2023 ஆண்டின் புதிய ஓமிக்ரான் துணை மாறுபாடு XBB.1.5 அமெரிக்காவில் வேகமாக பரவி வருகின்றது
அமெரிக்காவில், புதிய கொரோனா நோய்த்தொற்றுகளின் கணிசமான விகிதத்தை இப்போது ஓமிக்ரான் துணை வகை XBB.1.5 இல் காணலாம், இது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஓமிக்ரான் மாறுபாடு XBB.1.5 இதுவரை, ஓமிக்ரான் பரம்பரைக்குள் 650 க்கும் மேற்பட்ட துணை வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மரபணு பகுப்பாய்வுகளின்படி, XBB மாறுபாடு இரண்டு புழக்கத்தில் உள்ள BA.2 துணை வகைகளின் மறுசீரமைப்பு மூலம் எழுந்த புதிய வைரஸ் வகை.
இந்த மாறுபாடு ஸ்பைக் புரதத்தில் [முனைப்புரதம்-S] உள்ள F486P மாற்றத்தால் வகைப்படுத்தப்படுகின்றது.
இது மனித உயிரணுக்களுடன் இணைக்கப் பயன்படுத்தும் வைரஸின் பகுதியாகும். இந்த பிறழ்வு மனித உயிரணுக்களில் ACE2 ஏற்பியுடன் எளிதாக பிணைப்பை ஏற்படுத்தும். இதன் நிமித்தம் அது பரவும் வேகத்தை அதிகரித்துள்ளது.
இந்த வகை வைரஸ் பிறழ்வுகள் ஐரோப்பாவிலும் வேகமாக பரவி வருகின்றது. முந்தைய வகைகளை விட இது ஆபத்தானதாகத் தெரியவில்லை இந்த மாறுபாட்டின் அறிகுறிகளைப் பார்த்தால், இது லேசானது.
இருப்பினும் ஏற்கனவே நோய்கள் உள்ளவர்கள், வயதானவர்கள் குழந்தைகள் அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகள் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
சீனாவில் கண்டறியப்பட்ட நோயாளிகள் இருமல், வாசனை உணர்வில் மாற்றங்கள், காது கேளாமை [காதடைப்பு], மார்பு வலி மற்றும் நடுக்கம் போன்றவற்றை அனுபவிக்கின்றனர்.
பயம் கொள்ளத் தேவையில்லை இந்த நோய்க்குறிகள் எல்லாம் தற்காலிகமானவை மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப கூடியவை. கொரோனா வைரஸ்களை ஒழிக்க முடியாது அதற்காக வாழ்க்கை பூராகவும் முடங்கிக் கிடக்க வேண்டுமா..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக