புதன், 11 ஜனவரி, 2023

Stop abusing drugs

மருந்துகளை தவறாக பயன்படுத்துவதை நிறுத்துங்கள் அது கொரோனாவுக்கான ஆன்டிவைரல் மருந்தாக இருந்தாலும் சரி மலேரியா தொற்றாக இருந்தாலும் அல்லது நுண்ணுயிரிகள், பாக்டீரியாக்கள் தொற்றுகளுக்கான ஆண்டிபயாட்டிக் மருந்தாக  இருந்தாலும் சரி,  

வைரஸ் தொற்றுகளுக்கு தவறாக ஆண்டிபயாட்டிக் மருந்துகளை எடுப்பது மற்றும்  மருத்துவ ஆய்வுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லாத  மூலிகை மருந்துகள் மற்றும் மலேரியா மருந்தை  கோவிட்-19 க்கு  பரிசோதிக்கும் ஆய்வுகளை நிறுத்துமாறு விஞ்ஞானிகள் பரிந்துரைக்கின்றனர். கலாச்சார ரீதியாக பின்பற்றி வந்த கைமருத்துவம் கொரோனாவுக்கு எடுபடாமல் வழக்கற்றுப் போய்விட்டது.

தவறாக பயன்படுத்தும் மருந்துகள் புது பிறழ்வு நோய்க்கிருமிகளை தோற்றுவிக்கின்றன இதன் நிமித்தம் தற்சமயம் கைகளில் இருக்கும் மருந்துகளுக்கு கட்டுப்படாத புதுப்புது நோய்களின் உருவாக்கத்திற்கு காரணியாக அமைகின்றது.

உங்களுக்கு எந்த நோயாக இருந்தாலும் முறையாக  மருத்துவம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய தீயாக இருந்தாலும் அதை முறையாக அணைக்க வேண்டும். ஏதாவது மிச்சம் வைத்தால் அது ஏதோ ஒரு காலத்தில் கட்டுக்குள் அடங்காத தீயாக மாறும்.

கை மருத்துவம் பார்க்கும் நாடுகளான சீனா ஆப்பிரிக்கா பிரேசில் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து தான் புது வகை கொரோனா வைரஸ்கள் தோன்றியது. அதற்கு அவர்கள் பார்த்த கை மருத்துவம் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

இன்று வரைக்கும் கொரோனாவின் ஆரம்ப புள்ளியாக அறியப்படும் வௌவால்களுக்கு அடுத்து பாங்கோலின் என்ற பாலூட்டி தான் அறியப்படுகின்றது. பாங்கோலின் / பைன் கூம்பு விலங்குகளின் செதில்களை சீன மருத்துவத்தில் பயன்படுத்தி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேரியா நோய்க்கிருமி பிளாஸ்மோடியம் : மலேரியாவைத் தூண்டும் அனோபிலிஸ் கொசு, பிளாஸ்மோடியம் இனத்தைச் சேர்ந்த ஒட்டுண்ணிகளை பரப்புகின்றன இவைகள் இரத்த சிவப்பணுக்களை சிதைக்கின்றன.

ஆர்ட்டெமிசினின் மலேரியாவுக்கு எதிரான மிக முக்கியமான மருந்து. ஆனால் ஆராய்ச்சியாளர்களும் உலக சுகாதார நிறுவனமும் எச்சரிக்கின்றன. அதற்கான காரணம் இந்த மருந்துகள் ஏதோ ஒரு காலகட்டத்தில் தங்களுடைய செயல் திறனை இழந்து விடுகின்றன.

மேலும் மேலும் மலேரியா ஒட்டுண்ணிகள் எதிர்ப்புத் திறன் கொண்டவையாக மாறி வருகின்றன. இதன் விளைவுகள் மரணமாக இருக்கலாம்.

பல ஆண்டுகளாக, ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் சவாலாக இருக்கும் புதிதாக பிறழ்ந்த நோய்க்கிருமிகளைக் கவனித்து வருகின்றனர். மலேரியாவுக்கு எதிரான மருந்து சிகிச்சைகளில் மிக முக்கியமான செயலில் உள்ள மூலப்பொருளான ஆர்ட்டெமிசினினை எதிர்க்கும் பிறழ்வுகளைக் கொண்ட ஒட்டுண்ணிகள் குறிப்பாக கிழக்கு ஆப்பிரிக்காவில் பரவி வருகின்றன.

இந்த பூமியில் வாழ்கின்ற இன்றைய உயிரினங்கள் அத்துனையும் ஏதோ ஒரு வகையில் காலநிலை உணவு மாற்றங்களை எதிர்த்து தங்களை தக்க வைத்து வாழக்கூடிய உயிரினங்கள்.அது கருப்பு அல்லது வெள்ளைத்தோலாக இருந்தாலும் சரி அவை கால நிலையை தக்க வைத்துக் கொள்ள உருவானவை.

இதற்கு எந்த விதத்திலும் தொற்று நோய்களும் சளைத்தவை அல்ல அவைகளும் தங்களை தக்க வைத்துக் கொள்ள மாறிக்கொண்டே வந்திருக்கின்றன ஒரு காலத்தில் கை மருத்துவத்துக்கு, இஞ்சிக்கும் மிளகுக்கும் கறி மஞ்சளுக்கு கட்டுப்பட்டவைகள் இன்று அதை எதிர்த்து வாழ பழகி விட்டன.

ஆண்டிபயாட்டி மருந்துகளுக்கு கூட எதிர்த்து வாழ பழகி விட்டன. இன்று ஆண்டிபயாட்டி எதிர்ப்பு பாக்டீரியாக்கள் பெருகி வருகின்றன. இவைகளை எந்த மருந்தை கொண்டும் குணமாக்க முடியாது.

1970, 80 களில், ஆப்பிரிக்காவில் அதிகமான நோய்க்கிருமிகள் அந்த நேரத்தில் பொதுவாக இருந்த குளோரோகுயின் தயாரிப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. நீண்ட காலமாக, மலேரியாவுக்கு எதிரான போராட்டத்தில் அவை மிக முக்கியமான ஆயுதமாக கருதப்பட்டன.மருந்துகளாகவும், தடுப்புக்காகவும் மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

இருப்பினும் நோய்க்கிருமிகள், வைரஸ்கள் ஆன்டிவைரல் செயல்பாடு குளோரோகுயினுடன் பழகியபோது, அவை ஒப்பந்தக்காரர்களாக மாறுகின்றன

இதன் விளைவுகள் மிகவும் ஆபத்தானவை, உலகளவில் இறப்புகள் ஆண்டுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமானவையாக கணக்கிடப்பட்டிருக்கிறது.

சாராம்சம்: ஒரு காலத்தில் மூலிகை மருத்துவத்திற்கு கட்டுப்பட்ட நோய்க்கிருமிகள் இன்று அதை தூக்கிப்போட்டு மிதிக்கும் அளவிற்கு வீரியம் உள்ளவையாக புதுப்பிறவி எடுத்திருக்கின்றன. இவைகளை எதிர்த்துப்போராட புது மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும். 

வாழத்தகுதியுள்ள அடுத்த தலைமுறையை உருவாக்க  சகலத்தையும் புதிப்பித்து கொண்டே இருக்கவேண்டும்.  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக