கொரோனா தடுப்பூசிக்குப் பிறகு பக்க விளைவுகள் மற்றும் தடுப்பூசி சேதம் பற்றி பாதிக்கப்பட்டவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது. இந்த மூன்று வருட காலத்தில் புதிதாக ஏதாவது நோய்க்குறிகள் எனக்கு ஏற்பட்டுள்ளதா அதற்கான காரணம் கொரோனாவா அல்லது தடுப்பூசியா..?
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகள் தொடங்கியதில் இருந்து, தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்கள் மீண்டும் மீண்டும் புகார் அளித்துள்ளனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தடுப்பூசியின் எதிர்வினை என்பது மிகவும் இலகுவானவை மற்றும் குறுகிய காலம் கொண்டது. அது நீண்டகால பாதிப்பாக தொடர்வதற்கு வாய்ப்புகள் இல்லை.
இருப்பினும் தடுப்பூசி நீண்ட காலத்திற்கு தங்களை பாதிக்கும் என்று சந்தேகிக்கும் பாதிக்கப்பட்டவர்களும் புகார் பட்டியலில் உள்ளனர்.
தடுப்பூசி எதிர்வினைகள் மற்றும் தடுப்பூசி பக்க விளைவுகளுக்கு இடையில் என்ன வித்தியாசம் இருக்கின்றது ..? உண்மையில் தடுப்பூசி சேதத்திற்கு யார் பணம் செலுத்துகிறார்கள்..? இதற்கான பதிலை பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தேடத்தொடங்கியுளனர்,
தடுப்பூசி சேதம் என்றால் என்ன..? ; தொற்றுநோய் பாதுகாப்புச் சட்டத்தின்படி, தடுப்பூசி சேதம் என்பது தடுப்பூசியால் ஏற்படும் உடல்நலக் கேடுகளின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதார விளைவு ஆகும், இது தடுப்பூசி எதிர்வினையின் வழக்கமான அளவைத் தாண்டியது என எடுக்கப்படுகின்றது.
பொதுவான தடிப்புகள், காய்ச்சல் அல்லது தலைவலி போன்ற சாதாரண பக்க விளைவுகள் இதில் சேர்க்கப்படவில்லை. உண்மையான சேதம் ஏற்பட்டதா என்பதை தடுப்பூசி போட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு தீர்மானிக்க முடியும்.
உண்மையான தடுப்பூசி சேதத்திற்கு, பால் எர்லிச் இன்ஸ்டிடியூட்டின் கூற்றுப்படி, ஓய்வூதிய அலுவலகம் மற்றும் நிபுணரால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு உடல் எதிர்வினையும் தடுப்பூசி சேதமாகும் என்று கணக்கெடுக்கப்படுகின்றது. இது அறியப்பட்ட பக்க விளைவுகளாக இருக்க வேண்டியதில்லை. [தடுப்பூசிகள் மற்றும் பயோமெடிக்கல் மருந்துகளுக்கான ஜெர்மன் ஃபெடரல் நிறுவனம்].
எந்தவொரு எதிர்வினையும் அல்லது நோயும் சாத்தியமான தடுப்பூசி தீங்கு என தெரிவிக்கப்படலாம். அதாவது இதுவரை காலமும் அறியப்படாத புதிய நோய்க்குறியாகக்கூட இருக்கலாம். ஓய்வூதிய அலுவலகத்தினால் இதற்கான இழப்பீடு தொகை நிர்மாணிக்கப்படுகின்றது.
தடுப்பூசி செலுத்திய எவருக்கும், தடுப்பூசி எதிர்வினை தன்னை வெளிப்படுத்தலாம் மேற்கோளாக: தலைவலி, குளிர், லேசான காய்ச்சல் அல்லது தசை வலி மற்றும் சில மணிநேரங்கள் முதல் சில நாட்கள் வரை நீடிக்கும். உடம்பு ஒரு மெல்லிய குளிர்காய்ச்சலுக்கு போவது போல் அறிகுறியை காட்டலாம்.
உடலில் வைரஸ் துகள்கள் உட்செலுத்தப்பட்டு, இப்போது நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குவதால், அத்தகைய எதிர்வினை எதிர்பார்க்கப்படுகின்றது. கொரோனா தடுப்பூசியின் நோக்கம் இதுதான்.
தடுப்பூசியின் சேதம், அவை இதய தசை வீக்கம் மற்றும் சைனஸ் வெயின் அல்லது பெருமூளை இரத்த உறைவு ஆகியவை அடங்கும் . அவை மாடர்னா, அஸ்ட்ராசெனெகா மற்றும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. கவனிக்கப்பட்ட மயோர்கார்டிடிஸ் ஒரு லேசான போக்கைக் கொண்டிருந்தது மற்றும் முழுமையாக குணமாகும் என்றும் சொல்லப்படுகின்றது.
இருப்பினும், ஜெர்மனியில் 40 க்கும் மேற்பட்டோர் பெருமூளை நரம்பு த்ரோம்போசிஸால் இறந்துள்ளனர். தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் மிகவும் அரிதானவை, இருப்பினும் தடுப்பூசிகளின் பக்க விளைவுகளை முழுமையாக நிராகரிக்க முடியாது.
தடுப்பூசியின் செயல்பாடு: தடுப்பூசி செலுத்துவது -> நோய் எதிர்ப்பு சக்தியின் வெளிப்பாடு -> நினைவக செல்களில் பதிவாக்கம் [முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது] மீண்டும் இந்த குற்றவாளி வரும்போது விரைவாக அடையாளம் காணப்படுகின்றது இதுதான் தடுப்பூசியின் நோக்கம் .
தடுப்பூசி செலுத்தாதவர்கள்: நோய்க்கிருமிகள் வரும்போது நோய் எதிர்ப்பு சக்தியால் அடையாளப்படுத்த நீண்ட காலம் எடுக்கப்படுவதால் இந்த இடைப்பட்ட காலத்தில் நோயாளி ஆபத்தான கட்டத்துக்கு தள்ளப்படுகிறார். இது தடுப்பூசி செலுத்தாதவர்களின் பரிதாபங்கள்.
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்
http://mahesva.blogspot.com/?view=magazine
Microsoft Edge என்ற செயலியை தரவிறக்கம் செய்து. இந்த கட்டுரைகளை சுமார் 60 மொழிகளுக்கு மேல் மொழிபெயர்ப்பு மற்றும் கணினி வாசிப்பு செய்யமுடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக