்த செல்கள் அந்நிய ஊடுருவல்களின் எதிர்மறையான தாக்கங்களிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. இதன் நிமித்தம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த முடியும்.

தொற்றுநோய்கள், குறிப்பாக கொரோனா பண்டமி காலத்தில் என்சைம்-Q10 இன் தேவை அதிகரிக்கின்றது. லிபோபிலிக் ஒட்சிசன் ஏற்ற தடுப்பு ஆற்றல் உடலின் சொந்த செல்களை எதிர்மறை தாக்கங்களிலிருந்து பாதுகாக்கின்றது. இந்த பணி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றது.

வெள்ளை இரத்த அணுக்களில் அங்கம் வகிக்கும் (லுகோசைட்டுகள்) கிரானுலோசைட்டுகளின் பெருக்கம் மற்றும் விழுங்கி செல்கள் மேக்ரோபேஜ்களின் பாகோசைடிக் செயல்பாட்டை அதிகரிக்க செய்கின்றது.

மேலும் உணவு ஆற்றலை ATP வடிவில் செல்லுலார் ஆற்றலாக மாற்றுவதில் (Ubiquinone/ubiquinol ) Q10 இன் ஒட்சிசனேற்றப்பட்ட வடிவம்/Q10 இன் முழுமையாக ஒட்சிசன் குறைக்கப்பட்ட வடிவம் இன்றியமையாத பங்கு வகிக்கின்றது. இந்த செயல்பாட்டில் இது மைட்டோகாண்ட்ரியல் (இழைமணி) என்சைம் வளாகத்தின் இன்றியமையாத பகுதியாகும். என்சைம் Q10, பழுதுபட்ட இழைமணிகளை மீள் கட்டமைப்பு செய்வதில் பெரும்பங்காற்றுகின்றது.

என்சைம்-Q10: Ubichinon-10 (C59H90O4) 1955 இல் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் இது கொழுப்பில் கரையக்கூடிய, என்சைம். இது நம் உடலாலும் உற்பத்தி செய்யப்படலாம்  இருப்பினும் பெரும்பகுதி உணவின் மூலமாகவும் உட்கொள்ளப்படுகின்றது. இது ubiquinone குடும்பத்தைச் சேர்ந்த ஒரு படிக, மணமற்ற சுவையற்ற பொருளாகும்.

Q10 அனைத்து உடல் செல்களிலும், குறிப்பாக மைட்டோகாண்ட்ரியாவில் காணப்படுகின்றது. இவற்றில் முக்கிய ஆற்றல் உணவில் இருந்து உருவாகின்றதுஇதயம், மூளை, தசைகள், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் போன்ற அதிக ஆற்றல் தேவைப்படும் உறுப்புகளில்  Q10 இன் அதிக செறிவைக் கொண்டுள்ளது.

குறிப்பாக, Q10 செல் சவ்வுகளில்  அதிக அளவில் உள்ளது, இது செல்கள் மற்றும் உயிரணு உறுப்புகளின் உட்புறத்தை மூடுவதற்கு ஒரு மறைப்பாக செயல்படுகின்றது. சோடியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் அயனிகள் மற்றும் தகவல் பரிமாற்றம் கட்டுப்படுத்தப்படுகின்றது. சமமான மதிப்புமிக்க ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களுடன் கூடுதலாக, Q10 பெரும்பாலும் சவ்வுகளின் தரத்தை தீர்மானிக்கின்றது.

இதனுடைய குறைபாடு மோசமான சர்க்கரை நோய் புண்கள் காயங்களை குணப்படுத்துவதில் கடினம் மேலும் உடல் மன சோர்வு, தூக்கமின்மை.

தலைவலி, தசை பலவீனம் இதய படபடப்பு கோளாறுகளுக்கு ஒரு வகையில் காரணியாகின்றது. இந்த என்சைம்-Q10 மாத்திரை வடிவிலும் கிடைக்கின்றது. என்சைம்-Q10: Ubichinon-10(C₅₉H₉₀O₄)

மாட்டிறைச்சி இதயம், ஆடு, பன்றி இறைச்சி இதய கறி, சால்மன் மீன் சோயாபீன், சூரியகாந்தி, எள், ஆலிவ், ராப்சீட் எண்ணெய் ஆடு, மாட்டிறைச்சி கல்லீரல், சோயா, பிஸ்தா, வேர்க்கடலை, பட்டாணி, ப்ரோக்கோலி, கோழி இறைச்சி முட்டையில் காணப்படுகின்றது.

ஒரு விலங்கு உயிரணுவின், உயிரணு உறுப்புக்கள்.

இழைமணி (மைட்டோகாண்ட்ரியல்.) உடலின் மின் உற்பத்தி நிலையமாக செயல்படுகின்றது.

கோல்கி உடல்: இதன் முக்கிய செயல்பாடுகளில் ஒன்று எண்டோபிளாஸ்மிக் ரெட்டிகுலத்தில் இருந்து புரதங்களைப் பெற்று மறுவடிவமைக்க பயன்படுகின்றது.

ரைபோசோம்: எண்டோபிளாஸ்மிக் ரெட்டிகுலம் என்று அழைக்கப்படுகின்றது. இதனுடைய பணி மொழிபெயர்ப்பு, அதாவது புரதங்களின் தொகுப்புக்கான mRNA இன் வாசிப்பு, இது புரத உயிரியக்கத்தின் கட்டமைப்பிற்குள் நடைபெறுகின்றது.

லைசோசோம்: இதனுடைய பணி, செல்லின் உள்ளேயும் வெளியேயும் ஊட்ட சத்து/சர்க்கரை போக்குவரத்து பணி (டிரான்ஸ்போர்ட்)

செல்சவ்வு:  ஒரு கலத்தின் அடிப்படை கட்டமைப்பை  மற்றும் கலத்தை முழுமையாக நிரப்புவதன் மூலம் அதன் வடிவத்தை அதற்கு அளிக்கின்றது.(ஒரு வேலி)

செல்கரு: உயிரணுப் பிரிவு மற்றும் குரோமோசோம்களின் வடிவத்தில் மரபணு தகவல்களை (டிஎன்ஏ) சேமிப்பது போன்ற முக்கியமான வளர்சிதை மாற்ற செயல்முறைகளின் கட்டுப்பாட்டு மையம். (மரபணு சேமிப்பு கிடங்கு)

பரப்பிரம்மம் ஒரு உயிரணுவின், உயிரணு உறுப்புக்களுக்கே  இவ்வளவு பணிப்புக்களை  வைத்து   படைத்திருக்கின்றது. எங்களது உடலுக்குள்ளே எவ்வளவு பணியாளர்கள் ஓய்வின்றி இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.அவருடைய கை எழுத்து பிரதியை எல்லா இடத்திலும் காணமுடிகின்றது

- செலினியம் - Se - 34 செலினியம் சுவடு கூறுகள், பூமியில் மிகவும் அரிதாக கிடைக்கக் கூடிய தனிமங்களில் ஒன்று. இது மண்ணில்  கந்தகம், செப்பு, ஈயம் மற்றும்   சில தனிமங்களுடன் இணைந்து காணப்படுகின்றது. இது எல்லா நாட்டு விவசாய மண்ணிலும் இருக்கும் என்று சொல்லமுடியாது எடுத்துக்காட்டாக ஐரோப்ப மண்ணில் மிகவும் அரிதானது மேலும் அளவுக்கு அதிகமாக சாகுபடி செய்த விவசாய நிலங்களிலும்  செலினியம் ஒரு துளி கூட இருக்காது. இந்த  செலினியம் சுவடு கூறுகளை ஒரு சில தாவரங்கள் மட்டும் தான் தேக்கி வைத்திருந்து மனிதனுக்கு வழங்குகின்றது.

குறிப்பாக மழைக்காடுகள் மற்றும் ஆசியா தாவரங்கள் சாகுபடி பயிர்கள் தேங்காய் எண்ணைய், எள்ளெண்ணைய்சூரிய காந்தி எண்ணைய், பாரா நட்டு ( பிரேசில் கொட்டைகள்)  தவிடு, பாதாம் பருப்பு, தலாம் விதைகள்  மற்றும் கடல் உணவுகளில் அதிகளவில்  காணப்படுகின்றது.

செலினியம் சுவடு கூறுகள் கூர்மையான கண் பார்வைக்கு மட்டுமில்லாமல் புற்றுநோய் தடுப்பு, தங்கு தடையின்றிய ஹார்மோன் உற்பத்தியிலும் பங்காற்றுகின்றது, குறிப்பாக மகிழ்ச்சி ஹார்மோன் செரோடோனின், இன்சுலின் இன்னுமொரு படி மேலாக தைராய்டு ஹார்மோன் (T 3, T4)

சிவப்பு இரத்தம் (எரித்ரோசைடுகள்) மிக முக்கியமான கட்டுமான பொருளாக  செலினியம்  இருக்கின்றது. மேலும் செலினியம் அன்ரி ஒக்சிடண்ட்கள் ( ஒட்சிசன் எதிர்ப்பு  பொருள்) உடலில் ஊடுருவிய தேவையில்லாத  ஈயம், பாதரசம் மற்றும் அலுமினியம் போன்ற நச்சு உலோகங்களை  வெளியேற்றி, உடல் செல் பாதுகாப்பு அரணாகவும் விளங்குகின்றது. 

செலினியம் சுவடு கூறுகள் கண்கள் விழித்திரை, இதயம், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலில்  சேமிக்கப்படுகின்றது. நாள் ஒன்றுக்கு 100 மைக்ரோ மில்லிக்கிராம் போதுமானது. அளவுக்கு அதிகமானால் செலினியம்  கூட ஒரு நச்சு. 

கனிமங்கள் மற்றும் தாது-உப்புக்கள்  

வைட்டமீனும், குடல் வாழ் நல்ல-பாக்டீரியாக்களும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக